Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  2. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    
  3. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கடனாளிகள் கணக்கு, மொத்தக் கடனீந்தோர் கணக்கு, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு மற்றும் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரித்து கடன் விற்பனை மற்றும் கடன் கொள்முதல் கணக்கிடவும்.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று இருப்புகள்   2019, மார்ச் 31 அன்று இருப்புகள்  
    பற்பல கடனாளிகள் 2,40,000 பற்பல கடனாளிகள் 2,20,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 பற்பல கடனீந்தோர் 1,50,000
    பற்பல கடனீந்தோர் 1,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 8,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 10,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 20,000
    பிற தகவல்கள்: ரூ.   ரூ.
    கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 6,00,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது 30,000
    வாடிக்கையாளருக்கு அளித்த தள்ளுபடி 25,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 60,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 3,20,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 4,000
    சரக்களித்தோரால் அளிக்கப்பட்ட தள்ளுபடி 10,000 வாராக்கடன் 16,000
  4. வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 31.12.2017
    ரூ.
    31.12.2018
    ரூ.
    நிலம் மற்றும் கட்டடம் 2,40,000 2,40,000
    சரக்கிருப்பு 1,20,000 1,70,000
    கடனாளிகள் 40,000 51,500
    கடனீந்தோர் 50,000 45,000
    வங்கி ரொக்கம் 30,000 53,000

     31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ
    கூலி 65,000
    வெளித் தூக்குக்கூலி 7,500
    பற்பல செலவுகள் 28,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 6,00,000
    எடுப்புகள் 10,000

    அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

  5. திருமதி ரேவதி ரூ.1,20,000 முதலுடன் 1.4.2003 அன்று தொழில் தொடங்கினார் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 வீதம் தன் சொந்த செலவிற்கு எடுத்துக் கொண்டார். அவர் ரூ.20,000 கூடுதல் முதலாக இட்டார் அவருடைய 31.3.2004 அன்றைய நிலை கீழே தரப்பட்டுள்ளது.

      ரூ.
    வங்கி இருப்பு 8,000
    சரக்கிருப்பு  80,000
    பற்பல கடனாளிகள்  50,000
    அறைகலன்  2,500
    கை ரொக்கம்  2,000
    பற்பல கடனீந்தோர்  25,000
    கொடுபட வேண்டிய செலவுகள்  1,000

    அவர் தனது கணக்குகளை ஒற்றைப்பதிவு முறையில் பராமரித்து வருகிறார். 2003-04 ஆம் ஆண்டிற்கான அவரது இலாபம் அல்லது நட்டம் கண்டறிக.

  6. வேலூர் பொழுதுபோக்கு மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ  விவரம் ரூ
    தொடக்க இருப்பு (1.4.2016) 3,000 கேளிக்கை வரவுகள் 20,000
    தொடக்க வங்கி இருப்பு (1.4.2016) 12,000 சேர்க்கைக் கட்டணம் பெற்றது 1,000
    அறைகலன் வாங்கியது 11,000 நகராட்சி வரி 22,000
    விளையாட்டு உபகரணங்கள் வாங்கியது 11,000 அறக்கொடை நாடகக்காட்சி செலவு 2,000
    விளையாட்டு அரங்கத்திற்காக பெற்ற நன்கொடை 8,000 பில்லியார்ட்ஸ் மேசை வாங்கியது 15,000
    பழைய டென்னிஸ் பந்துகள் விற்றது 1,500 புதிய டென்னிஸ் மைதானம் கட்டியது 18,000
    செய்தித்தாள்கள் வாங்கியது 500 அறக்கொடை நாடகக்காட்சி வரவுகள் 2,500
    பயணச் செலவுகள் 4,500 இறுதி கைரொக்க இருப்பு 8,000
  7. நெய்வேலி அறிவியல் சங்கத்தின் 2018, டிசம்பர் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.

    ப 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ.
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ ரூ
    இருப்பு கீ/கொ   இருப்பு கீ/கொ    
    கைரொக்கம்  2,400 வங்கி மேல்வரைப்பற்று    1,000
    சந்தா 8,700 தபால் செலவுகள்    200
    ஆயுள் உறுப்பினர் கட்டணம் 5,000 அறிவியல் உபகரணங்கள் வாங்கியது   10,000
    கண்காட்சி நிதி வரவுகள் 7,000 ஆய்வகச் செலவுகள்   2,400
    அறிவியல் உபகரணங்கள் விற்றது 6,000 செயலாளருக்கான மதிப்பூதியம்   5,000
    (ஏட்டு மதிப்பு ரூ.5,000)   தணிக்கைக் கட்டணம்   3,600
    இதர வரவுகள் 500 பொதுச் செலவுகள்   1,800
        கண்காட்சி செலவுகள்   5,000
        இருப்பு கீ/இ    
        கையிருப்பு ரொக்கம் 200  
        வங்கி ரொக்கம் 400 600
      29,600     29,600

    கூடுதல் தகவல்கள்:
    (i)தொடக்க முதல் நிதி ரூ.6,400
    (ii) சந்தா தொகையில் 2019 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ. 600 உள்ளடங்கியுள்ளது.
    (iii) 1.1.2018 அன்று அறிவியல் உபகரணங்கள் இருப்பு ரூ.5,000.
    (iv) கண்காட்சியின் உபரித்தொகை புதிய கலையரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும்.
    2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

  8. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சகம் பெற்ற சந்தா ரூ. 50,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.6,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.3,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.1,500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  9. துரை மற்றும் வேலன் 2018, ஏப்ரல் 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். துரை ரூ.25,000 மற்றும் வேலன் ரூ.30,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
    (அ) துரை மற்றும் வேலன் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
    (ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% தரப்பட வேண்டும்.
    (இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது: துரை ரூ.300 மற்றும் வேலன் ரூ.450.
    (ஈ) துரைக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
    (உ) வேலனுக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.2,000.
    அவ்வாண்டில் வட்டி, ஊதியம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும்.

