புறப்பரப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. இயற்புறப்பரப்பு கவர்ச்சிக்கு பின்வருவனவற்றுள் எது தவறானது?

    (a)

    மீள்தன்மை கொண்டது 

    (b)

    வெப்பநிலை அதிகரிக்கும்போது அதிகரிக்கிறது

    (c)

    பரப்பு கவர்தல் வெப்பம் குறைவு

    (d)

    புறப்பரப்பு பரப்பளவு அதிகரிக்கும் போது அதிகரிக்கிறது

  2. மூடுபனி என்பது எவ்வகை கூழ்மம்?

    (a)

    வாயுவில் திண்மம்

    (b)

    வாயுவில் வாயு

    (c)

    வாயுவில் நீர்மம்

    (d)

    நீர்மத்தில் வாயு

  3. As2S கூழ்மத்தை திரியச் செய்ய மிகவும் பயனுள்ள மின்பகுளி __________

    (a)

    NaCl

    (b)

    Ba(NO3)

    (c)

    K3[Fe(CN)6

    (d)

    Al (SO4)

  4. ஒரு கூழ்மக்கரைசல் வழியே ஒளிகற்றையை செலுத்தும்போது காணக்கிடைக்கும் நிகழ்வு ___________

    (a)

    எதிர்மின்வாய் தொங்கலசைவு

    (b)

    மின்முனைக்கவர்ச்சி

    (c)

    திரிதல்

    (d)

    டிண்டால் விளைவு

  5. கொல்லோடியன் என்பது  பின்வருவனவற்றுள் எதன் ஆல்கஹால்   ஈதர் கலவை யில் 4% கரைசலாகும்?

    (a)

    நை ட்ரோகிளிசரின்

    (b)

    செல்லுலோஸ்  அசிட்டேட்

    (c)

    கிளைக்கால்  டைநைட்ரேட்

    (d)

    நை ட்ரோசெல்லுலோஸ்

  6. 3 x 2 = 6
  7. NHஅல்லது CO2 ஆகிய இரண்டில் எது கரியின் புறப்பரப்பில் எளிதில் பரப்புகவரப்படுகிறது? ஏன்?

  8. வீழ்படிவை கூழ்மக் கரைசலாக மாற்றுவதற்காக கூழ்மமாக்கி சேர்க்கப்படுகிறது. இக்கூற்றை  எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  9. கூழ்ம நிலையிலுள்ள  Fe(OH) மற்றும் As2O ஆகியவற்றை ஒன்றாக கலக்கும்போது நிகழ்வதென்ன?

  10. 3 x 3 = 9
  11. ஜியோலைட்டுகள் வினைவேக மாற்றத்தின் சில சிறப்புப் பண்புகளை விவரி.

  12. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.

  13. ஒரு பொருள் நல்ல வினைவேக மாற்றியாக திகழ பரப்பு நீக்கம் அவசியம். ஏன்?

  14. 3 x 5 = 15
  15. வினைவேகமாற்ற நச்சுகள் பற்றி குறிப்பு வரைக.

  16. வினைவேக மாற்றம் பற்றிய இடைநிலைச் சேர்மம் உருவாதல் கொள்கையை  ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  17. ஒருபடித்தான மற்றும் பலபடித்தான வினைவேக மாற்றங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகள் யாவை ?

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் புறப்பரப்பு வேதியியல் மாதிரி வினாத்தாள் ( 12th Chemistry - Surface Chemistry Model Question Paper )

Write your Comment