மின் வேதியியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தை பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை _________

    (a)

    \(6.22\times10^{23}\)

    (b)

    \(6.022\times10^{24}\)

    (c)

    \(6.022\times10^{22}\)

    (d)

    \(6.022\times10^{-34}\)

  2. ஃ பாரடே மாறிலி _________ என வரையறுக்கப்படுகிறது

    (a)

    1 எலக்ட்ரானால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (b)

    1 மோல் எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

    (c)

    ஒரு மோல் பொருளை விடுவிக்க தேவைப்படும் மின்னூட்டம்

    (d)

    \(6.22\times10^{10}\) எலக்ட்ரான்களால் சுமந்து செல்லப்படும் மின்னூட்டம்

  3. 1A மின்னுட்டத்தை பயன்படுத்தி மின்னாற்பகுக்கும் போது 60 விநாடிகளில் , எதிர்மின்முனையில் விடுவிக்கப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (எலக்ட்ரானின் மின்சுமை = \(1.6\times10\) -19C)

    (a)

    \(6.22\times10^{23}\)

    (b)

    \(6.022\times10^{20}\)

    (c)

    \(3.75\times10^{20}\)

    (d)

    \(7.48\times10^{23}\)

  4. லெட் சேமிப்புக்கலனை மின்னேற்றம்(charging) செய்யும் போது _____________

    (a)

    எதிர்மின்முனை யில் PbSO4  ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (b)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது PbO2 ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

    (c)

    நேர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஒடுக்கமடைகிறது

    (d)

    எதிர்மின்முனையில் PbSO4 ஆனது Pb ஆக ஆக்ஸிஜனேற்றமடைகிறது

  5. இரும்பின்மீது ஜிங்க் உலோகத்தை பூசி முலாம்பூசப்பட்ட இரும்பு தயாரிக்கப்படுகிறது, இதன் மறுதலை சாத்தியமற்றது, ஏனெனில் ___________

    (a)

    இரும்பை விட ஜிங்க் லேசானது

    (b)

    இரும்பை விட ஜிங்க் குறைந்த உருகுநிலையை பெற்றுள்ளது.

    (c)

    இரும்பை விட ஜிங்க் குறைந்த எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

    (d)

    இரும்பை விட ஜிங்க் அதிக எதிர்குறி மின்முனை மின்னழுத்த மதிப்பை பெற்றுள்ளது

  6. 3 x 2 = 6
  7. மின்னாற்பகுத்தல் பற்றிய ஃபாரடே விதிகளைக் கூறு.

  8. டேனியல் மின்கல கட்டமைப்பை விளக்குக. கலவினையை எழுதுக.

  9. கால்வானிக் மின்கலத்தில் நேர்மின்முனையானது எதிர்குறி கொண்டதாகவும் எதிர்மின்முனையானது நேர்குறி கொண்டதாகவும் கருதப்படுகிறது ஏன்?

  10. 3 x 3 = 9
  11. நீண்ட காலத்திற்கு காப்பர் சல்பேட்டை இரும்புக் கலனில் சேமித்து வைக்க இயலுமா?  கொடுக்கப்பட்டது: \(E^{0}_{Cu^{2+}|Cu}=0.34 V\) and \(E^{0}_{Fe^{2+}|Fe}= -0.44V\)..

  12. Cd|Cd2+||Cu2+|Cu எனும் மின்கலத்தின் திட்ட emf ஐ கணக்கிடுக. Cu2+|Cu மற்றும் Cd2+|Cd ஆகியவற்றின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்புகள் முறையே 0.34V மற்றும் -0.40 V. கலவினைவின் நிகழும் தன்மையினை கண்ட றிக

  13. கால்வானிக் மின்கலத்தில் நிகழும் நிகர வினை யானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
    2 Cr (s) + 3Cu2+   (aq)  → 2Cr3+ (aq) + 3Cu (s)
    மின்கல குறியீட்டை பயன்படுத்தி மின்கலத்தை விளக்குக, மே லும் அரை வினைக ளை எழுதுக.

  14. 2 x 5 = 10
  15. தன்னிழப்பு பாதுகாப்பு பற்றி குறிப்பு வரைக .

  16. H2 - O2 எரிபொருள் மின்கலத்தின் செயல்பாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் மின் வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry Electro Chemistry Model Question Paper )

Write your Comment