உலோகவியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    14 x 1 = 14
  1. ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (A) என்ற நிறமற்ற வாயு வெளியேறுகிறது. (A)ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (A) ஆனது ______.

    (a)

    CO2

    (b)

    SO3

    (c)

    SO2

    (d)

    H2S

  2. ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடு தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? 

    (a)

    CS2 மற்றும் H2S ஆகியவற்றைக் காட்டிலும் சல்பைடின் \(\Delta \)Gf0 மதிப்பு அதிகம் 

    (b)

    சல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு  \(\Delta \)Gr0 மதிப்பு எதிர்க்குறியுடையது. 

    (c)

    சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப இயக்கவியல் செயல்முறையாகும்.  

    (d)

    உலோக சல்பைடுகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த பொருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 

  3. பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது? 

    (a)

    Zn(s) + Cu2+(aq) \(\rightarrow \) Cu(s) + Zn2+(aq)

    (b)

    Cu(s) + Zn2+(aq) \(\rightarrow \) Zn(s) + Cu2+(aq)

    (c)

    Cu(s) + 2Ag+(aq) \(\rightarrow \) 2Ag(s) + Cu2+(aq)

    (d)

    Fe(s) + Cu2+(aq) \(\rightarrow \) Cu(s) + Fe2+(aq)

  4. ZnO விலிருந்து துத்தநாகம் (Zinc) பெறப்படும் முறை _______.

    (a)

    கார்பன் ஒடுக்கம் 

    (b)

    வெள்ளியைக் கொண்டு ஒடுக்குதல் (Ag)

    (c)

    மின்வேதி செயல்முறை 

    (d)

    அமிலக் கழுவுதல் 

  5. சிர்கோனியத்தினை (Zr) தூய்மையாக்கலின் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது.
    Zr (impure) + 2I2 \(\overset { 523K }{ \longrightarrow } \) ZrI4
    ZrI4 \(\overset { 1800K }{ \longrightarrow } \) Zr (pure) + 2I2

    (a)

    உருக்கிப் பிரித்தல் 

    (b)

    வான்ஆர்கல் முறை 

    (c)

    புலத்தூய்மையாக்கல் 

    (d)

    மான்ட் முறை 

  6. பின்வருவனவற்றுள் எவ்வினை வெப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல.

    (a)

    Cr2O3 + 2Al \(\rightarrow \) Al2O3 + 2Cr

    (b)

    Al2O3 + 2Cr \(\rightarrow \) Cr2O3 + 2Al

    (c)

    3TiO2 + 4Al \(\rightarrow \) 2Al2O3 + 3Ti

    (d)

    இவை எதுவுமல்ல 

  7. பின்வருவனவற்றுள் எது ஆக்சைடு வகை தாது.

    (a)

    ஸ்பேலிரைட்

    (b)

    காலமைன்

    (c)

    காசிட்டரைட்

    (d)

    ஸ்டீபினைட்

  8. எது சில்வரின் தாது?

    (a)

    அசுரைட்

    (b)

    பிரௌசிடைட்

    (c)

    செருசைட்

    (d)

    லிமோனைட்

  9. நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு _________ ஆக பயன்படுகிறது.

    (a)

    சேகரிப்பான்

    (b)

    குறைக்கும் காரணி

    (c)

    நுரை உருவாக்கும் காரணி

    (d)

    இளக்கி

  10. தங்கத்தின் தாதுவை அடர்ப்பிக்கும் முறை ________.

    (a)

    சயனைடு வேதிக் கழுவுதல்

    (b)

    அம்மோனியா வேதிக் கழுவுதல்

    (c)

    கார வேதிக் கழுவுதல்

    (d)

    அமில வேதிக் கழுவுதல்

  11. வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் படி உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒடுக்கம் காரணியுடன் சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் கட்டிலா ஆற்றல் மாற்றம் _________ மதிப்பினை பெற்றிருக்க வேண்டும்.

    (a)

    நேரக்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    ஒன்று

    (d)

    பூஜ்யம்

  12. எலிங்கம் வரைபடத்தில் பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைகளின் சாய்வு _________ மதிப்புடையது.

    (a)

    நேர்க்குறி

    (b)

    எதிர்க்குறி

    (c)

    பூஜ்யம்

    (d)

    ஒன்று

  13. ஒளிரும் பெயிண்ட், ஒளிரும் விளக்குகள் மற்றும் X கதிர் திரை ஆகியன தயாரிப்பில் பயன்படுவது ____________

    (a)

    பித்தளை

    (b)

    துத்தநாக சல்பைடு

    (c)

    வார்ப்பிரும்பு

    (d)

    தங்க நானோ துகள்கள்

  14. பின்வருவனவற்றுள் எது புலத் தூய்மையாக்கல் மூலம் தூய்மையாக்கப்படவில்லை?

