அணைவு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. [Fe(H2O)5NO]SOஅணைவுச் சேர்மத்தில் இரும்பின் ஆக்சிஜனேற்ற நிலை மற்றும் ஈனி NO ன் மின்சுமை ஆகியன முறையே __________

    (a)

    முறையே +2 மற்றும் 0

    (b)

    முறையே +3 மற்றும் 0

    (c)

    முறையே +3 மற்றும் -1

    (d)

    முறையே +1 மற்றும் +1

  2. பின்வருவனவற்றுள் 1.73BM காந்த திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?

    (a)

    TiCl4

    (b)

    [CoCl6]4-

    (c)

    [Cu(NH3)4]2+

    (d)

    [Ni(CN)4]2-

  3. பின்வருவனவற்றுள் அதிகபட்ச Δ0 எண் மதிப்பை பெற்றுள்ள அணைவு அயனி எது?

    (a)

    [Co(CN)6]3-

    (b)

    [Co(C2O4)]3-

    (c)

    [Co(H2O)6]3+

    (d)

    [Co(NH3)6]3+

  4. [Pt(NH3)2Cl2] என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம் __________

    (a)

    அணைவு மாற்றியம்

    (b)

    இணைப்பு மாற்றியம்

    (c)

    ஒளிசுழற்ச்சி மாற்றியம்

    (d)

    வடிவ மாற்றியம் 

  5. [Pt(Py)(NH3)(Br)(Cl)] என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?

    (a)

    3

    (b)

    4

    (c)

    0

    (d)

    15

  6. பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?

    (a)

    [Zn(NH3)4]2+

    (b)

    [Co(NH3)6]3+

    (c)

    [Ni(H2O)6]2+

    (d)

    [Ni(CN)4]2-

  7. மைய உலோக அயனியின் இரண்டாம் நிலை இணை திறன் என்பது அதன் _____________

    (a)

    அணு எண் 

    (b)

    ஆக்சிஜனேற்ற எண் 

    (c)

    நிறை எண் 

    (d)

    அணைவு எண் 

  8. மைய உலோக அயனியின் முதன்மை இணைதிறணை நிறைவு செய்வது ______________

    (a)

    நேர் அயனிகள் 

    (b)

    எதிர் அயனிகள் 

    (c)

    நடுநிலை மூலக்கூறுகள் 

    (d)

    மேற்கண்ட அனைத்தும் 

  9. இரண்டாம் நிலை இணைதிறனை நிறைவு செய்யும் தொகுதிகள் _______________ எனப்படும்.

    (a)

    மைய உலோக அயனி 

    (b)

    ஈனிகள் 

    (c)

    அணைவு அயனி 

    (d)

    அணைவுச் சேர்மம் 

  10. 5 x 1 = 5
  11. அயனியாதல் மாற்றியம் 

  12. (1)

    கரைசலில் வெவ்வேறு அயனிகளை உருவாக்குதல் 

  13. கரைப்பனேற்ற மாற்றியம்  

  14. (2)

    எண்முகி 

  15. Fe2(CO)9

  16. (3)

    நேர்க்கோடு 

  17. sp 

  18. (4)

    கரைப்பான் மூலக்கூறுகளை ஈனிகளுடன் பரிமாறுதல் 

  19. d2sp3

  20. (5)

    இணைப்பு பாலம் உடைய கார்பனைல் 

    7 x 2 = 14
  21. பின்வரும் அணைவுச் சேர்மங்களுக்கு IUPAC பெயர் தருக.
    i) Na2[Ni(EDTA)]
    II) [Ag(CN)2)
    iii) [Co9en)3]2(SO4)3
    iv) [Co(ONO)(NH3)5]2+
    v) [Pt(NH3)2Cl(NO2)]

  22. பின்வரும் அணைவுச் சேர்மங்களை அவைகளின் மோலார் கடத்துத் திறனின் ஏறு வரிசையில் எழுதுக.
    (i) Mg[Cr(NH3)(Cl)5]
    (ii) Cr(NH3)5Cl]3[CoF6]2
    (iii) [Cr(NH3)3Cl3]

  23. மருத்துவத்துறையில் பயன்படும் அணைவுச் சேர்மத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. மேலும் உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மங்களுக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  24. [Ti(H2O)6]3+ நிறமுடையது ஆனால் [Sc(H2O)6]3+ நிறமற்றது விளக்குக.

  25. முதன்மை இணைதிறன் என்றால் என்ன?

  26. அணைவுக் கோளம் என்றால் என்ன?

  27. பல முனை ஈனிகள் என்றால் என்ன?

  28. 4 x 3 = 12
  29. இரட்டை உப்புகள் மற்றும் அணைவுச் சேர்மங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

  30. நான்முகி அணைவுகள் வடிவ மாற்றியங்களைப் பெற்றிருப்பதில்ல. ஏன்?

  31. புகைப்படத் தொழிலில் அணைவுச் சேர்மத்தின் பயன் யாது?

  32. சிஸ் பிளாட்டின் புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான மருந்துப்பொருளாக எவ்வாறு பயன்படுகிறது?

  33. 2 x 5 = 10
  34. படிகப்புல பிளப்பு ஆற்றல் என்றால் என்ன? விளக்குக.

  35. VB கொள்கையின் வரம்புகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - அணைவு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Coordination Chemistry Model Question Paper )

Write your Comment