விகிதப் பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுவது எது?

    (a)

    நீர்மைத் தன்மை விகிதங்கள் 

    (b)

    சுழற்சி விகிதங்கள் 

    (c)

    நீண்டகால கடன் தீர்க்கும் விகிதங்கள் 

    (d)

    இலாபத் தன்மை விகிதங்ககள் 

  2. ஒரு வணிக நிறுவனத்தின் நீண்டகால கடன் தீர்க்கும் திறனை மதிப்பிடுவதற்கு கணக்கிடப்படுவது எது?

    (a)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    முதல் உந்து திறன் விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  3. விற்பனை மூலம் பெற்ற வருவாயில் உள்ள இலாபத்தின் சதவீதத்தைப் காட்டுவது எது?

    (a)

    இயக்க அடக்க விலை விகிதம் 

    (b)

    மொத்த இலாப விகிதம் 

    (c)

    இயக்க இலாப விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  4. விகிதங்கள் கணக்கியல் தகவல்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் போது,அவை ________ என்று அழைக்கப்படுகின்றன.

    (a)

    விகிதம் 

    (b)

    கணக்கியல் விகிதங்கள் 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. அனைத்து இலாப விகிதங்களும் ______ ஆகக் கொடுக்கப்படும்.

    (a)

    விகிதாச்சாரம் 

    (b)

    மடங்கு 

    (c)

    சதவீதம் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  6. 5 x 2 = 10
  7. விரைவு விகிதம் என்றால் என்ன?

  8. கணக்கியல் விகிதங்களின் வடிவங்களை எழுதுக.

  9. செயல்பாட்டின் அடிப்படையில் விகிதங்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

  10. நடப்பு விகிதம் என்றால் என்ன?

  11. கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
    அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
    அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000.

  14. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  15. விகிதப் பகுப்பாய்வின் பொருள் மற்றும் வரைவிலக்கணம் தருக.

  16. பாரம்பரிய அடிப்படையின் வகைகளை எழுதி விளக்குக.

  17. நீர்மைத் தன்மை விகிதங்கள் குறிப்பு வரைக.

  18. 4 x 5 = 20
  19. ஒரு வணிக நிறுவனத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிகர இலாபத்தைக் கணக்கிடவும்

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 3,50,000
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை 1,50,000
    நிர்வாகச் செலவுகள் 50,000
    விற்பனைச் செலவுகள் 10,000
  20. பின்வரும் விவரங்களைக் கொண்டு நடப்பு விகிதம் மற்றும் நீர்மை விகிதத்தைக் கணக்கிடுக.

      ரூ.   ரூ.
    ரொக்கம்  5,000 கடனாளிகள்  29,000
    பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்  5,000 குறுகிய கால முதலீடுகள்  15,0000
    சரக்கிருப்பு  52,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    கடனீந்தோர்  36,000 முன்கூட்டிச் செலுத்திய செலவினங்கள்  2,000
    செலுத்த வேண்டிய செலவினங்கள்  8,000 செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள்  10,0000
  21. அருண் நிறுமத்தின் 31.03.2019 ஆம் நாளைய பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 
    (i) புற அக பொறுப்புகள் விகிதம் 
    (ii) உரிமையாளர் விகிதம் மற்றும் 
    (iii) முதல் உந்துதிறன் விகிதம் கணக்கிடவும்.

    அருண் நிறுவனத்தின் 31.03.2019 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    விவரம்  ரூ 
    பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்   
    1. பங்குதாரர் நிதி   
      (அ) பங்குமுதல்   
      நேர்மைப் பங்குமுதல்  1,50,000
      8% முன்னுரிமைப் பங்குமுதல்  2,00,000
      (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி  1,50,000
    2. நீண்டகாலப் பொறுப்புகள்   
      நீண்டகால கடன்கள் (9% கடனீட்டுப் பாத்திரங்கள்) 4,00,000
    3. நடப்பு பொறுப்புகள்   
      (அ) வங்கியிலிருந்து பெற்ற குறுகிய காலக் கடன்கள்  25,000
      (ஆ) கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள்  75,000
      மொத்தம்  10,00,000
    II  சொத்துகள்   
    1. நீண்ட காலச் சொத்துகள்   
      நிலைச் சொத்துகள்  7,50,000
    2. நடப்புச் சொத்துகள்  1,20,000
      (அ) சரக்கிருப்பு  1,20,000
      (ஆ) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள்  1,000,000
      (இ) ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்கு சமமானவர்கள்  27,500
      (ஈ) இதர நடப்புச் சொத்துகள்   
      செலவுகள் முன்கூட்டிச் செலுத்தியது  2,500
      மொத்தம்  10,00,000
  22. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து 
    (i) மொத்த இலாப விகிதம் 
    (ii) நிகர இலாப விகிதம் 
    (iii) இயக்க அடக்கவிலை விகிதம் 
    (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

    இலாப நட்ட அறிக்கை
    விவரம்  ரூ
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  20,000
    II. இதர வருமானம்   
      முதலீடு மூலம் வருவாய்  200
    III  மொத்த வருவாய் (I+II) 20,200
    IV  செலவுகள்   
      கொள்முதல் சரக்குகள்  17,000
      சரக்கிருப்பு மாற்றம்  (-)1,000
      நிதிசார் செலவுகள்  300
      இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
      மொத்த செலவுகள்  18,700
    அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 1,500

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - விகிதப் பகுப்பாய்வு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Accountancy - Ratio Analysis Model Question Paper )

Write your Comment