திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 03:00:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

    15 x 1 = 15
  1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில் எது சீரான மின்புலத்தை உருவாக்கும்?

    (a)

    புள்ளி மின்துகள் 

    (b)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலாக் கம்பி 

    (c)

    சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

    (d)

    சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

  2. மாறாத மின்னழுத்தம் உள்ள பகுதி_______

    (a)

    சீரான மின்புலப்பகுதி

    (b)

    மின்புலம் சுழியாகும் பகுதி

    (c)

    மின்னூட்டம் வெளியில் அமைந்து மின்புலம் மாறும் பகுதி 

    (d)

    ஏதுமில்லை

  3. ஒரு மீட்டர் நீளத்திற்கு 2Ω மின்தடை கொண்ட கம்பியானது 1m ஆரமுள்ள வட்ட வடிவமாக மாற்றப்படுகிறது. வட்டத்தின் வழியே எதிரெதிராக படத்தில் உள்ள A மற்றும் B புள்ளிகளுக்கிடையே தொகுபயன் மின்தடையின் மதிப்பு காண்க.

    (a)

    π Ω

    (b)

    \(\frac{\pi}{2} \Omega\)

    (c)

    2πΩ

    (d)

    \(\frac { \pi }{ 4 } \)Ω

  4. மின்தடையானது பொருள்களின் _______ எதிர்ப்பை அளவிடும்.

    (a)

    மின்னழுத்த வேறுபாடு 

    (b)

    மின்னோட்டம் 

    (c)

    மின் விசை 

    (d)

    இயக்கத்தில் உள்ள புரோட்டான்கள் 

  5. சீரான மின்னுட்ட அடர்த்தி σ கொண்ட மின்னுட்டப்பட்ட இணைத்தட்டு மின்தேக்கியின் இரண்டு தட்டுகளுக்கு நடுவே எலக்ட்ரான் ஒன்று நேர்கோட்டுப் பாதையில் செல்கிறது. சீரான கந்தபுலத்திற்கு \(\vec { B } \) நடுவே இந்த அமைப்பு உள்ளபோது, எலக்ட்ரான் தகடுகளைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம்_____.

    (a)

    ε\(_{ \circ }\frac { elB }{ \sigma } \)

    (b)

    ε\(_{ \circ }\frac { lB }{ \sigma l } \)

    (c)

    ε\(_{ \circ }\frac { lB }{ e\sigma } \)

    (d)

    ε\(_{ \circ }\frac { lB }{ \sigma } \)

  6. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண் யாது?

    (a)

    7.54 μH

    (b)

    8.54 μH

    (c)

    9.54 μH

    (d)

    10.54 μH

  7. மின்மாற்றியில் மாறாதது எது?

    (a)

    மின்னழுத்தம் 

    (b)

    அதிர்வெண் 

    (c)

    மின்னோட்டம் 

    (d)

    ஏதுமில்லை 

  8. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தோடு இணைந்த மின்காந்த அலையொன்று எதிர்க்குறி x அச்சுத்திசையில் பரவுகிறது. பின்வருவனவற்றுள் எச்சமன்பாட்டைப் பயன்படுத்தி அந்த மின்காந்த அலையினை குறிப்பிடலாம் 

    (a)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { k } \)

    (b)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { k } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

    (c)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { j } \)

    (d)

    \(\vec { E } ={ E }_{ 0 }\hat { j } \) மற்றும் \(\vec { B } ={ B }_{ 0 }\hat { i } \)

  9. மாறா வீச்சு கொண்ட ரேடியோ அலைகளை உருவாக்குவது____ 

    (a)

    திருத்தி

    (b)

    வடிகட்டி

    (c)

    F.E.T

    (d)

    அலையியற்றி

  10. பின்வருவனவற்றுள் விண்மீன்கள் மின்னுவதற்கான சரியான காரணம் எது?

