கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. λ  அலைநீளமுள்ள கதிர்வீச்சினால்  ஒரு உலோகப்  பரப்பு  ஒளியூட்டபடும் போது, அதன்  நிறுத்து  மின்னழுத்தம்  v   ஆகும். 2λ  அலைநீளமுள்ள  ஒளியினால்  அதே  பரப்பு  ஒளியூட்டப்பட்டால், நிறுத்த  மின்னழுத்தம்  \(\frac {V}{4}\) ஆகும் . எனில்  அந்த  உலோகப்பரப்பிற்கான  பயன்தொடக்க  அலைநீளம் ________.

    (a)

    (b)

    (c)

    \(\frac{5}{2}\) λ

    (d)

    3 λ

  2. 330 nm அலைநீளம் கொண்ட ஒளியானது 3.55ev வெளியேற்று ஆற்றல் கொண்ட உலோகத்தின் மீது படும் போது, உமிழப்படும் எலக்ட்ரானின் அலைநீளமானது (h = 6.6 × 10-34Js எனக் கொள்க)_____.

    (a)

    < 2.75 ×10-9

    (b)

    ≥ 2.75 × 10-9

    (c)

    ≤ 2.75 × 10-12 m 

    (d)

    < 2.75 × 10-10 m 

  3. 520 nm அலைநீளம் கொண்ட ஒரு ஒளி மூலம் ஒரு வினாடிக்கு 1.04 × 1015 ∴போட்டான்களை  வெளிவிடுகிறது. 460nm அலைநீளம் கொண்ட இரண்டாவது ஒளிமூலம் ஒரு வினாடிக்கு 1.38 × 1015  ∴போட்டான்களை வெளிவிடுகிறது. இரண்டாவது மூலத்தின் திறனுக்கும்  முதல் மூலத்தின் திறனுக்கும் இடையே உள்ள விகிதம் _________

    (a)

    1:00

    (b)

    1.02

    (c)

    1.5

    (d)

    0.98

  4. சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm  எனவும், அதன்  சராசரி  திறன்  3.8 × 1026  W  எனவும்  கொள்க. சூரிய  ஒளியிலிருந்து ஒரு வினாடி நேரத்தில் மனிதனின் கண்கள் பெறக்கூடிய ∴போட்டான்களின் தோராயமான  எண்ணிக்கையானது ____

    (a)

    1045

    (b)

    1042

    (c)

    1054

    (d)

    1051

  5. A, B மற்றும் C என்னும் உலோகங்களின் வெளியேற்று ஆற்றல்களின் முறையே 1.92 eV, 2.0 eV மற்றும் 5.0 eV ஆகும். 4100 A\(\circ\) அலைநீளம் கொண்ட ஒளி படும் போது, ஒளிஎலக்ட்ரான்களை உமிழும் உலோகம் / உலோகங்கள் ______.

    (a)

    A  மட்டும் 

    (b)

    A  மற்றும்  B 

    (c)

    அனைத்து  உமிழும் 

    (d)

    ஏதுமில்லை 

  6. 5 x 2 = 10
  7. உலோகங்களில்  கட்டுறா எலக்ட்ரான்கள் ஏன் அதிக எண்ணிக்கையில் உள்ளன?

  8. ஓர் உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறு. அதன் அலகைத் தருக.

  9. ஒளிமின் விளைவு என்றால் என்ன?

  10. படுகதிரின் ஒளிச்செறிவைப் பொருத்து ஒளிமின்னோட்டம் எவ்வாறு மாறுபடுகிறது?

  11. பயன்தொடக்க  அதிர்வெண்  என்பதை  எவ்வாறு  வரையறுப்பாய்?

  12. 5 x 3 = 15
  13. ஒளி மின்கலம் என்றால் என்ன? ஒளி மின்கலத்தின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடுக.

  14. டி ப்ராய் கருதுகோளினைக் கூறுக.

  15. எலக்ட்ரான் அலை இயல்பை விளக்கும் சோதனை ஒன்றினைக் குறிப்பிடுக. எலக்ட்ரான் கற்றை பயன்படுத்தும்  இச்சோதனையில் எந்த நிகழ்வு உற்று நோக்கப்படுகிறது?

  16. எலக்ட்ரான் மற்றும் ஆல்பா துகள் ஆகிய இரண்டும் சமமான இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன எனில், அவற்றுடன் தொடர்புடைய டி ப்ராய் அலைநீளங்கள் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன?

  17. 4 x 5 = 20
  18. ஒளி உமிழ்வு மின்கலத்தின் அமைப்பு  மற்றும் வேலை செய்யும் விதத்தை விளக்குக.

  19. எலக்ட்ரானின் டிப்ராய் அலைநீளத்திற்கான சமன்பாட்டினைப்  பெறுக.

  20. எலக்ட்ரான் நுண்ணோக்கியின் தத்துவம் மற்றும் வேலை செய்யும் விதத்தை சுருக்கமாக விளக்குக.

  21. எலக்ட்ரானின் அலை  இயல்பினை  விவரிக்கும்  டேவிசன் -ஜெர்மர்  சோதனையை  சுருக்கமாக  விவரி.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Dual Nature of Radiation and Matter Model Question Paper )

Write your Comment