இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. நிறமற்ற சேர்மத்தை தரும் அயனி எது?

    (a)

    Sc3+

    (b)

    V3+

    (c)

    Ti3+

    (d)

    Cr3+

  2. கூற்று A: 5s மற்றும் 4d ஆர்பிட்டால்களில் ஆற்றல்கள் ஏறத்தாழ சமம்
    காரணம் R: 4d மற்றும் 5s ஆர்பிட்டால்களின் ஒப்பிட்டு ஆற்றல்கள் உட்கரு சுமை மற்றும் எலக்ட்ரான் விநியோகத்தைப் பொறுத்து மாறுபடுகிறது 

    (a)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.

    (b)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி 

  3. கூற்று A: இடைநிலைத் தனிமங்களின் அடர்த்தி, உருகுநிலை மற்றும் கொதிநிலை ஆகிய அதிகம்
    காரணம் R: Zn, Cd மற்றும் Hg ஆகியன முழுவதும் நிரம்பிய d ஆர்பிட்டால்களை கொண்டுள்ளதால் குறைந்த உருகு நிலை மற்றும் கொதி நிலையைக் கொண்டுள்ளன.

    (a)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்குகிறது.

    (b)

    A மற்றும் R இரண்டுமே சரி, R ஆனது A யினை விளக்கவில்லை

    (c)

    A சரி ஆனால் R தவறு

    (d)

    A தவறு ஆனால் R சரி

  4. லாந்தனைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை ____________

    (a)

    +4

    (b)

    +2

    (c)

    +6

    (d)

    +3

  5. _________ க்கு அணைவுச் சேர்மங்களை உருவாக்கும் தன்மை அதிகம்

    (a)

    லாந்தனைடுகள்

    (b)

    ஆக்டினைடுகள்

    (c)

    சீரியம்

    (d)

    யூரோப்பியம்

  6. 5 x 2 = 10
  7. Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?

  8. ஆக்டினைடு அயனிகள் நிறமுள்ளவை. ஏன்?

  9. Mn2+ அயனியில் எத்தனை தனித்த எலக்ட்ரான்கள் உள்ளன? அவை எவ்வாறு அதன் காந்தத் தன்மையை பாதிக்கின்றன? 

  10. இடைநிலைத்தனிமங்கள் நிறமுள்ள அயனியைத் தோற்றுவிப்பதன் காரணம் யாது?

  11. உலோகத்தின் ஆக்சோ எதிர் அயனிகளில் அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலை காணப்படுவது ஏன்?

  12. 5 x 3 = 15
  13. இடைநிலைத் தனிமங்கள் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் காரணம் யாது?

  14. குரோமைல் குளோரைடு சோதனையை விளக்குக

  15. பொட்டாசியம் டை குரோமேட்டின் பயன்களை எழுதுக

  16. பொட்டாசியம் பெர்மாங்கனேட் பயன்களை எழுதுக 

  17. K2Cr2O7 மீது வெப்பத்தின் விளைவு யாது?

  18. 4 x 5 = 20
  19. i) லாந்தனைடுகளில் எது பெரிய Ln3+ அயனி?
    ii) ஒரு தனித்த எலக்ட்ரானின் காந்த திருப்புத் திறன் மதிப்பு 1.1 BM எனில் குரோமியம் அனுவின் காந்த திருப்புத் திறனைக் கணக்கிடுக.
    iii) பெர்மாங்கனேட் அயனியில் அணைத்து Mn மற்றும் O பிணைப்புகளும் சகப்பிணைப்புகள், காரணம் தருக.

  20. கரு ஊதா நிறம் கொண்ட மாங்கனீசு சேர்மம் (A) சூடுபடுத்தும்போது சிதைவடைந்து ஆக்சிஜனுடன் சேர்மம் (B) மற்றும் (C) ஐ தருகிறது. சேர்மம் (C) KOH உடன் பொட்டாசியம் நைட்ரேட் முன்னிலையில் வினைபுரிந்து சேர்மம் (B) ஐத் தருகிறது. அடர் H2SO4 உடன் NaCl சேர்ந்து சேர்மம் (C) ஐ சூடுபடுத்தும் போது குளோரின் வாயு வெளியேறுகிறது. சேர்மம் (D) உருவாகிறது சேர்மங்கள் A, B, C, D ஐ கண்டறிந்து வினைகளைத் தருக. 

  21. குரோமேட் மற்றும் டைகுரோமேட் அயனியின் அமைப்பினை விவரி?

  22. KMnO4 ன் ஆக்சிஜனேற்ற பண்பினை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th வேதியியல் - இடைநிலை மற்றும் உள் இடைநிலைத் தனிமங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Chemistry - Transition And Inner Transition Elements Model Question Paper )

Write your Comment