பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.

    (a)

    கார்பன் ஒடுக்கம் 

    (b)

    வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)

    (c)

    மின்வேதி செயல்முறை 

    (d)

    அமிலக் கழுவுதல் 

  2. உலோக கார்பனைகளில், உலோகங்களின் ஆக்சிஜனேற்ற நிலை ________.

    (a)

    0

    (b)

    +1

    (c)

    +2

    (d)

    +3

  3. பின்வருவனவற்றுள், NH3 எதில் பயன்படுத்தப்படவில்லை?

    (a)

    நெஸ்லர் காரணி

    (b)

    IVம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (c)

    IIIம் தொகுதி காரமூலங்களை கண்டறியும் பகுப்பாய்வு

    (d)

    டாலன்ஸ் வினைப்பொருள்

  4. இலேசான இடைநிலைத் தனிமம் _______.

    (a)

    Fe

    (b)

    Sc

    (c)

    Os

    (d)

    மேற்கண்ட ஏதுமில்லை

  5. [Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

    (a)

    3

    (b)

    4

    (c)

    0

    (d)

    15

  6. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________

    (a)

    4 மற்றும் 2

    (b)

    6 மற்றும் 6

    (c)

    8 மற்றும் 4

    (d)

    4 மற்றும் 8

  7. வினைபடு பொருளின் புறப்பரப்பளவு அதிகரிக்கும் போது மூலக்கூறுகளுக்கிடையே நடைபெறும் மோதல்களின் எண்ணிக்கை _____________

    (a)

    அதிகரிக்கிறது 

    (b)

    குறைகிறது 

    (c)

    மாற்றமில்லை 

    (d)

    பூஜ்யமாகிறது 

  8. அறைவெப்ப நிலையில் MY மற்றும் NY3, ஆகிய கரையாத உப்புகள் \(6.2\times10^{-13}\) என்ற சமமான, Ksp மதிப்புகளை கொண்டுள்ளன. MY மற்றும் NY3 ஆகியவற்றைப் பொறுத்தவரையில் எந்த கூற்று உண்மையானது?

    (a)

    MY மற்றும் NY3 ஆகிய உப்புகள் தூய நீரை விட 0.5M KY கரைசலில் அதிகம் கரைகின்றன

    (b)

    MY மற்றும் NY3 தொங்கலில் KY எனும் உப்பை சேர்ப்பதினால் அவற்றின் கரைதிறன்களில் எவ்வித விளைவும் உண்டாவதில்லை

    (c)

    நீரில் MY மற்றும் NY3 இரண்டின்  மோலார் கரைதிறன் மதிப்புகளும் சமம்

    (d)

    நீரில் MY யின் மோலார் கரை திறன், NY3 யின்  மோலார் கரை திறனை விட குறைவு

  9. இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________

    (a)

    இரும்பை விட ஜிங்க் லேசானது

    (b)

    இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.

    (c)

    இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

    (d)

    இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

  10. பின்வருவனவற்றை பொருத்துக 

    V2O5 உயர் அடர்த்தி
    பாலிஎத்திலீன்
    சீக்லர் - நட்டா PAN
    பெராக்சைடு NH3
    தூளாக்கப்பட்ட Fe H2SO4
    (a)
    A B C D
    (iv) (i) (ii) (iii)
    (b)
    A B C D
    (i) (ii) (iv) (iii)
    (c)
    A B C D
    (ii) (iii) (iv) (i)
    (d)
    A B C D
    (iii) (iv) (ii) (i)
  11. ஈத்தீன்  \(\overset { HOCL }{ \rightarrow } \)  A \(\overset {x }{ \rightarrow } \) ஈத்தன்  -1 , 2 - டை ஆல் என்ற தொடர்ச்சியான  வினையில் A  மற்றும் X என்பன முறையே ___________

    (a)

    குளோரா ஈத்தேன் மற்றும் NaOH

    (b)

    எத்தனால் மற்றும் H2SO4 

    (c)

    2 குளோரா ஈத்தேன் 1 - ஆல் மற்றும் NaHCO3

    (d)

    எத்தனால் மற்றும் H2O

  12. பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி ____________

    (a)

    கிரிக்னார்டு வினைக்காரணி

    (b)

    Sn / HCl

    (c)

    அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்

    (d)

    ஹைட்ரோசயனிக் அமிலம்

  13. கூற்று : KOH மற்றும் புரோமினுடன் அசிட்டமைடு வினைப்பட்டு அசிட்டிக் அமிலத்தை கொடுக்கிறது.
    காரணம் : அசிட்டமைடு நீராற்பகுத்தலில் புரோமின் வினையூக்கியாக செயல்படுகிறது.

    (a)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும் காரணம், கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (d)

    கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.

  14. நீர்த்த கரைசல்களில் அமினோ அமிலங்கள் பெரும்பாலும் ________ அமைப்பில் உள்ளன .

