திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. எவ்வகைக் கன்னி இனப்பெருக்கத்தில் ஆண் உயிரிகள் மட்டுமே உருவாகின்றன?

    (a)

    அர்ரீனோடோக்கி 

    (b)

    தெலிடோக்கி 

    (c)

    ஆம்ஃபிடோக்கி 

    (d)

    'அ' மற்றும் 'இ' இரண்டும் 

  2. சரியா?, தவறா?
    1) விந்தணுக்கள் சில வேதிப்பொருட்கள் செயலிழக்கச் செய்யும் 
    2) கருத்தடை உறை ஆட்டுத்தோல் பொருட்களால் செய்யப்படும்.
    3) கருப்பை வாய்த்திரவம் ஹார்மோன்களால் கெட்டியாக்கப்படும் 
    4) பாலூட்டும் கால  மாதவிடாயின்மை நம்பத்தக்கது 

    (a)

    1,2,சரி;3,4 தவறு 

    (b)

    1,2 தவறு;3,4 சரி 

    (c)

    1,2,3, சரி 4 தவறு 

    (d)

    1 தவறு; 2,3,4 தவறு 

  3. தூது RNA மூலக்கூறு எம்முறையில் உருவாக்கப்படுகிறது?

    (a)

    இரட்டிப்பாதல்

    (b)

    படியெடுத்தல்

    (c)

    நகலாக்கம்

    (d)

    மொழிபெயர்த்தல்

  4. A ராமபித்திகஸ்  1. நவீன மனிதன் 
    ஆஸ்ட்ரலோபித்திகஸ்  2. இரண்டு கால்களில் நடத்தல் 
    ஹோமோ ஹேபிலஸ்   3. ஆஸ்திரேலிய மனித குரங்கு 
    ஹோமோ செபியன்ஸ்  4. கொரில்லா போன்ற நடை 
    (a)

    A-4,B-3,C-2,D-1

    (b)

    A-1,B-2,C-3,D-4

    (c)

    A-4,B-3,C-1,D-2

    (d)

    A-2,B-1,C-4,D-3

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மனித உறுப்புகளில் ஒரு முதல்நிலை மற்றும் ஒரு இரண்டாம் நிலை நிணநீர் உறுப்பை அடையாளம் கண்டு அதன் பங்கினை விளக்குக.
    அ) கல்லீரல்
    ஆ) தைமஸ்
    இ) தைராய்டு
    ஈ) டான்சில்
    உ) வயிறு

    (a)

    கல்லீரல்

    (b)

    தைமஸ்

    (c)

    தைராய்டு

    (d)

    டான்சில்

  6. 90% மேற்பட்ட ______________ சந்ததியை உருவாக்க இயலாத மலட்டுயிரிகளாகின்றன.

    (a)

    மரபு மாற்றம் 

    (b)

    விலங்கு நகலாக்கம் 

    (c)

    டி.என்.ஏ மறுசேர்க்கை 

    (d)

    ஜீன் சிகிச்சை

  7. பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்வகைத் தன்மை கொண்ட பகுதி எது?

    (a)

    குளிர் பாலைவனம்

    (b)

    வெப்ப மண்டலக்காடுகள்

    (c)

    மிதவெப்ப மழைக்காடுகள்

    (d)

    சதுப்பு நிலங்கள்

  8. ஹைட்ரோ குளோரோ புளோரா கார்பன் சேர்மங்களில் அதிகமாகக் காணப்படும் மூலக்கூறு எது?

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    கார்பன்

    (c)

    குளோரின்

    (d)

    புளாரின்

  9. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே _______.

    (a)

    A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C

    (b)

    A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற்றும் T ⟶ A

    (c)

    C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற் றும் G ⟶ A

    (d)

    G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற் றும் C ⟶ G

  10. எதற்குட்பட்ட தாவரங்களில் சோமோ -குளோனல் வேறுபாடுகள் காணப்படும்?

    (a)

    rDNA தொழில்நுட்பவியல்  

    (b)

    காமா கதிரியக்கத்திற்கு உட்பட்ட தாவரங்கள்  

    (c)

    திசு வளர்ப்பு  

    (d)

    மிகவும் மாசுபட்ட சூழல் 

  11. பின்வருவனவற்றில் பெடாஜெனிசிஸ் என்பதை குறிக்கும் சொல் 

    (a)

    படிமங்கள் 

    (b)

    தண்ணீர்

    (c)

    மக்கள்தொகை 

    (d)

    மண் உருவாக்கம்

  12. சூழல்மண்டலத்தின் ஆற்றல் ஓட்டம் எப்பொழுதும் 

    (a)

    ஒரே திசையில் பாய்கிறது 

    (b)

    மேலிருந்து கீழாக 

    (c)

    சங்கிலி அமைப்பில் 

    (d)

    எல்லா திசைகளிலும் 

  13. தோல் புற்றுநோயை அதிகரிக்கும் நிகழ்வு எந்த வளிமண்டல வாயு குறைவு காரணமாக ஏற்படுகிறது?

