நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒரு பொருளானது நேர்மின்னூட்டம் பெற்றிருக்குமேயானால் அது குறிப்பது____

    (a)

    இவை நேர்மின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கும்

    (b)

    அவை இருமின்னூட்ட தன்மையும் பெற்றிருக்கும், ஆனால் நேர் மின்னூட்ட தன்மை அதிகமாக இருக்கும்

    (c)

    அவை சமமான மின்னூட்ட தன்மை கொண்டிருக்கும். ஆனால் நேர் மின்னூட்டம் வெளிப்புறத்தில் அமையும்

    (d)

    எதிர் மின்னூட்டம் சிறிய அளவில் விலகி இருக்கும் 

  2. மாறாத மின்னழுத்தம் உள்ள பகுதி_______

    (a)

    சீரான மின்புலப்பகுதி

    (b)

    மின்புலம் சுழியாகும் பகுதி

    (c)

    மின்னூட்டம் வெளியில் அமைந்து மின்புலம் மாறும் பகுதி 

    (d)

    ஏதுமில்லை

  3. 12 V மின்கலனில் நேர்மின்வாய் புவியோடு இணைக்கப்படும் எனில் எதிர் மின்வாய் பெற்றிருக்கும் மின்னழுத்தம்_____

    (a)

    -6 V

    (b)

    +12 V

    (c)

    சுழி

    (d)

    -12V

  4. மின்காப்பு பொருளொன்றின் மின்னழுத்த சரிவினை துளையிடும் நிகழ்வு________ 

    (a)

    மின்காப்பு மாறிலி

    (b)

    மின்காப்பு வலிமை

    (c)

    மின்காப்புத் தடை

    (d)

    மின்காப்பு எண்

  5. வான்-டி-கிராப் மின்னியற்றியின் மின்காப்பு முறிவு காற்றில்_____ 

    (a)

    2 x 108 Vm-1

    (b)

    3 x 108 Vm-1

    (c)

    2 x 108 Vm-1

    (d)

    2 x 104 Vm-1

  6. 5 x 2 = 10
  7. நீர் ஒரு சிறந்த கரைப்பானாக செயற்படுகிறது. காரணம் கூறுக.

  8. நுண்ணலை அடுப்பின் செயல்பாட்டை விவரி?

  9. மின்னூட்டங்களின் கூட்டல் பண்பு என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.

  10. கணினியில் மின்தேக்கி எவ்வாறு செயல்படுகிறது?

  11. மின்தேக்கி என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. கடத்தியின் உட்புறத்தில் உள்ள மின்துகளின் நிகர மின்னூட்டம் சுழி. கத்தியின் புறப்பரப்பில் மட்டுமே மின்துகள்கள் இருக்க முடியும். மெய்ப்பிக்கவும்.

  14. மின்காப்பு பெற்ற மின்தேக்கியின் உள்ளே தூண்டப்படும் நிகழ்வை விவரி

  15. இணைத்தட்டு மின்தேக்கியின் மின்தேக்குத்திறன் சமன்பாட்டில் நீவிர் அறிந்தவற்றை தொகுத்து எழுதுக

  16. தொடரிணைப்பில் மின்தேக்கிகள் பற்றி விவரி

  17. பக்க இணைப்பில் மின்தேக்கிகள் பற்றி விவரி

  18. 4 x 5 = 20
  19. ஒரு சிறிய மின்னூட்டம் பெற்ற கோளங்கள் ஒன்றையொன்று 2 x 10-3 N விசையுடன் விரட்டுகின்றன. ஒரு கோளத்தின் மீதான மின்னூட்டம் மாற்றத்தைப்போல் இருமடங்கு ஆகும். மின்னூட்டங்களில் ஒன்றை மற்றொன்றிலிருந்து 10 cm தொலைவுக்கு வெளியே நகர்த்தினால் விசையானது 5 x 10-4N ஆகும். அம்மின்னூட்டங்களையும் அவற்றிக்கிடையேயான அதன் ஆரம்பத் தொலைவினையும் கணக்கிடுக 

  20. 0.12 m ஆரம் கொண்ட கோள வடிவ கடத்தியின் பரப்பு முழுவதும் 1.6 x 10-7 C மின்னூட்டம் சீராகப் பரவியுள்ளது.
    i) கூட்டின் உள்ளே
    ii) கூட்டின் மீது
    iii) கூட்டின் மையத்திலிருந்து 0.18 m தொலைவில் உள்ள புள்ளியில் மின்புலம் என்னவாகும்?

  21. காஸ் விதியை திறனாய்வு செய்து, விவரி.

  22. மின்னூட்டம் பெற்ற இரு இணையான முடிவிலா தட்டுகளினால் உருவாகும் மின்புலத்திற்கான கோவையை வருவி.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - நிலைமின்னியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Electrostatics Model Question Paper )

Write your Comment