இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கீழ்கொடுக்கப்பட்டவற்றுள் திரும்பத் திரும்ப நிகழா தன்மை கொண்டது எது?

    (a)

    சந்தா 

    (b)

    முதலீடு மீதான வட்டி 

    (c)

    உயில்கொடை நிதி 

    (d)

    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 

  2. கட்டடங்கள் கட்டுவதற்காகவும், சொத்துகளை வாங்குவதற்காகவும் பெறப்படும் மானியமானது எவ்வாறு கருதப்படுகிறது?

    (a)

    முதலின வரவு 

    (b)

    வருவாயின வரவு 

    (c)

    முதலினச் செலவு 

    (d)

    வருவாயினச் செலவு 

  3. இலாபநட்டக் கணக்கு தயாரிப்பு போன்றது எது?

    (a)

    வருவாய் மற்றும் செலவினக் கணக்கு 

    (b)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 

    (c)

    வியாபாரக் கணக்கு 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பு 

  4. ஒரு அமைப்பின் நிதிநிலையை வெளிப்படுத்தும் அறிக்கை எது?

    (a)

    நிலை அறிக்கை 

    (b)

    இருப்பாய்வு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதியறிக்கை 

  5. நடப்பாண்டின் இறுதியில் உள்ள கொடுபட வேண்டிய செலவுகள் இருப்புநிலைக் குறிப்பின் எந்த பக்கம் பதியப்பட வேண்டும்?

    (a)

    சொத்துகள் பக்கம் 

    (b)

    பொறுப்புகள் பக்கம் 

    (c)

    இரண்டு பக்கமும் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. 5 x 2 = 10
  7. பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

      ரூ
    1.4.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,600
    அவ்வாண்டில் வாங்கிய எழுதுபொருள்கள்  6,500
    31.3.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,200
  8. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  9. அரசு மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து பெறப்படும் மானியம் பற்றி குறிப்பு வரைக.

  10. மதிப்பூதியம் என்றால் என்ன?

  11. இருப்புநிலைக் குறிப்பு என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  14. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிஞ்சி விளையாட்டு மன்றத்தின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ
    கைரொக்கம்  4,000 அச்சுக்கட்டணம் செலுத்தியது 2,500
    சம்பளம் கொடுத்தது  3,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 1,000
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது  10,000 தொடர் விளையாட்டுப் போட்டி வரவுகள் 14,000
    சந்தா பெற்றது 15,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 10,500
    வாடகை பெற்றது 2,000 முதலீடுகள் வாங்கியது 25,000
  15. இலாப நோக்கமற்ற அமைப்புகளின் இயல்புகள் யாவை?

  16. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  17. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

  18. 4 x 5 = 20
  19. தமிழ் கல்வியில் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ. விவரம்  ரூ.
    தொடக்க ரொக்க இருப்பு (1.4.2018) 15,000 சந்தா பெற்றது  40,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 9,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல்  7,500
    அச்சு மற்றும் எழுதுபொருள்  2,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது  5,250 புத்தகங்கள் வாங்கியது  10,000
    முதலீடுகள் விற்றது  4,000 காப்பீட்டு முனைமம் செலுத்தியது  4,000
    சிற்றுண்டி வாங்கியது  2,500 பல்வகை வரவுகள்  650
    கொடுபட வேண்டிய சம்பளம்  6,000 அரசிடமிருந்து பெற்ற மானியம்  6,000
    அறக்கொடை நிதி பெற்றது  6,000 சிற்றுண்டி விற்றது  1,500
    ஒளியூட்டுக் கட்டணம்  3,300 கட்டடம் மீதான தேய்மானம்  3,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  20. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சகம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  21. கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றம் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ.
    இருப்பு கீ/கொ      அறைகலன்  15,000
    கைரொக்கம்    9,000 எழுதுபொருள்கள்  2,400
    சந்தா      முதலீடு  12,500
    2018-2019 12,500   அஞ்சல் செலவுகள்  1,000
    2019-2020  400 12,900 இருப்பு கீ/இ   
    பொழுதுபோக்கு மூலமாக பெற்ற வருமானம்    12,000 கைரொக்கம்  3,500
    பல்வகை வரவுகள்    500    
        34,400   34,400

    கூடுதல் தகவல்கள்:
    1) மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ.30 செலுத்துகின்றனர்.
    2) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31ல் ரூ.300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500
    3) 2018, ஏப்ரல் 1 அன்று முதல் நிதி ரூ.9,300
    2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

  22. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
    இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
    ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
    வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
    சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
    உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
    விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
    வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் பயன்பாடுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Accounts Of Not-for-profit Organisation Model Question Paper )

Write your Comment