கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. HCN உடனான வினையில் பின்வரும் எந்த சேர்மத்தில் சீர்மையற்ற (கைரல்) கார்பன் உருவாவதில்லை

    (a)

    (b)

    (c)

    (d)

  2. அசிட்டால்டிஹைடு மற்றும் பெ ன்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும் வினைக்காரணி ____________

    (a)

    டாலன்ஸ் வினைக்காரணி

    (b)

    ஃபெலிங் கரைசல்

    (c)

    2,4 – டை நைட்ரோபீனைல் ஹைட்ரசீன்

    (d)

    செமிகார்பசைடு

  3. பீனைல் மெத்தனல், அடர் NaOH உடன் வினைப்பட்டு X மற்றும் Y எனும் இரண்டு விளைப்பொருட்களைத் தருகிறது. சேர்மம் X ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ர ஜன் வாயுவை வெளியேற்றுகிறது, எனில் X மற்றும் Y ஆகியவை  முறையே _____________

    (a)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனால்

    (b)

    சோடியம்பென்சோயேட்  மற்றும் பீனைல்மெத்தனால்

    (c)

    பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம்பென்சோயேட்

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  4. ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்சிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையை பெற்றுள்ளன. இதற்கு காரணம் _____________

    (a)

    வாண்டர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக நிகழும் கார்பாக்சிலிக் அமில மூலக்கூறுகளின் கூட்டமைவு

    (b)

    கார்பாக்சிலேட் அயனி உருவாதல்

    (c)

    ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்

    (d)

    மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்

  5. வளைய  ஹெக்சனோன் ஆல்டால் குறுக்க வினைக்குட்பட்ட பின்னர் வெப்பப் படுத்தப்படும்போது கிடைக்கும் விளைபொருள் எது?

    (a)

    (b)

    (c)

    (d)

  6. 5 x 2 = 10
  7. பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக.
    எத்தனாயிக் அமிலம் \(\overset{SOCl_2}\longrightarrow A\overset{Pd/BaSO_4}\longrightarrow B\overset{NaOH}\longrightarrow C\overset{\Delta}\longrightarrow D\)

  8. ஹெக்ஸ் -4- ஈனால் தயாரிக ?

  9. அசிட்டோன்  தயாரித்தல் ?

  10. ஃபீனைல் கீட்டோன்களைத் தயாரித்தல்?

  11. HCl முன்னிலையில், அசிட்டால்டிஹைடை , இரண்டு சமானங்கள் மெத்தனால் உடன் வினைப்படுத்தும்போது 1,1, - டைமீத்தாக்ஸி ஈத்தேன்  எவ்வாறு  உருவாகிறது?

  12. 5 x 3 = 15
  13. (A) எனும் ஆல்கீன் ஓசோனேற்றவினையில் புரப்பனோன்  மற்றும் ஒரு ஆல்டிஹைடு (B) ஆகியவற்றை தருகிறது. சேர்மம் (B) ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது (C) கிடை க்கிறது. சேர்மம் (C) ஐ Br2/P உடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (D) கிடைக்கிறது, இத நீராற்பகுக்கும்போது (E) ஐ தருகிறது. புரப்பனோனை HCN உடன் வினைப்படுத்தி நீராற்பகுக்கும்போது சேர்மம் (E) உருவாகிறது. A, B, C, D மற்றும் E ஆகியவற்றை கண்டறிக.

  14. பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    (i) பென்சோபீனோன்
    (ii) பென்சாயிக் அமிலம்
    (iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.

  15. பின்வருவனவற்றின் மீது HCN ன் செயல்பாடு யாது?
    (i) புரப்பனோன்
    (ii) 2,4-டை குளோரோ பென்சால்டிஹைடு.
    (iii) மெத்தனேல்

  16. C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.

  17. அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன?
    புரப்பனல் \(\longrightarrow\) பியுட்டனோன்
    ஹெக்ஸ்-3-ஐன் \(\longrightarrow\) ஹெக்சன் -3-ஓன்
    பீனைல் மெத்தனேல்  \(\longrightarrow\) பென்சாயிக் அமிலம்
    பீனைல் மெத்தனேல் \(\longrightarrow\) பென்சாயின்

  20. A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

  21. கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் – கார்பன் பிணைப்பு பிளக்கப்படுகிறது. வலிமையான ஆக்ஸிஜனேற்றியைக் கொண்டு  2,5 – டைமெத்தில்ஹெக்சன் – 2– ஓன் எனும் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது கிடைக்கப் பெறும் விளைப்பொருட்களின் பெயர் (களை ) எழுதுக

  22. எவ்வாறு தயாரிப்பாய்?
    i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
    ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
    iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
    iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
    v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
    vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
    vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
    viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
    ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
    x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Carbonyl Compounds Model Question Paper )

Write your Comment