ஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒளிவிலகல் எண் 1.47 கொண்ட இருபுற குவிலென்ஸ் ஒன்று திரவம் ஒன்றில் மூழ்கி, சமதள கண்ணாடித் தகடு போன்று செயல்படுகிறது எனில், திரவத்தின் ஒளிவிலகல் எண் இருக்க வேண்டும்?

    (a)

    ஒன்றைவிடக் குறைவு

    (b)

    கண்ணாடியைவிடக் குறைவாக

    (c)

    கண்ணாடியைவிட அதிகமாக

    (d)

    கண்ணாடிக்குச் சமமாக

  2. தட்டைக் குவிலென்ஸ் ஒன்றின் வளைவுப்பரப்பின் வளைவு ஆரம் 10 cm. மேலும், அதன் ஒளிவிலகல்எண் 1.5. குவிலென்சின் தட்டைப்பரப்பின் மீது வெள்ளி பூசப்பட்டால் அதன் குவியத்தூரம்_____.

    (a)

    5 cm

    (b)

    10 cm

    (c)

    15 cm

    (d)

    20 cm

  3. கருமை நிறத் தாளின் மீது 1mm இடைவெளியில் இரண்டு வெள்ளை நிறப் புள்ளிகள் காணப்படுகின்றன. தோராயமாக 3 mm விட்டமுடைய விழி லென்ஸ் உள்ள விழியினால் இப்புள்ளிகள் பார்க்கப்படுகின்றன. விழியினால் இப்புள்ளிகளைத் தெளிவாகப் பகுத்துப்பார்க்கக்கூடிய பெருமத் தொலைவு என்ன? [பயன்படும் ஒளியின் அலைநீளம் =500 nm]

    (a)

    1 m

    (b)

    5 m

    (c)

    3 m

    (d)

    6 m

  4. 1.0×10–5 cm அகலம் கொண்ட ஒற்றைப் பிளவினால் ஏற்படும் விளிம்புவிளைவின் முதல் சிறுமம் 300 எனில், பயன்படுத்தப்படும் ஒளியின் அலைநீளம் என்ன?

    (a)

    400 Å

    (b)

    500 Å

    (c)

    600 Å

    (d)

    700 Å

  5. கண்ணாடி தட்டு ஒன்றின் மீது 600 கோணத்தில் ஒளிக்கதிர் விழுகிறது. எதிரொளிப்பு மற்றும் ஒளிவிலகல் அடைந்த ஒளிக்கதிர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக அமைந்தால், கண்ணாடியின் ஒளிவிலகல் எவ்வளவு?

    (a)

    \(\sqrt { 3 } \)

    (b)

    \(\frac { 3 }{ 2 } \)

    (c)

    \(\sqrt { \frac { 3 }{ 2 } } \)

    (d)

    2

  6. 5 x 2 = 10
  7. தோற்ற ஆழத்திற்கான கோவையை வருவி.

  8. ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும் லென்ஸ்களுக்கான தொகுபயன் குவியத்தூரத்திற்கான சமன்பாட்டைப் பெறுக.

  9. ஒளியின் குறுக்கீட்டு விளைவு என்றால் என்ன?

  10. ப்ரனெல் தொலைவு என்றால் என்ன? அதற்கான சமன்பாட்டைப் பெறுக.

  11. எதிரொளிப்பு தொலைநோக்கியைப் பயன்படுத்துவதில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. ஒளி இழை ஒன்றின் உள்ளகத்தின் ஒளிவிலகல் எண் 1.68 மற்றும் அதன் உறைப்பூச்சின் ஒளிவிலகல் எண் 1.44. இந்த ஒளி இழை காற்று ஊடகத்தில் உள்ளபோது அதன் ஏற்புக்கோணம் என்ன? மேலும் வெளிப்பூச்சு இல்லாத நிலையில் அதன் ஏற்புக்கோணத்தை கணக்கிடுக.

  14. 0.25 m தடிமன் கொண்ட கண்ணாடிப்பட்டகத்தின் ஒளிவிலகல் எண் 1.5 ஆகும். ஒளிக்கதிர் ஒன்று கண்ணாடிப்பட்டகத்தின் ஒரு பக்கத்தின் மீது 60o கோணத்தில் விழுந்து அடுத்த பக்கம் வழியாக வெளிவருகிறது எனில், ஒளி அடைந்த பக்கவாட்டு இடப்பெயர்ச்சி என்ன?

  15. ஒளியின் வேகத்தைக் கண்டறியும் ஃபிஸீயு (Fizeau) முறையை விவரி.

  16. யங் இரட்டைப் பிளவு ஆய்வில் பெறப்படும் பட்டை அகலத்திற்கான கோவையைப் பெறுக.

  17. நிறமாலைமானி ஒன்றின் வெவ்வேறு பாகங்களைக் கூறி, நிறமாலை மானியின் தொடக்கச் சீரமைவுகளைப் பற்றி விளக்குக.

  18. 4 x 5 = 20
  19. Io ஒளிச்செறிவு கொண்ட இரண்டு ஒளி மூலங்கள் உள்ளன. இவ்விரண்டு ஒளி அலைகளுக்கிடையேயான கட்டவேறுபாடு \(\pi \)/3 ஆக உள்ள  புள்ளியில், தொகுபயன் ஒளிச்செறிவைக் காண்க.

  20. 450 nm அலைநீளமுடைய ஒளி ஒன்றின் பாதை வேறுபாடு 3 mm எனில், அதற்குச் சமமான கட்ட வேறுபாட்டைக் காண்க.

  21. 500 nm அலைநீளமுடைய ஒற்றை நிற ஒளியானது விளிம்பு விளைவுக் கீற்றணியின் மீது, விழுகிறது. 300 கோணத்தில் நான்காம் வரிசை பெரும ஒளிச்செறிவு வரி கிடைக்கிறது எனில், கீற்றணியில் ஒரு சென்டிமீட்டர் அகலத்திற்கு அமைந்துள்ள பிளவுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  22. காவலூரில் அமைந்துள்ள வைனு பாப்பு (Vainu Bappu) வானியல் ஆய்வு மையத்தில் உள்ள பொருளருகு லென்சின் விட்டம் 2.3 m 589 nm அலைநீளம் கொண்ட ஒளியினைப் பயன்படுத்தினால் கிடைக்கும் கோணப் பிரிதிறனைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - ஒளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Optics Model Question Paper )

Write your Comment