திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. தொடக்க முதல் ரூ. 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் ரூ. 6,000, அவ்வாண்டின் இலாபம் ரூ. 2,000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 3,000 எனில் இறுதி முதல் காணவும்.

    (a)

    ரூ. 9,000

    (b)

    ரூ. 11,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 3,000

  2. 1.4.2010 அன்று பற்பல கடனாளிகள் ரூ.19,500. 31.3.2011 அன்று கடனாளிகள் ரூ.29,900. அவ்வாண்டு கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.39.6000 எனில், அவ்வாண்டில் கடன் விற்பனை:

    (a)

    ரூ.30,000

    (b)

    ரூ.39,600

    (c)

    ரூ.50,000

    (d)

    ரூ.26,4000

  3. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்______.

    (a)

    வருவாயினத் தன்மை மட்டும் உடையது

    (b)

    முதலினத் தன்மை மட்டும் உடையது

    (c)

    வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  4. ______ என்பது ஒரு இலாப நோக்கற்ற அழைப்பில் ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியில் தயாரிக்கப்படும் ரொக்கம் மற்றம் வங்கி நடவடிக்கைகளின் தொகுப்பு ஆகும்.

    (a)

    பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 

    (b)

    வருவாய் மற்றும் செலவின கணக்கு 

    (c)

    கடன் மற்றும் ரொக்கக் கணக்கு 

    (d)

    பற்று மற்றும் வரவு 

  5. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  6. கூட்டாளிகளின் _______ கணக்குகள் நிலை அல்லது மாறுபடும் முதலாக இருக்கும்.

    (a)

    முதல்

    (b)

    எடுப்பு

    (c)

    ரொக்க

    (d)

    கடன்

  7. சராசரி இலாபம் ரூ.25,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம் _____.

    (a)

    ரூ.25,000

    (b)

    ரூ.5,000

    (c)

    ரூ.10,000

    (d)

    ரூ.15,000

  8. சராசரி இலாபம் ரூ.50,000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.30,000 ஆக இருக்கும் பொது, உயர் இலாபம்

    (a)

    ரூ.50,000

    (b)

    ரூ.10,000

    (c)

    ரூ.20,000

    (d)

    ரூ.30,000

  9. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

    (a)

    மறுமதிப்பீட்டு இலாபம்

    (b)

    பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

    (c)

    புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

    (d)

    முதலீட்டு மாறுபடும் நிதி

  10. பழைய கூட்டாளிகள் தங்கள் இலாபத்தில் ஒரு விகிதத்தை புதிய கூட்டளிக்கு ஆதரவராக தியாகம் செய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    (a)

    புதிய இலாபப் பகிர்வு விகிதம்

    (b)

    பழைய இலாபப் பகிர்வு விகிதம்

    (c)

    தியாக விகிதம்

    (d)

    ஒப்பந்த விகிதம்

  11. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். B-ன் விலகலின்போது நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளி B-க்கு ஈடு செய்வதற்கு A மற்றும் C யின் பங்களிப்பைக் கண்டறியவும்.

    (a)

    ரூ.20,000 மற்றும் ரூ.10,000

    (b)

    ரூ. 8,000 மற்றும் ரூ.4,000

    (c)

    ரூ.10,000 மற்றும் ரூ.20,000

    (d)

    ரூ.15,000 மற்றும் ரூ.15,000

  12. மறுமதிப்பீடுக் கணக்கின் இருதிவிளைவு கூட்டாளிகளின் எந்த கணக்குகளில் சரிகட்டப்படும்?

    (a)

    முதல் கணக்குகளில்

    (b)

    எடுப்பு கணக்குகளில்

    (c)

    நடப்பு கணக்குகளில்

    (d)

    இருப்பு நிலைக் குறிப்பில்

  13. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்.

    (a)

    அங்கீகரிக்கப்பட்ட முதல்

    (b)

    அழைக்கப்பட்ட முதல்

    (c)

    முதலினக் காப்பு

    (d)

    காப்பு முதல்

  14. வெளியீட்ட முதலில், வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட, மேலும் நிறுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 

    (a)

    ஒப்பிய முதல் 

    (b)

    வெளியிட்ட முதல் 

    (c)

    அங்கீகரிக்கப்பட்ட முதல் 

    (d)

    செலுத்தப்பட்ட முதல் 

  15. நிதிநிலை அறிக்கைகள் பகுப்பாய்வின் பின்வரும் எந்த கருவி பல்வேறு ஆண்டுகளுக்கான விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கு ஏற்புடையதாகும்?