    (a)

    NH2-CH(R)-COOH

    (b)

    NH2-CH(R)-COO-

    (c)

    H3N+-CH(R)-COOH

    (d)

    H3N+-CH(R)-COO-

  15. டெட்டால் என்பது எதன் கலவை ?

    (a)

    குளோரோசைலினால் மற்றும் பைதயோனால்

    (b)

    குளோரோசைலினால் மற்றும்  α-டெர்பினால்

    (c)

    பீனால் மற்றும் அயோடின்

    (d)

    டெர்பினால் மற்றும் பைதயோனால்

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  18. அதிகளவு குளோரினுடன் அம்மோனியாவின் வினை யாது?

  19. லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டினாய்டுகள் தனிம வரிசை அட்டவணையில் பெற்றுள்ள இடத்தினை நிறுவுக.

  20. அணைவு எண் வரையறு.

  21. மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?

  22. பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
    அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது. 
    ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை.

  23. நேர்மின்முனை மற்றும் எதிர்மின்முனைகளை வரையறு.

  24. ஒத்த தொகுதிகளைக் கொண்டுள்ள ஈரிணையை  ஆல்கஹால்களைத் தயாரிக்க ஒரு தகுந்த வினை பொருளைத் தருக.

  25. ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக ?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  28. பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக

  29. புகைப்படத் தொழிலில் அணைவுச் சேர்மத்தின் பயன் யாது?

  30. சதுர நெருங்கிப் பொதிந்த இரு பரிமாண அடுக்கில் ஒரு மூலக்கூறின் அணைவு எண் என்ன?

  31. pH வரையறு.

  32. நொதிகள்  என்றால் என்ன? நொதிவினைவேக மாற்றத்தின் வினைவழிமுறை பற்றி குறிப்பு வரைக.

  33. எத்தனால் மற்றும் 2 – மெத்தில் பென்டன் -2- ஆல் ஆகியனவற்றிலிருந்து 2 – ஈத்தாக்ஸி – 2 – மெத்தில் பென்டேனைத் தயாரிக்கும் வில்லியம்களின் தொகுப்பு முறைக்கான வேதிச் சமன்பாட்டினைத் தருக.

  34. பின்வருவனவற்றை வரிசைபடுத்துக.
    i. நீரில் கரைதிறனின் ஏறுவரிசை, C6H5NH2, (C2H5)2 NH, C2H5NH2
    ii. கார வலிமையின் ஏறுவரிசை
    a) அனிலீன், p- டொலுடின் மற்றும் p – நைட்ரோ அனிலீன்
    b) C6H5NH2, C6H5NHCH3C6H5NH2p-Cl-C6H4-NH2
    iii. வாயுநிலைமைகளில் காரவலிமையின் இறங்கு வரிசை
    (C2H5)NH2, (C2H5)NH(C2H5)3N மற்றும் NH3
    iv. கொதிநிலையின் ஏறுவரிசை  C6H5OH, (CH3)2NH, C2H5NH2
    v. pKb மதிப்புகளின் இறங்கு வரிசை C2H5NH2, C6H5NHCH3,(C2H5)2NH மற்றும் CHNH2
    vi. கார வலிமையின் ஏறுவரிசை C6H5NH2, C6H5N(CH3)2(C2H5)NH மற்றும் CHNH2
    vii. கார வலிமையின் இறங்கு வரிசை 

  35. ஆஸ்பிரின் மூலக்கூறின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

  36. பகுதி - IV 

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. α-சுருள் உருவாதல் பற்றி குறிப்பு வரைக

    2. இரப்பரின் வல்கையாக்கல் பற்றி குறிப்பு வரைக .

    1. i) இடைநிலைத் தனிமங்கள் காந்தத் தன்மையுடையவை. ஏன்?
      ii) காந்த திருப்புத்திறனுக்கும், தனித்த எலக்ட்ரானின் எண்ணிக்கைக்கு இடையே உள்ள தொடர்பு யாது?

    2. பின்வரும் வினையில் வினைபொருள் X மற்றும் Y யைக் கண்டறிக.

    1. படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.

    2. பின்வரும்வினையில் Cl- ஐ CN கொண்டு  பதிலீடு செய்தல்.

    1. ஜியோலைட்டுகள் பற்றி குறிப்பு வரைக.

    2. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 1.54 x 10-3 s-1 அதன் அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.

    1. பாஸ்பைனின் வேதிப் பண்புகளை விளக்கும் இரு சமன்பாடுகளைத் தருக.

    2. பிராக் சமன்பாட்டினை பயன்படுத்தி எவ்வாறு ஒரு படிகத்தின் அலகுக்கூட்டின் விளிப்பு நீளத்தைக் கணக்கிடலாம்?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Chemistry - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment