விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 45
    11 x 1 = 11
  1. பாலூட்டியின் முட்டை ______.

    (a)

    மீசோலெசிதல் ஓடற்றது 

    (b)

    மைக்ரோலெசிதல், ஓடற்றது  

    (c)

    ஏலெசிதல், ஓடற்றது 

    (d)

    ஏலெசிதல், ஓடுடையது  

  2. ஆண்ட்ரோஜன் இணைவுப்புரதத்தை உற்பத்தி செய்பவை _____.

    (a)

    லீடிக் செல்கள்

    (b)

    ஹைபோதலாமஸ்

    (c)

    செர்டோலி செல்கள்

    (d)

    பிட்யூட்டரி சுரப்பி

  3. கூற்று மற்றும் காரண வினாக்கள்:
    கீழ்க்கண்ட வினாக்களில் இரண்டு கூற்றுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று கூற்று (கூ) ஆகும். மற்றொன்று காரணம் (கா). சரியான விடையை கீழ்க்ககாணும் வகையில் குறிப்பிடுக.
    A - அண்டம் விடுபடுதல் என்பது கிராஃபியன் நுண்பையிலிருந்து அண்டம் வெளியேறும் நிகழ்ச்சியாகும்.
    R - இது மாதவிடாய் சுழற்சியின் நுண்பை (ஃபாலிகுலார்) நிலையில் நடைபெறுகிறது.

    (a)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் ஆகும்.

    (b)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் சரியானவை ஆனால் ‘கா’ என்பது ‘கூ’ வின் சரியான விளக்கம் இல்லை.

    (c)

    ‘கூ’ சரியானது ஆனால் ‘கா’ தவறானது.

    (d)

    ‘கூ’ மற்றும் ‘கா’ இரண்டும் தவறானவை. 

  4. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில், மனிதனில் நிகழும் முக்கிய இனப்பெருக்க நிகழ்வுகளில் சரியான வரிசையை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    விந்து உள்ளேற்றம், கருபதிதல், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

    (b)

    கருபதிதல், கருவுறுதல், விந்து உள்ளேற்றம், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

    (c)

    கருபதிதல், விந்து உள்ளேற்றம், கருவுறுதல், மகப்பேறு, தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம்

    (d)

    விந்து உள்ளேற்றம், கருவுறுதல், கருபதிதல், தாய்சேய் இணைப்புத்திசு உருவாக்கம், மகப்பேறு

  5. ஆண்கள் தங்கள் வாழ்நாளில் உற்பத்தி செய்யும் விந்தணுக்களின் எண்ணிக்கை 

    (a)

    ஒரு மில்லியன் 

    (b)

    500 மில்லியன் 

    (c)

    300 மில்லியன் 

    (d)

    400 மில்லியன் 

  6. கூற்று : சில சமயம், வயிறு வலி மகப்பேறு, அறுவை வலி மகப்பேறு நடைபெறும்.
    காரணம் : கருப்பையில் குழந்தையின் நிலை, தாய்சேய் இணைப்புத் திசுவின் தன்மை போன்றவற்றால் இயல்பான குழந்தை பிறப்பு நடைபெறாது.

    (a)

    கூற்றும், காரணமும் சரி.

    (b)

    இரண்டும் தவறு 

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு.

    (d)

    கூற்றுதவறு, காரணம் சரி 

  7. சுரப்பு நிலை என்பது _______ நிலையைக் குறிக்கும்.

    (a)

    லூட்டியல் 

    (b)

    அண்ட செல் விடுபடுதல் 

    (c)

    மாதவிடாய் 

    (d)

    நுண்பை 

  8. குழந்தையின் _______ மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது 

    (a)

    5

    (b)

    12

    (c)

    6

    (d)

    3

  9. விந்து செல்லாக்கம் முழுவதுமாக நடக்க ________ நாட்களாகிறது.

    (a)

    30

    (b)

    12

    (c)

    46

    (d)

    64

  10. பெரிய வெஸ்டிபுலார் சுரப்பிகள் என்பது________ சுரப்பிகளின் மறுபெயர்.

    (a)

    பர்த்தோலின் 

    (b)

    ஸ்கீன்ஸ் 

    (c)

    ஏரியோலோ 

    (d)

    பால் 

  11. சரியான இணையைக் கண்டறி:

    (a)

    பிராக்ஸ்டர் ஹிக்ஸ் சுருக்கங்கள் - பொய்யான பிரசவ வலி  

    (b)

    பெர்குஸன் அனிச்சைச்  செயல் - குழந்தை பிறப்பிற்குப் பின் 

    (c)

    நிர்பந்த அனிச்சைச் செயல் - புரோஜெஸ்டிரான் 

    (d)

    நியூரோ ஹியுமோரல் அனிச்சைச் செயல் - கருப்பைச் சுருக்கம் 

  12. 5 x 2 = 10
  13. விரிவாக்கம் தருக.
    அ) FSH
    ஆ) LH
    இ) hCG
    ஈ) hPL

  14. தாய்சேய் இணைப்புத்திசு ஒரு நாளமில்லாச் சுரப்பித் திசு – நியாயப்படுத்து

  15. கரு பதிதல் என்றால் என்ன? 

  16. கருக்கோளம் (Blastocyst) என்றால் என்ன?

  17. மனித செல்களில் மிகச்சிறியவை, மிகப்பெரியவை எவை?

  18. 3 x 3 = 9
  19. இனச்செல்உருவாக்கம் – வரையறு?

  20. மகப்பேறு கருப்பைச் சுருக்கங்களில், ஆக்சிடோசினின் பங்கு என்ன?

  21. கோரியானிக் வில்லை பற்றிக் கூறுக.(Chorionic villi )

  22. 3 x 5 = 15
  23. கீழேயுள்ள படத்தில் பெண்ணின் அண்டகத்தில் ஏற்படும் தொடர் நிகழ்வுகள் தரப்பட்டுள்ளன.

    அ) அண்டசெல் விடுபடும் படத்தை அடையாளம் கண்டு, அண்டசெல்உருவாக்கத்தில் அது எந்த நிலையைக் குறிக்கிறது என்பதையும் கண்டறிக.
    ஆ) மேற்கண்ட நிகழ்வுகளுக்குக் காரணமான அண்டக மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.
    இ) அதே நேரத்தில், எதிர் பார்க்கப்படும் கருப்பை மாற்றங்களை விளக்குக.
    ஈ) C மற்றும் H நிலைகளுக்கிடையேயுள்ள வேறுபாட்டை எழுதுக.

  24. கரு சூலப் படலங்களை விளக்குக.

  25. விந்து செல் உருவாக்கத்தில் ஹார்மோன்களில் பங்கு எது?

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - விலங்கியல் - மனித இனப்பெருக்கம் மாதிரி வினாத்தாள் (12th Biology - Zoology - Human Reproduction Model Question Paper)

Write your Comment