    (a)

    ரொக்க ஓட்ட பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    போக்கு ஆய்வு

  16. ________ அறிக்கைகள் என்பது நிதிநிலை தகவல்களுக்கான ஆதாரமாகும்.

    (a)

    வருமான 

    (b)

    நிதி நிலை 

    (c)

    செலவின 

    (d)

    இலாப நட்ட 

  17. நடப்புப் பொறுப்பு ரூ.40,000; நடப்புச் சொத்து ரூ.1,00,000; சரக்கிருப்பு ரூ.20,000 எனில் விரைவு விகிதம்______.

    (a)

    1:1

    (b)

    2.5:1

    (c)

    2:1

    (d)

    1:2

  18. பங்குதாரர் நிதிக்கும் சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரத்தை தருவது எது?

    (a)

    புற அக பொறுப்புகள் விகிதம் 

    (b)

    உரிமையாளர் விகிதம் 

    (c)

    முதல் உந்து திறன் விகிதம் 

    (d)

    நிகர இலாப விகிதம் 

  19. சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்? 

    (a)

    நேரடி வருமானங்கள் 

    (b)

    நேரடி செலவினங்கள் 

    (c)

    மறைமுக வருமானங்கள் 

    (d)

    மறைமுக செலவினங்கள் 

  20. சரக்கிருப்பு,சரக்கிருப்பு அளவுகள் போன்றவற்றின் மேம்படுத்தப்பட்ட தகவல்களை உடனுக்கு உடன் எடுக்க உதவுவது எது?

    (a)

    கணினிமயக் கணக்கியல் 

    (b)

    கணக்கோடுகள் 

    (c)

    ஒற்றைப்பதிவு முறை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 2 = 14
  22. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  23. இலாபநோக்கமற்ற அமைப்புகள் எந்த கணக்குகளையெல்லாம் தயாரிக்கின்றன?

  24. முதல் மீதான வட்டி என்றால் என்ன?

  25. சாதாரண இலாப விகிதம் என்றால் என்ன?

  26. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  27. கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்றும் நீலாவுக்கும் இடையே உள்ள புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:2. ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.

  28. முனைமத்தில் வெளியிடுதல் என்றால் என்ன?

  29. நிதிநிலை அறிக்கைகள் யாவை?

  30. கடன் வசூலிப்பு காலம் என்றால் என்ன?

  31. கணக்கியல் தகவல் அமைப்பு என்றால் என்ன?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும். 

    7 x 3 = 21
  33. ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 1.1.2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    கைரொக்கம் 80,000 90,000
    சரக்கிருப்பு 1,80,000 1,40,000
    கடனாளிகள் 90,000 2,00,000
    பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000
    வங்கிக் கடன் 60,000 60,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000
    பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000

    அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.

  34. குறிப்பு வரைக 
    1) சந்தா 
    2) நன்கொடைகள் 

  35. ஆகாஷ், பாலா, சந்துரு மற்றும் டேனியல் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
    (i) ஆகாஷ் என்பவர் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.
    (ii) பாலா ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் பாலாவிடம் ஆண்டுக்கு 8% எடுப்புகள் மீது வட்டி நிறுவனத்திற்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், பாலா அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iii) ஆகாஷ், இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iv) டேனியல் தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார்.
    (v) சந்துருவால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ.50,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.

  36. நற்பெயரின் வகைகளை எழுத விளக்குக.

  37. அருண், பாபு மற்றும் சார்லஸ் மூவரும் கூட்டாளிகள். அவர்கள் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் துரை என்பவரை 1/4 விகிதத்தில் எதிர்கால இலாபத்தினை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.36,000 என்று மதிப்பிடப்படுகிறது. நற்பெயருக்காக துரை தமது பங்கின் அளவு தொகை கொண்டு வருகிறார். பழைய கூட்டாளிகள் நற்பெயருக்கான பாதித் தொகையினை எடுத்துக் கொண்டனர். மாறுபடும் முதல் முறையில் ஏடுகள் பராமரிக்கப்படுகின்றன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தரவும்.

