இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

  2. வரவுப் பக்கத்தின் மொத்தம் பற்று பக்கத்தின் மொத்தத்தை விட அதிகமாக இருந்தால் அது எவ்வாறு அழைக்கப்படும்?

    (a)

    வங்கி மேல்வரைப்பற்று 

    (b)

    மிகை எடுப்பு 

    (c)

    குறை எடுப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  3. ஒரு அமைப்பின் நிதிநிலையை வெளிப்படுத்தும் அறிக்கை எது?

    (a)

    நிலை அறிக்கை 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதியறிக்கை 

  4. இலாபநோக்கற்ற அமைப்புகள் செய்யும் முதலீடுகளிலிருந்து பெறப்படும் வட்டி ஒரு _______ ஆகும்.

    (a)

    செலவின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    வருவாயின செலுத்தல்கள் 

    (d)

    முதலின வரவு 

  5. செலவுகள், நட்டங்கள் மற்றும் சொத்துகள் _____ இருப்பைக் கொண்டிருக்கும்.

    (a)

    பற்று 

    (b)

    வரவு 

    (c)

    இரண்டும் 

    (d)

    இரண்டுமில்லை 

  6. 1 x 2 = 2
  7. கூற்று (A): வருவாய் மற்றும் செலவினக்கணக்கு ஒரு ஆள்சார் கணக்கு ஆகும்.
    காரணம் (R): பயன்படுத்தாமல் இருப்பில் உள்ள விளையாட்டுப் பொருள்கள், இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கம் இருப்பாகக் காட்டப்படுகிறது.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  8. 1 x 2 = 2
  9. அ) முதலீடு மீதான வட்டி 
    ஆ) சம்பளம் 
    இ) அஞ்சல் செலவுகள் 
    ஈ) காப்பீடு 

  10. 1 x 2 = 2
  11. 1. செலவுகள், நட்டங்கள் மற்றும் சொத்துகள் பற்றிருப்பைக்  கொண்டிருக்கும்.
    2. ஆதாயம், வருமானம் மற்றும் பொறுப்புகள் வரவிருப்பைக் கொண்டிருக்கும்.
    3) பழைய செய்த்தித்தாள்கள் விற்பது ஒரு வருவாயின செலவுகள் ஆகும்.
    அ) 1 மட்டும் சரி  
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மற்றும் 2 சரி 
    ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  12. 3 x 2 = 6
  13. பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

    சந்தா பெற்றது  ரூ
    2015 - 16 - க்காக 7,500
    2016 –17 - க்காக 60,00
    2017 – 18 - க்காக 1,500
      69,000

    2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000

  14. சேலம் விளையாட்டு மன்றத்தின் 2019, ஏப்ரல் 1 அன்றைய முதல் நிதியைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ 
    விளையாட்டு உபகரணங்கள் 30,000 பரிசு நிதி 10,000
    கணிப்பொறி 25,000 பரிசுநிதி முதலீடுகள் 10,000
    2018-2019 ஆம் ஆண்டில் சந்தா பெறவேண்டியது 5,000 கைரொக்கம்  7,000
    2019-20 ஆம் ஆண்டிற்காக முன்கூட்டிப் பெற்ற சந்தா 8,000 வங்கி ரொக்கம்  21,000
  15. மதிப்பூதியம் என்றால் என்ன?

  16. 1 x 3 = 3
  17. கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்

    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   அறைகலன் வாங்கியது 10,000
    கைரொக்கம் 11,000 வாடகை  2,800
    பங்காதாயம் பெற்றது 27,600 செயலர் மதிப்பூதியம் 15,000
    பழைய செய்தித்தாள் விற்றது 3,000 தபால் செலவுகள்  1,700
    உறுப்பினர் சந்தா 31,000 பொதுச் செலவுகள் 4,350
    பாதுகாப்பு பெட்டக வாடகை 8,000 அச்சு மற்றும் எழுதுபொருள்கள்  45,000
    முதலீடுகள் மீதான வட்டி 1,250 தணிக்கைக் கட்டணம் 5,000
    அறைகலன் விற்றது 5,000 இறுதி இருப்பு  
    (ஏட்டு மதிப்பு ரூ4,400)   கைரொக்கம்  3,000
      86,850   86,850
  18. 3 x 5 = 15
  19. சேலம் பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள்  ரூ
    இருப்பு கீ/கொ     அறைகலன் 15,000
    கைரொக்கம்   9,000 எழுதுபொருள்கள் 2,400
    சந்தா      முதலீடு 12,500
    2018 – 2019 12,500   அஞ்சல் செலவுகள் 1,000
    2019 – 2020 400 12,900 இருப்பு கீ/இ  
    பொழுதுபோக்குக மூலமாக பெற்ற வருமானம்   12,000 கைரொக்கம் 3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    (i)  மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ. 30 செலுத்துகின்றனர்.
    (ii) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500.
    (iii) 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ  9,300 
    2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

  20. விருதுநகர் கைப்பந்து சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள்  ரூ ரூ செலுத்தல்கள் ரூ ரூ 
    இருப்பு கீ/கொ      விளையாட்டுப் போட்டிச் செலவுகள்   25,000
    கைரொக்கம்   5,000      
    சந்தா     விளையாட்டு அரங்க பராமரிப்பு   17,000
    2017 10,000   செயலாளருக்கான மதிப்பூதியம்   18,000
    2018 55,000   பந்து மற்றும் மட்டைகள் வாங்கியது   22,000
    2019 5,000 70,000      
    நன்கொடைகள்   40,000 புல் விதைகள் வாங்கியது   2,000
    விளையாட்டுப் போட்டி     நிலைவைப்பு   58,000
    நிதி வரவுகள்   30,000 பல்வகைச் செலவுகள்   3,000
    நிலைவைப்பு மீதான வட்டி   8,000 இருப்பு கீ/இ    
    இதர வரவுகள்   5,000 கைரொக்கம் 7,000  
          வங்கி ரொக்கம் 6,000 13,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) 1.1.2018 அன்று சங்கத்தில் இருந்த முதலீடுகள் ரூ.10,000; வளாகம் மற்றும் மைதானங்கள் ரூ.40,000 ; பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ.5,000.
    (ii) 2017 ஆம் ஆண்டிற்கான சந்தா இன்னும் பெறவேண்டியது ரூ.5,000
    (iii) 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ.6,000.
    2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்ககையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்

  21. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
    இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
    ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
    வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
    சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
    உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
    விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
    வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Accounts of Not-For-Profit Organisation Sample Question Paper)

Write your Comment