கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது_____.

    (a)

    ஆதாயம்

    (b)

    நட்டம்

    (c)

    செலவு

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை

  2. சொத்துகள் மற்றும் பொறுப்புகள் நடப்பு மதிப்பினை தீர்மானிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிது?

    (a)

    மறுமதிப்பீடு

    (b)

    முதலீட்டு மாறுபடும் நிதி

    (c)

    பதிவுறா பொறுப்பு

    (d)

    நற்பெயர்

  3. ________ என்பது நிறுவனத்தின் வருங்கால இலாபத்தை புதிய கூட்டாளி உட்பட அனைத்துக் கூட்டாளிகளும் பகிர்ந்துகொள்ள ஒப்புக் கொண்ட விகிதம் ஆகும்.

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    முதல் விகிதம்

  4. கூட்டாளி சேர்க்கையின் பொழுது சொத்துக்களையும், பொறுப்புகளையும் மாரு மதிப்பீடு செய்து அவற்றை  _______ பதிய வேண்டியது நியாயமான செயல் முறையாகும்.

    (a)

    அடக்க விலையில்

    (b)

    அடக்கத்திலிருந்து தேய்மானம் கழித்த தொகையில்

    (c)

    உண்மை மதிப்பில் (நடப்பு மதிப்பில்)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. நற்பெயர் என்பது பழைய கூட்டாளிகளின் ________ கால முயற்சிகளின் பலன் ஆகும்

    (a)

    கடந்த

    (b)

    நிகழ்

    (c)

    வருங்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. 1 x 2 = 2
  7. கூற்று (A): சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மறுபதிப்பீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் இலாப, நட்டத்தை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு மற்றம் செய்வதாகும்.
    காரணம் (R): மறுமதிப்பீடு என்பது கூட்டாண்மை நிறுவனம் மாற்றியமைக்கப்படும் பொழுது அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் மதிப்பீடு செய்வதாகும்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  8. 2 x 2 = 4
  9. கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

  10. இராஜா மற்றும் இரவி என்ற இரு கூட்டாளிகள் 3:2 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இராம் என்பவரை ¼ இலாபப் பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். இராம், 1/20 பங்கினை இராஜாவிடமும், 4/20 பங்கினை இரவியிடமும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.

  11. 3 x 3 = 9
  12. இரத்ன குமார் மற்றும் ஆரோக்கியதாஸ் எனும் கூட்டாளிகள் முறையே 3.2 என இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 31 மார்ச் 2017 ஆம் நாளைய அவர்களது இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 30,000
    இரத்ன குமார் 30,000   பொறித்தொகுதி 60,000
    ஆரோக்கியதாஸ் 50,000 80,000 அறைகலன் 20,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   20,000 கடனாளிகள் 10,000
    பொதுக்காப்பு   5,000 சரக்கிருப்பு 15,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   15,000 வங்கி ரொக்கம் 15,000
    பற்பல கடனீந்தோர்   30,000    
        1,50,000   1,50,000

    2017, ஏப்ரல் 1 அன்று, டேவிட் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பினை பகிர்ந்தளிக்க குறிப்பேட்டுப் பதிவு தரவும்.

  13. ஓவியா மற்றும் காவியா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் அகல்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்து கொண்டனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    2019 மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 40,000
    ஓவியா 50,000   பொறித்தொகுதி 50,000
    காவியா 40,000 90,000 அறைகலன் 30,000
    இலாப நட்டப் பகிர்வு க/கு   40,000 கடனாளிகள் 20,000
    பொதுக்காப்பு   8,000 சரக்கிருப்பு 10,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   12,000 ரொக்கம் 20,000
    பற்பல கடனீந்தோர்   20,000    
        1,70,000   1,70,000

    சேர்ப்பின்போது பகிர்ந்து தரா இலாபம் மற்றும் காப்பு ஆகியவற்றை மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும் 

  14. சாம் மற்றும் ஜோஸ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று ஜோயல் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக்கொண்டனர். ஜோயல் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் ரூ.30,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின்படி குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது
    (ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.20,000-ஐ போக்கெழுதுவது

  15. 3 x 5 = 15
  16. ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. ரூ.
    முதல் கணக்குகள்     இயந்திரம்   30,000
    ரகு 40,000   அறைகலன்   10,000
    சாம் 30,000 70,000 சரக்கிருப்பு   10,000
    பற்பல கடனீந்தோர்   30,000 கடனாளிகள் 21,000  
          கழிக்க: வாரா    
          ஐயக்கடன் ஒதுக்கு 1,000 20,000
          வங்கி   30,000
        1,00,000     1,00,000

    1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டான்மையில் சேர்த்தனர்.
    (அ) பிரகாஷ் ரூ.10,000 முதல் கொண்டு வருவது
    (ஆ) இயந்திரம் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
    (இ) அறைகலனின் மதிப்பில் ரூ.3,000 குறைப்பது
    (ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ.3,000 என அதிகரிப்பது
    (உ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ.1,000 பதிவு செய்தல்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

  17. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
    அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
    சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
    இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
    கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
        10,00,000   1,40,000

    பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
    (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
    (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
    (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
    (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
    மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  18. அமலா, விமலா என்ற ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் முறையே 5 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். 1.4.2004 அன்று ஏடுகளில் காப்பு நிதி 48,000 ஆகக் காட்டுகிறது. அதே நாளில் கோமளா என்பவரைச் சேர்க்க முடிவெடுத்தனர் குறிப்பேட்டுப்பதிவு தருக

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - கூட்டாளி சேர்ப்பு மாதிரி வினாத்தாள் (12th Accountancy - Admission of A Partner Sample Question Paper)

Write your Comment