நிகழ்தகவு பரவல்கள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வணிகக் கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. இயல்நிலைப் பரவலைக் கண்டுபிடித்தவர்

  (a)

  லாப்லேஸ்

  (b)

  டீ மாய்வர்

  (c)

  காஸ்

  (d)

  அனைத்தும்

 2. Z என்பது திட்ட இயல்நிலை மாறி எனில் Z = -0.5 லிருந்து Z = -3.0 வரை அமையும் உருப்படிகளின் விகிதமானது.

  (a)

  0.4987

  (b)

  0.1915

  (c)

  0.3072

  (d)

  0.3098

 3. f(x)=\(\left( \frac { 1 }{ \sqrt { 72\pi } } \right) \frac { e^{ -(x-10)^{ 2 } } }{ 72 } \) -∞ < x < ∞ என்ற இயல்நிலை பரவலின் பண்பளவைகளானது.

  (a)

  (10,6)

  (b)

  (10,36)

  (c)

  (6,10)

  (d)

  (36,10)

 4. சராசரியாக ஒரு தேர்வில் 40% மாணவர்கள் தோல்வி அடைகின்றனர். ஒரு குழுவிலுள்ள 6 மாணவர்களில் குறைந்தபட்சம் 4 நபர் வெற்றி அடைவதற்கான நிகழ்தகவானது.

  (a)

  0.5443

  (b)

  0.4543

  (c)

  0.5543

  (d)

  0.4573

 5. புள்ளியியல் வகுப்பில் பயிலும் மாணவர்களின் உயரமானது இயல்நிலை பரவலை பின்பற்றி சராசரி 172 செ.மீ மற்றும் மாறுபாடு 25 செ.மீ பெற்றுள்ளது, எனில் 165 செ.மீ மற்றும் 181 செ.மீ க்கும் இடைப்பட்ட உயரத்தில் இருக்கும் மாணவர்களின் விகிதமானது.

  (a)

  0.954

  (b)

  0.601

  (c)

  0.718

  (d)

  0.883

 6. 4 x 2 = 8
 7. பெர்னோலி முயற்சி: வரையறு.

 8. ஈருறுப்புப் பரவலின் விலக்கப்பெருக்குத் தொகைகளை தருவி.

 9. மூன்று குழந்தைகள் கொண்ட ஒரு குடும்பத்தில் சரியாக இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதற்கான நிகழ்தகவினைக் காண்க.

 10. ஈருறுப்பு பரவலின் சராசரி 4 மற்றும் திட்டவிலக்கமானது 2 ஆக இருப்பின் பரவலை தீர்மானித்து மேலும் P(x=15) கண்டுபிடி.

 11. 4 x 3 = 12
 12. பிழையற்ற ஐந்து நாணயங்கள் ஒரே சமயத்தில் சுண்டப்படுகின்றன. அவற்றில் சரியாக 3 தலைகள்  பெறுவதற்கான நிகழ்தகவு காண்க.

 13. ஈருறுப்புப் பரவலின் சராசரி மதிப்பு 20 எனவும், திட்டவிலக்கத்தின் மதிப்பானது 4 எனவும் கொண்டா ல், ‘n’ இன் மதிப்பினைக் காண்க.

 14. ஒரு கூறில் இருந்து எடுத்த 125 உலர்ந்த மின்கலங்கள் அதனுடை ஆயுட்காலம் எத்தனை மணி நேரம் என்பதனை சோதனை முடிவுகளில் சராசரியாக 12 மணி நேரம் மற்றும் அதன் திட்ட விலக்கம் 3 மணி நேரம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதன் தரவுகள் இயல்நிலைப் பரவலைக் கொண்டது எனில், எத்தனை சதவீத மின்கலங்கள்
  (i) 13 மணி நேரத்திற்கும் அதிகமாக
  (ii) 5 மணி நேரத்திற்கும் குறைவாக
  (iii) 9 மணி நேரத்திற்கும் 14 மணி நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒளிரும் என்பதனைக் கணக்கிடுக.

 15. கிராம கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு 800 லிட்டர் மற்றும் திட்டவிலக்கம் 100 லிட்டர் ஆகும். ஒரு நாள் 800 லிட்டர் முதல் 1000 லிட்டர் வரை கூட்டுறவு சங்கத்தின் வாயிலாகக் கொள்முதல் செய்வதற்கான விகிதசாரத்தினைக் கணக்கிடு.

 16. 1 x 5 = 5
 17. இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு 80 பிறப்புகளில் ஒன்று எனக் கொண்டால், ஒரு நாளில் பிறக்கும் 30 குழந்தைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட இரட்டையர் பிறப்பதற்கான நிகழ்தகவினைக் கணக்கிடுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வணிகக் கணிதம் - நிகழ்தகவு பரவல்கள் Book Back Questions ( 12th Business Maths - Probability Distributions Book Back Questions )

Write your Comment