  38. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  39. அனிதா என்பவர் தஞ்சாவூர் மோட்டார் வரையறு நிறுமத்தின் ரூ.10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர் விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.5 செலுத்தி உள்ளார். ஆனால் முதலாம் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ரூ.2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  40. நிதிநிலை அறிக்கை பகுப்பாய்வின் நோக்கங்களை எழுதுக.

  41. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  42. Tally.ERP 9-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள் யாவை?

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1. சுந்தரம் நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து உரிமையாளர் விகிதத்தைக் கணக்கிடவும்:

      சுந்தரம் நிறுமத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
      விவரம் தொகை
        ரூ.
      I. பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்  
      1. பங்குதாரர் நிதி  
        (அ) பங்கு முதல்  
        (i) நேர்மைப் பங்குமுதல் 2,50,000
        (ii) முன்னுரிமைப் பங்குமுதல் 1,50,000
        (ஆ) காப்புகள் மற்றும் மிகுதி 50,000
      2. நீண்டகாலப் பொறுப்புகள்  
        நீண்டகாலக் கடன்கள் -
      3. நடப்புப் பொறுப்புகள்  
        கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 1,50,000
      மொத்தம் 6,00,000
      II. சொத்துகள்  
      1. நீண்டகாலச் சொத்துகள்  
        (அ) நிலைச் சொத்துகள் 4,60,000
        (ஆ) நீண்ட கால முதலீடுகள் 1,00,000
      2. நடப்புச் சொத்துகள்  
        ரொக்கம் மற்றும் ரொக்கத்திற்குச் சமமானவைகள் 40,000
      மொத்தம் 6,00,000
    2. பின்வரும் நடவடிக்கைகளை Tally-ல் பதிவு செய்யவும்.
      (1) ரூ. 4,00,000 முதலுடன் தேவி தொழில் தொடங்கினர்.
      (2) இந்தியன் வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு ரூ. 60,000 செலுத்தியது.
      (3) ரொக்கத்திற்கு அறைகலன்  வாங்கியது ரூ. 15,000
      (4) சுமதியிடம் இருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ. 50,000
      (5) ரொக்க விற்பனை மேற்கொண்டது ரூ. 10,000
      (6) இராஜாவிடம் சரக்கு கொள்முதல் செய்து காசோலை மூலம் செலுத்தியது ரூ. 5000.
      (7) அருணுக்கு கடனாக விற்ற சரக்கு ரூ. 70,000.
      (8) அலுவலக செலவிற்காக  வங்கியிலிருந்து பணம் எடுத்தது ரூ. 25,000
      (9) சுமதிக்கு காசோலை மூலம் பகுதி தொகை செலுத்தியது ரூ. 30,000
      (10) அருண் பகுதி தொகையாக செலுத்திய ரொக்கம் ரூ. 10,000
      (11) பணியாளர்களுக்கு மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்ட சம்பளம் ரூ. 36,000
      (12) கொள்முதல் மீதான துக்குக்கூலி ரொக்கமாக செலுத்தியது ரூ. 6,000
      (13) முத்து நிறுவனத்திடமிருந்து கடனுக்கு கணினி வாங்கியது ரூ. 44,000

    1. பின்வரும் விவரங்களைக் கொண்டு பாலை வரையறு நிறுமத்தின் போக்குப் பகுப்பாய்வினைக் கணக்கிடவும்

      விவரம் ரூ. இலட்சங்களில்
      வருடம் 1 வருடம் 2 வருடம் 3
      I. பங்குமூலதனம் மற்றும் பொறுப்புகள்      
        பங்குதாரர் நிதி 250 275 300
        நீண்ட காலப் பொறுப்புகள் 100 125 100
        நடப்புப் பொறுப்புகள் 50 40 80
      மொத்தம் 400 440 480
      II. சொத்துகள்      
        நிலைச் சொத்துகள் 300 360 390
        நடப்புச் சொத்துகள் 100 80 90
      மொத்தம் 400 440 480
    2. நவீன் நிறுமத்தின் பின்வரும் வணிக நடவடிக்கையிலிருந்து 
      (i) மொத்த இலாப விகிதம் 
      (ii) நிகர இலாப விகிதம் 
      (iii) இயக்க அடக்கவிலை விகிதம் 
      (iv) இயக்க இலாப விகிதம் கணக்கிடவும்.

