" /> -->

அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வேதியியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  6 x 1 = 6
 1. ஒரு Ag2C2O4 இன் தெவிட்டிய கரைசலில் உள்ள Ag+ அயனிகளின் செறிவு \(2.24\times10^{-4} mol L^{-1}\) எனில், Ag2C2O4 இன் கரைதிறன் பெருக்க மதிப்பு

  (a)

  \(2.42\times10^{-8} mol^{3} L^{-3}\)

  (b)

  \(2.66\times10^{-12} mol^{3} L^{-3}\)

  (c)

  \(4.5\times10^{-11} mol^{3} L^{-3}\)

  (d)

  \(5.619\times10^{-12} mol^{3} L^{-3}\)

 2. H2O மற்றும் HF ஆகிய ப்ரான்ஸ்டட் அமிலங்களின் இணை காரங்கள்

  (a)

  முறையே OH மற்றும் H2FH+ ஆகியன

  (b)

  முறையே H3O+ மற்றும் F ஆகியன

  (c)

  முறையே OH மற்றும் F ஆகிய

  (d)

  முறையே H3O+ மற்றும் H2F+ ஆகியன

 3. பின்வரும் புளூரோ சேர்மங்களில் லூயிகாரமாக செயல்ப டக்கூடியது எது?

  (a)

  BF3

  (b)

  PF3

  (c)

  CF4

  (d)

  SiF4

 4. பின்வருவனவற்றுள் லூயி காரமாக செயல்படாதது எது?

  (a)

  BF3

  (b)

  PF3

  (c)

  CO

  (d)

  F

 5. சோடியம் ஃபார்மேட், அனிலீனியம் குளோரைடு மற்றும் பொட்டாசியம் சயனைடு ஆகியவற்றின் நீர்கரைசல்கள் முறையே

  (a)

  அமிலம், அமிலம், காரம்

  (b)

  காரம், அமிலம், காரம்

  (c)

  காரம், நடுநிலை, காரம்

  (d)

  இவற்றில் ஏதுமில்லை

 6. லெட் அயோடைடின் கரைதிறன் பெருக்க மதிப்பு \(3.2\times10^{-8}\) எனில், அதன் கரைதிறன் மதிப்பு

  (a)

  \(2\times10^{-3}\)M

  (b)

  \(4\times10^{-3}M\)

  (c)

  \(1.6\times10^{-5}M\)

  (d)

  \(1.8\times10^{-5}M\)

 7. 5 x 2 = 10
 8. லூயி அமிலங்கள் மற்றும் காரங்கள் என்றால் என்ன? ஒவ்வொன்றிற்கும் இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

 9. அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய லெளரி–ப்ரான்ஸ்டட் கொள்கையை விளக்குக.

 10. கரைதிறன் பெருக்கம் வரையறு.

 11. 0.1 M அம்மோனியம் அசிட்டேட் கரைசலின் நீராற்பகுப்பு வீதம் மற்றும் pH மதிப்பை கணக்கிடுக. \(K_{a}=K_{b}=1.8\times10^{-5}\) என கொடுக்கப்பட்டுள்ளது.

 12. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.

 13. 3 x 3 = 9
 14. ஆஸ்வால்ட் நீர்த்தல் விதிக்கான சமன்பாட்டைத் தருவி.

 15. pH வரையறு.

 16. 10-7 M HCl ன் pH மதிப்பை கணக்கிடுக.

 17. 3 x 5 = 15
 18. சில்வர் குரோமேட்டின் ஒரு குறிப்பிட்ட தெவிட்டிய கரைசலானது  பின்வரும் செறிவுகளை கொண்டுள்ளது \([Ag^{+}]=5\times10^{-5}\) மற்றும் \([CrO_{4}]^{2-}=4.4\times10^{-4}M\) ., \(Ag_{2}CrO_{4}\) ன் Ksp மதிப்பு என்ன?

 19. 0.1M திறனுடை ய CH3COONa கரைச லின் i) நீராற்பகுத்தல் மாறிலி, ii) நீராற்பகுத்தல் வீதம் மற்றும் iii) pH ஆகியவற்றை க் கணக்கிடுக. (CH3COOH அமிலத்தின் pKa மதிப்பு 4.74).

 20. 1 mL 0.1M லெட் நைட்ரேட் கரைச ல் மற்றும் 0.5 mL 0.2 M NaCl கரைசல் ஆகியவற்றை
  ஒன்றாக கலக்கும் போது லெட் குளோரைடு வீழ்படிவாகுமா? வீழ்ப டிவாகாதா? என கண்ட றிக. 
  PbCl2 இன் Ksp மதிப்பு \(1.2\times10^{-5}\).

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வேதியியல் - அயனிச் சமநிலை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Ionic Equilibrium Model Question Paper )

Write your Comment