குறைகடத்தி எலக்ட்ரானியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஒளி உமிழ்வு டையோடில் ஒளி உமிழ்ப்படக்காரணம்_______.

    (a)

    மின்னூட்ட ஊர்திகளின் மறுஇணைப்பு 

    (b)

    லென்சுகளின் செயல்பட்டால் ஏற்படும் ஒளி எதிரொளிப்பு

    (c)

    சந்தியின்மீது படும் ஒளியின் பெருக்கம்

    (d)

    மிகப்பெரிய மின்னோட்ட கடத்தும் திறன்.

  2. ஓர் அலை இயற்றியல் தொடர்ச்சியான அளவுகள் ஏற்பட _______.

    (a)

    நேர்பின்னூட்டம் இருக்க வேண்டும்.

    (b)

    பின்னூட்ட மாறிலி ஒன்றாக இருக்க வேண்டும்.

    (c)

    கட்டமாற்றம் சுழி அல்லது 2\(\pi \) யாக இருக்க வேண்டும்.

    (d)

    மேற்கூறிய அனைத்தும்.

  3. ஒரு NOT கேட்டின் உள்ளீடு A = 1011 எனில், அதன் வெளியீடானது, _____ 

    (a)

    0100

    (b)

    1000

    (c)

    1100

    (d)

    0011

  4. பின்வருவனவற்றில் எது முன்னோக்குச் சார்பில் உள்ள டையோடினைக் குறிக்கும்.

    (a)

    (b)

    (c)

    (d)

  5. பின்வரும் மின்சுற்றின் வெளியீடு 1 ஆக இருக்கும்போது, உள்ளீடு ABC ஆனது______ 

    (a)

    101

    (b)

    100

    (c)

    110

    (d)

    010

  6. 5 x 2 = 10
  7. உள்ளார்ந்த மற்றும் புறவியலான குறைகடத்திகளை வேறுபடுத்துக.

  8. ஒரு டையோடில் கசிவு மின்னோட்டம் என்பதன் பொருள் என்ன?

  9. ஒரு முழு அலைதிருத்தியின் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு அலைவடிவங்களை வரைக.

  10. ஒரு பொது உமிழ்ப்பான் பெருக்கியில் உள்ளீடு மற்றும் வெளியீடு AC மின்னழுத்தங்களுக்கு இடைப்பட்ட கட்டத்தொடர்பு என்ன? கட்ட புரட்டுகளுக்கான காரணம் என்ன?

  11. டீ மார்கனின் முதல் மற்றும் இரண்டாவது தேற்றங்களைக் கூறுக 

  12. 5 x 3 = 15
  13. ஒரு நல்லியல்பு டையோடு ஒன்றைக் கருதுவவோம். இங்கு AB வழியாகப் பாயும் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

  14. பளு மின்தடை 1 kΩ ஆக இருக்கும்போது செனார் டையோடு வழியாக பாயும் மின்னோட்டத்தைக் கணக்கிடுக (இங்கு டையோடு நல்லியல்பு கொண்டது எனக் கருத வேண்டும்).

  15. ஒளி உமிழ் டையோடு என்றால் என்ன? செயல்படும் தத்துவத்தைப் படத்துடன் தருக.

  16. ஒளி டையோடு என்பதனைப் பற்றிக் குறிப்பெழுதுக.

  17. சூரியமின்கலம் வேலை செய்யும் தத்துவத்தை விவரி. அதன் பயன்பாடுகளைக் குறிப்பிடுக.

  18. 4 x 5 = 20
  19. படத்தில் காட்டப்பட்டுள்ள மின்சுற்றில் உள்ளீடு மின்னழுத்தம் V= 20 V, VBE = 0 V மற்றும் VCE  = 0 V எனில் IB , I மற்றும் β வின் மதிப்புகள் யாவை?
     

  20. பின்வரும் பூலியன் சமன்பாட்டை எளிமைப்படுத்துக.
    AC + ABC = AC அதன் சுற்று விளக்கப்படம் தருக.

  21. ஒரு டிரான்சிஸ்டரின் α = 0.99 மற்றும் VBE = 0.7V என பின்வரும் மின்சுற்றில் தரப்பட்டுள்ளது. எனில், ஏற்பான் மின்னோட்டத்தின் மதிப்பைக் காண்க.

  22. பின்வரும் படத்தில் காட்டப்பட்ட மின்சுற்றில் உள்ள இருமுனை சந்தி டிரான்சிஸ்டரின் மின்னோட்டப் பெருக்கம் β = 50 உமிழ்ப்பான் அடிவாய் VEB = 600 mV மின்னழுத்த வேறுபாட்டிற்குரிய உமிழ்ப்பான் ஏற்பான் மின்னழுத்த வேறுபாட்டினை VEC வோல்டில் கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - குறைகடத்தி எலக்ட்ரானியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Semiconductor Electronics Model Question Paper )

Write your Comment