      இலாப நட்ட அறிக்கை
      விவரம்  ரூ
      விற்பனை மூலம் பெற்ற வருவாய்  20,000
      II. இதர வருமானம்   
        முதலீடு மூலம் வருவாய்  200
      III  மொத்த வருவாய் (I+II) 20,200
      IV  செலவுகள்   
        கொள்முதல் சரக்குகள்  17,000
        சரக்கிருப்பு மாற்றம்  (-)1,000
        நிதிசார் செலவுகள்  300
        இதர செலவுகள் (நிர்வாகம் மற்றும் விற்பனை) 2,400
        மொத்த செலவுகள்  18,700
      அவ்வாண்டிற்கான வரிக்கு முன்னர் உள்ள இலாபம் (III-IV) 1,500
    1. மோகன்ராஜ், நாகராஜ், பாக்கியராஜ் என்ற கூட்டாளிகள் 5 : 3 : 2 எனும் விகிதத்தில் இலாப நட்டங்கள் பகிர்ந்து வந்தனர். 31.12.2014 அன்று நிறுவன ஏடுகளில் காப்பு நிதி ரூ.30,000 மற்றும் பகிர்ந்து தரா நட்டம் ரூ.20,000 உள்ளன. பாக்கியராஜ் 1.1.2015 அன்று விலக்கினார். காப்பு நிதி, பகிர்ந்து தரா நாட்டம் ஆகியவற்றை பழைய கூட்டாளிகளின் கணக்குகளுக்கு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.

    2. குப்தா நிறுமத்தின் பின்வரும் இருப்புநிலைகுறிப்பிலிருந்து 2016 மார்ச் 31 மற்றும் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடைவடியும் ஆண்டுக்குரிய ஒப்பீட்டு இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

        விவரம்  2016, மார்ச் 31 2017, மார்ச் 31
          ரூ. ரூ.
      பங்கு மூலதனம் மற்றும் பொறுப்புகள்     
        பங்குதாரர் நிதி  2,00,000 5,20,000
        நீண்டகாலப் பொறுப்புகள்  1,00,000 1,20,000
        நடப்புப் பொறுப்புகள்  50,000 60,000
        மொத்தம்  3,50,000 7,00,000
      II  சொத்துகள்     
        நிலைச் சொத்துகள்  2,00,000 4,00,000
        நடப்புச் சொத்துகள்  1,50,000 3,00,000
        மொத்தம்  3,50,000 7,00,000
    1. அன்பு மற்றும் சங்கர் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3:2 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
      முதல் கணக்குகள்:     கணிப்பொறி 40,000
      அன்பு 4,00,000   வாகனம் 1,60,000
      சங்கர் 3,00,000 7,00,000 சரக்கிருப்பு 4,00,000
      இலாப நட்ட க/கு   1,20,000 கடனாளிகள் 3,60,000
      கடனீந்தோர்   1,20,000 வங்கி ரொக்கம் 40,000
      தொழிலாளர் ஈட்டு நிதி   60,000    
          10,00,000   1,40,000

      பின்வரும் விவரங்கள் அடிப்படையில் இராஜேஷ் என்பவர் 1/5 பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
      (i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.75,000 என மதிப்பிடப்பட்டது. இராஜேஷ் நற்பெயரில் தன்னுடைய பங்கினை ரொக்கமாகக் கொண்டு வந்தார்.
      (ii) இராஜேஷ் ரூ.1,50,000 முதலாகக் கொண்டு வந்தார்.
      (iii) வாகனம் ரூ.2,00,000, சரக்கிருப்பு ரூ.3,80,000, கடனாளிகள் ரூ.3,50,000 என மதிப்பிடப்பட்டது.
      (iv) எதிர்பார்க்கப்படும் தொழிலாளர் ஈட்டு நிதி மீதான கோரிக்கை ரூ.10,000.
      (v) பதிவுறா முதலீடு ரூ.5,000 கணக்கில் கொண்டுவரப்பட்டது.
      மறுமதிப்பீடு கணக்கு, முதல் கணக்கு மற்றும் இராஜேஷின் சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    2. கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.3 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்

