" /> -->

தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. ஒரு அயல்அறுமடியம் கொண்டிருப்பது

  (a)

  ஆறு வேறுபட்ட மரபணுத்தொகையம்

  (b)

  மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையம் ஆறு நகல்கள்

  (c)

  மூன்று வேறுபட்ட மரபணுத்தொகையத்தின் இரண்டு நகல்கள்

  (d)

  ஒரு மரபணுத்தொகையத்தின் ஆறு நகல்கள்

 2. மக்காச்சோளத்தில் முழுமையற்ற பிணைப்பின் காரணமாக , பெற்றோர் மற்றும் மறுகூட்டிணைவு வகைகளின் விகிதங்கள்

  (a)

  50:50

  (b)

  7 :1: 1:7

  (c)

  96.4: 3.6

  (d)

  1 :7 :7 :1

 3. புள்ளி சடுதிமாற்றத்தால் DNA வின் வரிசையில் ஏற்படும் ஒத்த பதிலீடு, ஒத்த பதிலீடு வேறுபட்ட பதிலீடு, வேறுபட்ட பதிலீடு முறையே

  (a)

  A ⟶ T, T ⟶ A, C ⟶ G மற்றும் G ⟶ C

  (b)

  A ⟶ G, C ⟶ T, C ⟶ G மற் றும் T ⟶ A

  (c)

  C ⟶ G, A ⟶ G, T ⟶ A மற் றும் G ⟶ A

  (d)

  G ⟶ C, A ⟶ T, T ⟶ A மற் றும் C ⟶ G

 4. மரபுக்குறியன் AGC யானது AGA வாக மாற்றமடையும் நிகழ்வு

  (a)

  தவறுதலாகப் பொருள்படும் சடுதிமாற்றம்

  (b)

  பொருளுணர்த்தாத சடுதிமாற்றம்

  (c)

  கட்ட நகர்வு சடுதிமாற்றம்

  (d)

  நீக்குதல் சடுதிமாற்றம்

 5. மறுகூட்டிணைவு நிகழ்விரைவு 0.09 என இருந்தா ல், A மற்றும் B என்ற இரு அல்லீல்களை பிரிக்கும் வரைபட அலகு எதுவாக இருக்கும்?

  (a)

  900 cM

  (b)

  90 cM

  (c)

  9 cM

  (d)

  0.9 cM

 6. 5 x 1 = 5
 7. மென்டலின் ஆய்வுகளை மறுபடி கண்டறிந்தவர்கள் _______ 

  ()

  டி.விரிஸ், தாரண்ஸ் மற்றும் செர்மார்க்

 8. செல்பிரித்தலின் போது செல்லில் காணப்பட்ட புழுக்கள் போன்ற அமைப்புகள் __________ எனப்படும்.

  ()

  குரோமோசோம்கள் 

 9. செல்லில் காணப்படும் குரோமோசோம்களே பாரம்பரியப் பண்புகளை கடத்துவதற்குக் காரணம் என்றவர் 

  ()

  வில்ஹெல்ம்ராக்ஸ் 

 10. டிரோசோவில்லாவில் சடுதிமாற்றத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் 

  ()

  முல்லர் (1927)

 11. 2ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வேதி ஆயுதம் 

  ()

  மஸ்டர்டு வாயு (Dichloroethyl Sulphide)

 12. 5 x 2 = 10
 13. ஒரே பெற்றோரிடமிருந்து பெறப்படும் வேறுபட்ட மரபணுக்கள் ஒன்றாகவே காண ப்படும் பொழுது,
  i) நிகழ்வின் பெயர் என்ன?
  ii) தகுந்த எடுத்துக்காட்டுடன் கலப்பினை வரைக .
  iii) புறத்தோற்ற விகிதத்தை எழுதுக.

 14. தொல்லுயிர் எச்ச மரபணுக்கள் என்றால் என்ன?

 15. இணை சடுதி மாற்றிகள் (Co-mutagens) என்றால் என்ன?

 16. மோனோபிளாய்டி & ஹாப்ளாய்டி வேறுபடுத்தி 

 17. பிணைதலின் பலம் & பலமற்ற தன்மை யாது?

 18. 5 x 3 = 15
 19. குறுக்கேற்ற செயல்முறையை விளக்குக.

 20. மூலக்கூறு அடிப்படையிலான DNA மறுகூட்டினைவு செயல்முறையில் பங்குபெறும் படி நிலைகளைப் படத்துடன் எழுதுக.

 21. குறுக்கேற்றம் மற்றும் பரிமாற்ற இடம் மாறுதல் வேறுபடுத்துக.

 22. பைவேலண்ட் டெட்ரடு  வேறுபடுத்து

 23. மறு சேர்க்கை என்பதை வரையறு 

 24. 3 x 5 = 15
 25. மனிதனால் உருவாக்கப்பட்ட தானியத்தின் பெயரை எழுதுக. இது எவ்வாறு
  உருவாக்கப்டுகிறது.

 26. இடம் பெயர்தல் -விளக்கு 

 27. இரு ஒடுங்கு தன்மையுள்ள ஆட்டோசோம் மரபணுக்கள் a மற்றும் b உடைய வேறுபட்ட காரணி நிலை -ஒரு இரு இணை ஒடுங்கு பெற்றோரோடு கலப்பு செய்யப்படுகிறது அவற்றிக்கான புறத்தோற்ற விகிதத்தை பின் வரும் சூழலில் கண்டறி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th தாவரவியல் - குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் மாதிரி வினாத்தாள் ( 12th Botany - Chromosomal Basis Of Inheritance Model Question Paper )

Write your Comment