    (a)

    சிலிக்கன்

    (b)

    காலியம்

    (c)

    சிர்கோனியம்

    (d)

    ஜெர்மானியம்

  15. 2 x 1 = 2
  16. எளிதில் அரிமானம் அடையாத, வேதி உலைகளில் பயன்படும் உலோகம் _________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அலுமினியம்

  17. தாதுக்களிலிருந்து கனிமக் கழிவுகளை நீக்குதல் _________ எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    தாதுக்களை அடர்ப்பித்தல்

  18. 2 x 1 = 2
  19. அ. நுரைமிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேகரிப்பானாக செயல்படுகிறது.
    ஆ. வேதிக்கழுவுதல் முறையில் தாதுவானது உலோகத்தின் கரையாத உப்பு அல்லது அணைவுச் சேர்மமாக மாற்றப்படுகிறது.
    இ. அம்மோனியா வேதிக் கழுவுதல் முறை தங்கம் மற்றும் வெள்ளி உலோகத்திற்கு ஏற்றது.
    ஈ. பாக்சைட் தாது அமில வேதிக் கழுவுதலுக்கு உட்படுத்தப்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    அ. நுரைமிதப்பு முறையில் சோடியம் ஈத்தைல் சாந்தேட் சேகரிப்பானாக செயல்படுகிறது.

  20. அ. மின்னாற் தூய்மையாக்கலில் தூய உலோகம் நேர்மின்வாயாகவும், தூய்மையற்ற உலோகம் எதிர்மின்வாயாகவும் செயல்படுகிறது.
    ஆ. வாலை வடித்தல் முறை அதிக கொதிநிலை உடைய எளிதில் ஆவியாகா உலோகங்களை தூய்மைப்படுத்த பயன்படுகிறது.
    இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.
    ஈ. மான்ட் முறை டைட்டேனியத்தை தூய்மையாக்க பயன்படுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    இ. புலத் தூய்மையாக்கல் முறையானது பின்ன படிகமாக்கல் தத்துவத்தை அடிப்படியாகக் கொண்டது.

  21. 2 x 2 = 4
  22. கூற்று (A): வணிக ரீதியாக அலுமினியத்தை சைனாக்களியிலிருந்து இலாபகரமாக பிரித்தெடுக்க இயலும்
    காரணம் (R): சைனாக்களில் அலுமினியத்தின் கனிமமாகும்.
    i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
    ii. A சரி, ஆனால் R தவறு
    iii. A தவறு, ஆனால் R சரி
    iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

  23. கூற்று (A): Cr2O3 ஆனது அலுமினோ வெப்ப ஒடுக்க முறை மூலம் குரோமியாக ஒதுக்கப்படுகிறது.
    காரணம் (R): இம்முறையில் அலுமினியம் ஒடுக்கியாக செயல்படுகிறது.
    i. A மற்றும் R சரி, R ஆனது A யினை விளக்குகிறது.
    ii. A சரி, ஆனால் R தவறு
    iii. A தவறு, ஆனால் R சரி
    iv. A மற்றும் R சரி ஆனால் R ஆனது A யினை விளக்கவில்லை.

  24. 1 x 2 = 2
  25. அ. கயோலினைட், அலுமினியம்
    ஆ. ஸ்டீபினைட், சில்வர் 
    இ. கலீனா, லெட்
    ஈ. ப்ரௌசிடைட், டின்

  26. 1 x 2 = 2
  27. i. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களின் ஆக்சைடுகளை கார்பனைக் கொண்டு ஒடுக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமாகும்.
    ii. அதிக வினைத்திறன் கொண்ட உலோகம், குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனியின் கரைசலில் சேர்க்கப்படும் போது குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
    iii. காப்பர் உலோகம், துத்தநாக உப்பு கரைசலிலிருந்து துத்தநாகத்தை இடப்பெயர்ச்சி செய்கிறது.
    அ) i & ii
    ஆ) i & iii
    இ) ii & iii
    ஈ) i, ii, & iii

  28. 6 x 2 = 12
  29. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுண்ணாம்புக் கல்லின் பயன்பாடு யாது? 

  30. நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்படும் ஒரு முறையினை விவரிக்க?

  31. தாது என்றால் என்ன?

  32. அடர்ப்பிக்கப்பட்ட தாதுவிலிருந்து, பண்படா உலோகத்தினை பிரித்தெடுத்தலில் உள்ள படிநிலைகள் யாவை?

  33. உலோகத்தைப் பயன்படுத்தி ஒடுக்குதல் மூலம் ஒரு உலோகம் பிரித்தெடுத்தல் பற்றி எழுது.

  34. தாமிரத்தின் பயன்களை எழுது.

  35. 5 x 3 = 15
  36. துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. 

  37. பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. 
    (அ) மாசு 
    (ஆ) கசடு

  38. கார வேதிக் கழுவுதல் பற்றி எழுது.

  39. எலிங்கம் வரைபடம் பற்றி எழுது.

  40. துத்தநாகத்தின் பயன்பாடுகள் யாவை?

  41. 2 x 5 = 10
  42. மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.

  43. உலோகவியலின் இயக்கவியல் தத்துவங்களை விளக்கு.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - உலோகவியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Metallurgy Model Question Paper )

Write your Comment