    (a)

    ஒளி எதிரொளிப்பு

    (b)

    முழு அ்க எதிரொளிப்பு

    (c)

    ஒளி விலகல்

    (d)

    தளவிளைவு

  11. சூரிய ஒளியின் சராசரி அலைநீளம் 550 nm  எனவும், அதன்  சராசரி  திறன்  3.8 × 1026  W  எனவும்  கொள்க. சூரிய  ஒளியிலிருந்து ஒரு வினாடி நேரத்தில் மனிதனின் கண்கள் பெறக்கூடிய ∴போட்டான்களின் தோராயமான  எண்ணிக்கையானது ____

    (a)

    1045

    (b)

    1042

    (c)

    1054

    (d)

    1051

  12. அணுக்கரு கிட்டத்தட்ட கோள வடிவம் கொண்டது எனில் நிறை எண் A கொண்ட அணுக்கரு ஒன்றின் பரப்பு ஆற்றல் எவ்வாறு மாறுபடும்?

    (a)

    \(\mathrm{A}^{\frac{2}{3}}\)

    (b)

    \(\mathrm{A}^{\frac{4}{3}}\)

    (c)

    \(\mathrm{A}^{\frac{1}{3}}\)

    (d)

    \(\mathrm{A}^{\frac{5}{3}}\)

  13. ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழ்ப்படக்காரணம்_______.

    (a)

    மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 

    (b)

    லென்சுகளின் செயல்பட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு

    (c)

    சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்

    (d)

    மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.

  14. ரோபோக்களில் தசைக்கம்பிகள் உருவாக்க பயன்படும் உலோகக்கலவைகள் _______.

    (a)

    வடிவ நினைவு உலோகக்கலவைகள் 

    (b)

    தங்கம் தாமிர  உலோகக்கலவைகள் 

    (c)

    தங்கம் வெள்ளி உலோகக்கலவைகள் 

    (d)

    இரு பரிமாண உலோகக்கலவைகள் 

  15. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 2 = 12
  16. நிலை மின்னியல் என்றால் என்ன?

  17. ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?

  18. காரில் முகப்பு விளக்கு எரியும் நிலையில் என்ஜினை இயக்கும்போது, முகப்பு விளக்கின் பொலிவு சிறிது குறையும் ஏன்?

  19. நிறை நிறமாலைமானியின் பயன்களை தருக.

  20. மின்காந்த அலையின் செறிவு என்ற கருத்தை விவரி.

  21. கதிரியக்கச் செயல்பாடு அல்லது சிதைவு வீதம் என்றால் என்ன? அதன் அலகு என்ன?

  22. ஒரு குறைகடத்தி பொருளில் எலக்ட்ரான்துளை இணை எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

  23. இணையத்தின் வழியே பொருட்களைப் பயன்படுத்துதல் (Internet of Things, IoT) என்றால் என்ன?

  24. நானோ பொருட்கள் மற்றும் பேரளவு பொருட்கள் இடையே உள்ள வேறுபாடு யாது ?

  25. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    6 x 3 = 18
  26. உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும் கொண்டபொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

  27. ஏன் கடத்திகளுக்கான மின்தடை வெப்பநிலை எண் ∝ மேற்குறியுடையது?

  28. ஒரு குறிப்பிட்ட இடத்தில் புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக்கூறு மற்றும் செங்குத்துக் கூறுகள் முறையே 0.15 G மற்றும் 0.26 G எனில், அந்த இடத்தின் காந்த சரிவுக் கோணம் மற்றும் தொகுபயன் காந்தப்புலம் ஆகியவற்றைக் கணக்கிடுக

  29. சமஅளவு மற்றும் நிறை கொண்ட கோள வடிவ கல் மற்றும் இரும்பு குண்டை ஒரே நேரத்தில் விழச் செய்தால் எது முதலில் புவியை வந்தடையும்? காரணம் கூறு.

  30. ஊடகம் ஒன்றின் ஒப்புமை காந்த உட்புகுதிறன் 2.5 மற்றும் ஒப்புமை மின் விடுதிறன் 2.25 எனில் அவ்ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணைக் காண்க.

  31. படத்தின் உதவியுடன் அணுக்கரு உலை வேலை செய்யும் விதத்தை விளக்கவும்.

  32. ஒரு முழு அலைதிருத்தியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விளக்குக.