    (a)

    அம்மோனியா 

    (b)

    மீத்தேன் 

    (c)

    நைட்ரஸ் ஆக்ஸைட் 

    (d)

    ஓசோன் 

  14. பயிர் பெருக்கத்தில் வேகமான முறை _____.

    (a)

    அறிமுகப்படுத்துதல்

    (b)

    தேர்ந்தெடுத்தல்

    (c)

    கலப்பினமாதல்

    (d)

    சடுதிமாற்றப்பயிர்பெருக்கம்

  15. குர்கமின் எதிலிருந்து பெறப்படும்?

    (a)

    மஞ்சள் 

    (b)

    மிளாகாய் 

    (c)

    ஏலக்காய் 

    (d)

    புளி 

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  17. பிளாஸ்மோடியம் எந்த நிலைகளில் பலபிளவு முறை நடைபெறுகிறது?

  18. GIFT,ZIFT வேறுபடுத்துக.

  19. மனித மரபணு தொகுதித் திட்டத்தின் இலக்குகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  20. வீக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் வேதிய எச்சரிக்கை சமிக்ஞைகளை பட்டியலிடுக.

  21. பாலிமரேஸ் சங்கிலி வினையைப் பயன்படுத்தி விரும்பிய மாதிரியில் எவ்வாறு மரபணு பெருக்கம் செய்யப்படுகிறது?

  22. ராவோல்ஃபியா வாமிடோரியா எனும் மருத்துவ தாவரத்தில் உள்ள செயல்படு வேதிப்பொருளின் பெயர் என்ன? இது எந்த வகை பல்வகைத்தன்மையை சார்ந்துள்ளது?

  23. பதியமிடல் என்றால் என்ன?

  24. சூழ்நிலையியல் - வரையறு 

  25. கேழ்வரகின் பயன்கள் கூறு.

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  27. நடு அடுக்கலிருந்து உருவாகும் உடல் உறுப்புக்கள் எவை?

  28. டார்வினின் குருவிகள் மற்றும் ஆஸ்திரேலிய பைப்பாலூட்டிகள் ஆகியவை தகவமைப்புப் பரவலுக்கான சிறந்த எடுத்துகாட்டுகள் ஆகும் சொற்றொடரை நியாப்படுத்துக்க.

  29. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    நோய்கள் நோய்க்காரணி அறிகுறிகள்
    அஸ்காரியாசிஸ் அஸ்காரிஸ்  
      டிரைகோஃபைட்டான் உடலின் பல்வேறு உறுப்புகளில் வறண்ட,
    செதில் புண்கள் காணப்படுதல். 
    டைபாய்டு   அதிக காய்ச்சல், வலுவிழத்தல், தலைவலி, வயிறுவலி மற்றும் மலச்சிக்கல்.
    நிமோனியா    
  30. உயிர் உரங்களாக நுண்ணுயிரிகளின் பங்கினை நியாயப்படுத்துக.

  31. வாண்ட்ஹாஃப் விதியை பற்றி விவரிக்க.

  32. கேலஸ் தூண்டப்படுதலை விவரி.

  33. தாவரங்களால் சீரமைக்கப்படுதல் என்றால் என்ன?

  34. அனைத்து சூழல்மண்டலங்களிலும் பொதுவாக காணப்படும் உணவுச்சங்கிலியின் பெயரை கண்டறிந்து விளக்குக. அதன் முக்கியத்துவத்தை எழுதுக.

  35. உயிர்ப்பன்மத் தாக்க மதிப்பீடு பயன்கள் யாவை?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. கலப்பின வீரியம் - குறிப்பு வரைக

    2. நீயறிந்த ஏதாவது இரு தாவரங்களின் செயலாக்க மூலமருந்து மற்றும் மருத்துவ முக்கியத்துவத்தை தருக.

    1. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

    2. வழிமுறை வளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முறைப்படி வரிசைப்படுத்தி, வழிமுறை வளர்ச்சியின் வகையைக் கண்டறிந்து விளக்குக.
      நாணற் சதுப்பு நிலை, தாவரமிதவை உயிரிநிலை, புதர்செடி நிலை, நீருள் மூழ்கிய தாவரநிலை, காடுநிலை, நீருள் மூழ்கி மிதக்கும் நிலை, சதுப்பு புல்வெளி நிலை.

    1. வாழிடங்கள் துண்டாடப்படுவதினால் உயிரினங்கள் பாதிக்கப்படுவதை விவரி.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.உயிரினங்கள் வாழும் ஒரு பெரிய நிலப்பரப்பு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சிறு பகுதிகளாகப் பிரித்தல் வாழிடம் துண்டாடப்படுதல் ஆகும்.

    2. நீர் மாசுறுதலின் மூல ஆதாரங்கள் யாவை?

    1. பலபிளவு முறை பற்றி விரிவாக விடையளி.

    2. இரட்டிப்பாதல் (அ) மீளுறுவாதல் 

    1. நுண்வித்துருவாக்கத்திலுள்ள படிநிலைகளை விவாதி.

    2. பல்கூட்டு பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th உயிரியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Biology - Revision Model Question Paper 2 )

Write your Comment