    1. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
      (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
      (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
      (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
      (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

    2. ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

      பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ
      முதல் கணக்குகள்:     கட்டடம் 1,00,000
      மஞ்சு 70,000   அறைகலன் 80,000
      சாரு 70,000   சரக்கிருப்பு 60,000
      லாவண்யா 70,000 2,10,000 கடனாளிகள் 40,000
      பற்பல கடனீந்தோர்   40,000 கைரொக்கம்  20,000
      இலாப நட்டக் கணக்கு   50,000    
          3,00,000   3,00,000

      பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
      (i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
      (i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
      (i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
      (ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.

    1. இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      விவரம் 31.3.2018
      ரூ.
      31.3.2019
      ரூ.
      சரக்கிருப்பு 2,20,000 1,60,000
      கடனாளிகள் 5,30,000 6,40,000
      வங்கி ரொக்கம் 60,000 10,000
      இயந்திரம் 80,000 80,000
      பற்பல கடனீந்தோர் 3,70,000 4,20,000

      பிற தகவல்கள்: 

      விவரம் ரூ. விவரம் ரூ.
      வாடகை செலுத்தியது 1,20,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 12,50,000
      பெற்ற தள்ளபடி 35,000 எடுப்புகள் 1,00,000
      அளித்த தள்ளுபடி 25,000 ரொக்க விற்பனை 20,000
      கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 11,00,000 1.4.2018 அன்று முதல் 5,20,000
    2. கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

      கோயமுத்தூர் பொழுதுபோக்கு மன்றம் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
      பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ.
      இருப்பு கீ/கொ      அறைகலன்  15,000
      கைரொக்கம்    9,000 எழுதுபொருள்கள்  2,400
      சந்தா      முதலீடு  12,500
      2018-2019 12,500   அஞ்சல் செலவுகள்  1,000
      2019-2020  400 12,900 இருப்பு கீ/இ   
      பொழுதுபோக்கு மூலமாக பெற்ற வருமானம்    12,000 கைரொக்கம்  3,500
      பல்வகை வரவுகள்    500    
          34,400   34,400

      கூடுதல் தகவல்கள்:
      1) மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ.30 செலுத்துகின்றனர்.
      2) எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31ல் ரூ.300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ.500
      3) 2018, ஏப்ரல் 1 அன்று முதல் நிதி ரூ.9,300
      2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.

    1. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து மதுரை அன்னை தெரசா மகளிர் மன்றத்தின் 2018, டிசம்பர், 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

      விவரம்  ரூ விவரம்  ரூ 
      ரொக்க இருப்பு (1.1.2018) 2,000 தீக்காப்பீட்டு முனைமம் செலுத்தியது  1,500
      வங்கி இருப்பு (1.1.2018 3,000 சந்தா பெற்றது 8,500
      பழைய செய்தித்தாள்கள்  விற்றது 500 அறைகலன் வாங்கியது 6,000
      எழுதுபொருள்கள் வாங்கியது 6,000 செய்தித்தாள்கள் வாங்கியது 700
      தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 அறைகலன் மீதான தேய்மானம் 900
      நுழைவுக்கட்டணம் பெற்றது 3,000 ரொக்க இருப்பு (31.12.2018) 2,500
      பல்வகைச் செலவுகள் 6,000 போக்குவரத்துச் செலவுகள் 1,000
      உதவித்தொகை அளித்தது 2,000 அறைகலன் விற்றது 4,000
      முதலீடுகள் மீதான வட்டி 2,000    
    2. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி, கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

      நாள் ரூ.
      மார்ச் 1 8,000
      ஜூன் 1 6,000
      செப்டெம்பர் 1 4,000
      டிசம்பர் 1 3,000

      பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

*****************************************

Reviews & Comments about 12th கணக்குப்பதிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Accountancy - Revision Model Question Paper 2 )

Write your Comment