  10. ஒரு கூட்டாண்மை நிறுவனம் கடந்த மூன்று வருடங்களாக ஈட்டிய நிகர இலாபங்கள் பின்வருமாறு:
    2016: ரூ.20,000; 2017: ரூ.17,000 மற்றும் 2018: ரூ.23,000.
    மேற்குறிப்பிட்ட காலம் முழுவதும் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.80,000. நிறுவனம் கொண்டுள்ள இடரினைக் கருத்தில் கொண்டு, பயன்படுத்தப்பட்ட முதல் மீதான சாதாரண இலாப வீதம் 15% என கருதப்பட்டது. உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  11. நிறுவனத்தின் நற்பெயர் கடந்த ஐந்து ஆண்டு சராசரி இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் என்று மதிப்பிடப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள்:
    2000 - ரூ.4,200
    2002 - ரூ.4,700
    2004 - ரூ.5.000
    2001 - ரூ.4,500
    2003 - ரூ.4,600

  12. ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3 : 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்

  13. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பாங்கொன்றிற்கு      ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பாங்கொன்றிற்கு      ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பாங்கொன்றிற்கு      ரூ.2

    60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  14. பின்வரும் தகவல்களிலிருந்து, கவிதா நிறுமத்தின் பொக்கு சாவீதங்களை கணக்கிடவும்.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 100 125 150
    இதர வருமானம் 20 25 30
    செலவுகள் 100 120 80
    வருமான வரி 30% 30% 30%
  15. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

      விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
        ரூ. ரூ.
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
      பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
      நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
      நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
      மொத்தம்  3,50,000 7,00,000
    II  சொத்துகள்     
      நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
      நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
      மொத்தம்  3,50,000 7,00,000
  16. பின்வரும் தகவல்களிலிருந்து புற அக பொறுப்பு விகிதத்தினைக் கணக்கிடவும்.

    2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு (வருவிய)
    விவரம் தொகை
    ரூ.
    I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
    1. பங்குதாரர் நிதி  
      (அ) பங்கு முதல்  
      நேர்மைப் பங்கு முதல் 6,00,000
      (ஆ) காப்பு மற்றும் மிகுதி 2,00,000
    2. நீண்டகால பொறுப்புகள்  
      நீண்டகால கடன்கள் (கடனீட்டுப் பத்திரங்கள்) 6,00,000
    3. நடப்புப் பொறுப்புகள்  
      (அ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,60,000
      (ஆ) இதர நடப்புப் பொறுப்புகள்  
       கொடுபட வேண்டிய செலவுகள் 40,000
    மொத்தம் 16,00,000
  17. பின்வரும் தகவல்களிலிருந்து மொத்த இலாபவிகிதம் கணக்கிடவும். விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.2,50,000, விற்பனையிலிருந்து பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.2,10,000 மற்றும் கொள்முதல் ரூ.1,80,000.

  18. பின்வரும் நிலைகளில் இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.
    நிலை 1: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.8,00,000, இயக்க இலாபம் ரூ.2,00,000.
    நிலை 2: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.20,00,000, இயக்க அடக்கவிலை ரூ.14,00,000.
    நிலை 3: விற்பனையிலிருந்து பெற்ற வருவாய் ரூ.10,00,000, மொத்த இலாபம் விற்பனையிலிருந்து பெற்ற வருவாயில் 25%, இயக்கச் செலவுகள் ரூ.1,00,000

  19. பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.

      ரூ.   ரூ.
    ரொக்கம்  5,000 கடனாளிகள்  29,000
    பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்  5,000 குறுகிய கால முதலீடுகள்  15,0000
    சரக்கிருப்பு  52,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    கடனீந்தோர்  36,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    செலுத்த வேண்டிய செலவினங்கள்  8,000 செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள்  10,0000
  20. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
    (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

    அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம்  ரூ 
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
    1. பங்குதாரர் நிதி   
      (அ) பங்குமுதல்   
      நேர்மைப் பங்குமுதல்  1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்   
      நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
    3. நடப்பு பொறுப்புகள்   
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
      மொத்தம்  10,00,000
    II  சொத்துகள்   
    1. நீண்ட காலச் சொத்துகள்   
      நிலைச் சொத்துகள்  7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  1,20,000
      (அ) சரக்கிருப்பு  1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
      செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
      மொத்தம்  10,00,000

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Accountancy - Full Portion Five Marks Question Paper )

Write your Comment