மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45

    பகுதி I

    9 x 5 = 45
  1. ஒரு சதுரத்தின் நான்கு மூலைகளில் +q, +2q, +q மற்றும் -q ஆகிய மின்னூட்டங்கள் வைக்கப்பட்டு உள்ளன. q = 5/3 x 10-9C எனில் 10 cm பக்கம் கொண்ட அச்சதுரத்தின் மூலைவிட்டங்கள் வெட்டிக் கொள்ளும். புள்ளியில் மின்புலத்தைக் கணக்கிடுக

  2. சீரான மின்புலத்தில் ஏற்படும் மின்பயத்தை விவரி

  3. மின்னழுத்தமானியைப் பயன்படுத்தி மின்கலத்தின் அகமின்தடையைக் காணும் முறையை விவரி.

  4. மீட்டர் சமனச்சுற்றில் இடது பக்க இடைவெளியில் 10ᘯ மின்தடை உள்ள போது சமனீட்டு நீளம் 51.8 cm. ஆக உள்ளது 108 cm நீளமும் 0.2mm ஆரமும் உடைய கம்பியின் மின்தடையையும் தன்மின் தடை எண்ணையும் கணக்கிடுக.

  5. சீரான காந்தபுலத்தில் உள்ள சட்ட காந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசையை விளக்குக.

  6. காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசைக்கான கோவையைப் பெறுக.

  7. மின்தேக்கி மட்டும் உள்ள AC சுற்றில் மின்னோட்டத்திற்கான கோவையைப் பெறுக. மின்தேக்கியின் மின்மறுப்புக்கான கோவையை பெறுக.

  8. 1 m நீளமுள்ள உலோகத்தண்டு கோண அதிர்வெண் 400 rad s-1 உடன் அச்சைப்பற்றி ஒரு முனை சுழல்கிறது. மறுமுனை வட்ட வடிவ உலோக வளையத்துடன் இணைந்துள்ளது. சீரான மின்புலம் 0.5T கொடுக்கப்பட்டால் தண்டின் மையத்திற்கு வளையத்திற்குமிடையே மின்னியக்கு விசையை காண்க.

  9. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு இயற்பியல் மாதிரி 5 மதிப்பெண் படைப்பு வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020 - 12th Standard Physics Tamil Medium Sample 5 Mark Creative Questions (New Syllabus 2020)

Write your Comment