திட நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. கிராபைட் மற்றும் வைரம் ஆகியன முறையே ______________

    (a)

    சகப்பிணைப்பு மற்றும் மூலக்கூறு படிகங்கள்

    (b)

    அயனி மற்றும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (c)

    இரண்டும் சகப்பிணைப்பு படிகங்கள்

    (d)

    இரண்டும் மூலக்கூறு படிகங்கள்

  2. ஃபுளுரைட் வடிவமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும்  F– அயனிகளின் அணைவு எண்கள் முறையே ____________

    (a)

    4 மற்றும் 2

    (b)

    6 மற்றும் 6

    (c)

    8 மற்றும் 4

    (d)

    4 மற்றும் 8

  3. ஒரு உர்ஸைட்டின் மாதிரியின் இயைபு Fe0.93O1.00 இதில் இடம் பெற்றுள்ள இரும்பில் எத்தனை சதவீதம் Fe3+ அயனிகளாக உள்ளது?

    (a)

    16.05%

    (b)

    15.05%

    (c)

    18.05%

    (d)

    17.05%

  4. bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம் _______________

    (a)

    48%

    (b)

    23%

    (c)

    32%

    (d)

    26%

  5. எளிய கனசதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம் ___________

    (a)

    \(\left( \frac { \pi }{ 4\sqrt { 2 } } \right) \)

    (b)

    \(\left( \frac { \pi }{ 6 } \right) \)

    (c)

    \(\left( \frac { \pi }{ 4 } \right) \)

    (d)

    \(\left( \frac { \pi }{ 3\sqrt { 2 } } \right) \)

  6. உலோகக் குறையுள்ள குறைபாடு காணப்படும் படிகம் ______________

    (a)

    NaCl

    (b)

    FeO

    (c)

    ZnO

    (d)

    KCl

  7. ஒரு திடப்பொருளின், இயற்பண்புகளின் மதிப்புகள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு மதிப்பினைப் பெற்றிருந்தால், அத்தன்மை ______ எனப்படும்.

    (a)

    திசையொப்பு பண்பு 

    (b)

    திசையொப்பு பண்பற்ற தன்மை 

    (c)

    புறவேற்றுமை தன்மை 

    (d)

    மாற்றிய பண்பு 

  8. படிக வடிவமுடைய திடப்பொருட்கள் _________ எனப்படும்.

    (a)

    திசையொப்பு பண்புடையவை 

    (b)

    உண்மை திடப்பொருட்கள் 

    (c)

    போலி திடப்பொருட்கள் 

    (d)

    அதி குளிர்விக்கப்பட்ட திரவங்கள் 

  9. 5 x 1 = 5
  10. முகப்பு மைய கனசதுரம் 

  11. (1)

    FeO 

  12. எளிய கனசதுரம் 

  13. (2)

    52.31%

  14. முகப்பு மைய கனசதுரம் 

  15. (3)

    நான்கு 

  16. பிராங்கல் குறைபாடு 

  17. (4)

    AgBr 

  18. உலோகம் குறைவுபடும் குறைபாடு 

  19. (5)

    74%

    6 x 2 = 12
  20. அலகு கூட்டினை வரையறு. 

  21. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  22. ஏழு வகையான அலகு கூடுகளை சுருக்கமாக விளக்குக.

  23. புள்ளி குறைபாடுகள் என்றால் என்ன?

  24. உலோகப் படிகங்கள் பற்றி எழுதுக.

  25. அழுத்த மின்சாரம் என்றால் என்ன?

  26. 5 x 3 = 15
  27. ஷாட்கி குறைபாட்டினை விளக்குக.

  28. அயனிப்படிகங்கள் ஏன் கடினமாகவும், உடையும் தன்மையினையும் பெற்றுள்ளன?

  29. சோதனை முடிவுகளின் அடிப்படையில் நிக்கல் ஆக்ஸைடின் வாய்ப்பாடு Ni0.96 O1.00 என கண்டறியப்பட்டது. இதில் Ni2+ மற்றும் Ni3+ அயனிகள் எவ்விகிதத்தில் காணப்படுகின்றன.

  30. திடப்பொருட்களின் பொதுப்பண்புகளை எழுதுக.

  31. 0.144nm ஆரம் கொண்ட தங்கத்தின் அணுக்கள் முகப்பு மைய கனசதுர படிகமாக உருவானால் படிகத்தின் அலகுக்கூட்டின் விளிம்பு நீளம் யாது?

  32. 2 x 5 = 10
  33. அணைவு எண் என்றால் என்ன? bcc அமைப்பில் உள்ள ஒரு அணுவின் அணைவு எண் யாது?

  34. பிராங்கல் குறைபாடு பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - திட நிலைமை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Solid State Model Question Paper )

Write your Comment