கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. \(CH_2=CH_2 \overset{i) O_3} {\underset{ii) Zn/H_2O}{\longrightarrow}} X \overset{NH_3} \longrightarrow Y\), ‘Y’ என்பது _______

    (a)

    ஃபார்மால்டிஹைடு

    (b)

    டை அசிட்டோன் அம்மோனியா

    (c)

    ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்

    (d)

    ஆக்சைம்

  2. பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்ட றிக.
    எத்தனாயிக் அமிலம் 

    (a)

    (CH3)2C(OH)C6H5

    (b)

    CH3CH(OH)C6H5

    (c)

    CH3CH(OH)CH2 - CH3

    (d)

  3. கூற்று: 2, 2 – டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் HVZ வினை யை தருவதில்லை .
    காரணம்: 2, 2– டைமெத்தில் புரப்பனாயிக் அமிலம் α - ஹைட்ர ஜன் அணுவை கொண்டிருக்கவில்லை

    (a)

    கூற்று , காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

    (b)

    கூற்று , காரணம் இரண்டும் சரி, ஆனால் , காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று, காரணம் இரண்டும் தவறு.

  4. எத்தனாயிக் அமிலம் \(\overset{P/Br_2}\longrightarrow\) . 2 – புரோமோஎத்தனாயிக் அமிலம் இந்த வினையானது ______ என்றழைக்கப்படுகிறது

    (a)

    பிங்கல்ஸ்டீன் வினை

    (b)

    ஹேலோ ஃபார்ம் வினை

    (c)

    ஹெல் – வோல்ஹரர்ட்– ஜெலின்ஸ்கி வினை

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  5.  இன் IUPAC பெயர் _____________

    (a)

    பியுட் – 3-ஈனாயிக்அமிலம்

    (b)

    பியுட் – 1- ஈன்-4-ஆயிக்அமிலம்

    (c)

    பியுட்– 2- ஈன்-1-ஆயிக்அமிலம்

    (d)

    பியுட்-3-ஈன்-1-ஆயிக்அமிலம்

  6. 3 x 2 = 6
  7. C2H3N எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீராற்பகுப்பில் (B)ஐ தருகிறது, (B) ஆனது தயோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், நீரற்ற AlCl3 முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது.மேலும் (C) ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E)ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.

  8. X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
    \(CH_3COCH_2CH_2COOC_2H_5 \overset{CH_3MgBr}\longrightarrow X \overset{H_3O^+}\longrightarrow Y\)

  9. அசிட்டோன்  தயாரித்தல் ?

  10. 3 x 3 = 9
  11. (A) எனும் ஆல்கீன் ஓசோனேற்றவினையில் புரப்பனோன்  மற்றும் ஒரு ஆல்டிஹைடு (B) ஆகியவற்றை தருகிறது. சேர்மம் (B) ஐ ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது (C) கிடை க்கிறது. சேர்மம் (C) ஐ Br2/P உடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (D) கிடைக்கிறது, இத நீராற்பகுக்கும்போது (E) ஐ தருகிறது. புரப்பனோனை HCN உடன் வினைப்படுத்தி நீராற்பகுக்கும்போது சேர்மம் (E) உருவாகிறது. A, B, C, D மற்றும் E ஆகியவற்றை கண்டறிக.

  12. பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்?
    (i) பென்சோபீனோன்
    (ii) பென்சாயிக் அமிலம்
    (iii) α-ஹைட்ராக்ஸி பீனைல் அசிட்டிக் அமிலம்.

  13. C5H10O எனும் மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பேட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது, மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை . சேர்மம் (A) வை கண்டறிக.

  14. 2 x 5 = 10
  15. கீட்டோன்களை ஆக்ஸிஜனேற்றம் செய்யும்போது கார்பன் – கார்பன் பிணைப்பு பிளக்கப்படுகிறது. வலிமையான ஆக்ஸிஜனேற்றியைக் கொண்டு  2,5 – டைமெத்தில்ஹெக்சன் – 2– ஓன் எனும் சேர்மத்தை ஆக்ஸிஜனேற்றம் செய்யும் போது கிடைக்கப் பெறும் விளைப்பொருட்களின் பெயர் (களை ) எழுதுக

  16. எவ்வாறு தயாரிப்பாய்?
    i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
    ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
    iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
    iv. எத்தனாலிருந்து லாக்டிக் அமிலம்
    v. அசிட்டைல் குளோரைடுடிலிருந்து அசிட்டோபீனோன்
    vi. சோடியம்  அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
    vii.டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
    viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
    ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
    x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - கார்பைனல் சேர்மங்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்கள் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Carbonyl Compounds Model Question Paper )

Write your Comment