  33. GPS பற்றி நீ அறிந்து கொண்டது யாது? GPS  இன் சில பயன்பாடுகளை எழுதுக.

  34. ரோபோக்கள் உருவாக்க ஏன் எஃகு தேர்வு செய்யப்படுகிறது?

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    5 x 5 = 25
    1. சோடிய ஆவி விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியின்  அலைநீளம் வெற்றிடத்தில் 5893Å. இந்த ஒளி 1.33 ஒளிவில்கல் எண் கொண்ட நீரின் வழியே செல்லும்போது பினவருவனவற்றைக் காண்க.
      (அ) அலைநீளம்,
      (ஆ) திசைவேகம் மற்றும்
      (இ) அதிர்வெண்

    2. படத்தில் காட்டப்பட்டுள்ள போது உமிழ்ப்பான் டிரான்சிஸ்டர் மின்சுற்றில் மின்னோட்டம் பெருக்கம் 120 ஆகும் எனில் DC பளுகோட்டை வரைந்து அதில் Q புள்ளியைக் குறிக்க (VBE  யின் மதிப்பு புறக்கணிக்கப்படுகிறது).

    1. நீள் அடர்த்தி 0.2 g m-1 கொண்ட கடத்தி ஒன்று படத்தில் காட்டியுள்ளவாறு இரண்டு நெகிழ்ச்சித்தன்மை கொண்ட கம்பிகளினால் தொங்கவிடப்பட்டுள்ளது. தாளுக்கு உள்ளே செல்லும் திசையில் 1 T வலிமை கொண்ட காந்தப்புலத்திற்குள் இவ்வமைப்பு வைக்கப்படும்போம், கடத்தி தொங்க விடப்பட்டுள்ள கம்பிகளின் இழுவிசை சுழியாகிறது எனில், கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் மற்றும் மின்னோட்டம் பாயும் திசை ஆகிவற்றைக்ற்றைக் காண்க. g = 10 m s-2 எனக் கருதுக.

    2. போர் அணு மாதிரியில், நிலை மாற்றங்களின் (transitions) அதிர்வெண் பின்வரும் சமன்பாட்டினால் அறியப்படுகிறது. \(v=Rc\left( \frac { 1 }{ { n }^{ 2 } } -\frac { 1 }{ { m }^{ 2 } } \right) \), இங்கு n < m பின்வரும் நிலை மாற்றங்களைக் கருதுக.

      நிலை மாற்றங்கள் m⟶n
      1 3⟶2
      2 2⟶1
      3 3⟶1

      இந்நிலை மாற்றங்களின் அதிர்வெண் கூட்டல் விதிக்கு (இவ்விதி ரிட்ஸ் சேர்க்கைத் தத்துவம் என்றழைக்கப்படுகிறது) உட்படும் என்பதை நிறுவுக.

    1. மீட்டர் சமனச்சுற்றில் இடது பக்க இடைவெளியில் 10ᘯ மின்தடை உள்ள போது சமனீட்டு நீளம் 51.8 cm. ஆக உள்ளது 108 cm நீளமும் 0.2mm ஆரமும் உடைய கம்பியின் மின்தடையையும் தன்மின் தடை எண்ணையும் கணக்கிடுக.

    2. மின்னேற்றம் அடையும் இணைத்தட்டு மின்தேக்கியானது தட்டு ஒன்றின் மாறும் மின்னூட்டம் அவற்றின் மின்புலபாய மாற்றத்தின் ε0 மதிப்பிற்க்கு சமம் என்பதை நிரூபி. சமன்பாட்டில் \({ \varepsilon }_{ 0 }\frac { d{ \phi }_{ E } }{ dt } \) என்பதன் பெயர் யாது?

    1. ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச் சுருளில் சுற்றுகளின் எண்ணிக்கை முறையே 500 மற்றும் 5000, உள்ளீடு மின்னழுத்தம் 220 V எனில் வெளியீடு மின்னழுத்தம் என்ன?

    2. ஒளி மின்னோட்டத்தின் மீதான மின்னழுத்த வேறுபாட்டின் விளைவை விளக்குக.

    1. 20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும்? (Fused)

    2. ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 12th Physics Revision Model Question Paper 2 )

Write your Comment