" /> -->

நிறுமக் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. தாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 நேர்மைப் பங்குகளை வெளியீடு செய்தது. விண்ணப்பத்தின்போது ரூ.5; ஒதுக்கீட்டின்போது ரூ.2; முதல் அழைப்பின்போது ரூ.2 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.1 செலுத்தவேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டு தொகை பெறப்பட்டது. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.

 2. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

  விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
  ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
  முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

  1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்ப்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

 3. கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் துமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

 4. அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
  ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
  குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

 5. பங்கு என்றால் என்ன?

 6. மிகை ஒப்பம் என்றால் என்ன?

 7. பத்திர முனைமக் கணக்கு பற்றி சிறுகுறிப்பு வரையவும்

 8. நிறுமம் வரைவிலக்கணம் தருக.

 9. குறை ஒப்பம் என்றால் என்ன?

 10. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Accountancy - Company Accounts Two Marks Questions )

Write your Comment