முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    9 x 1 = 9
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது______.

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

    (b)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

    (c)

    அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

    (d)

    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

  3. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

    (a)

    இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

    (b)

    ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது.

    (c)

    இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

    (d)

    வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

  4. உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை_____.

    (a)

    ரூ. 85,000

    (b)

    ரூ. 1,06,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 64,000

  5. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  6. எந்தப் பதிவேட்டில் சில நடவடிக்கைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன?

    (a)

    ஒற்றைப்பதிவு முறை 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    முழுமைபெறா 

    (d)

    முழுமைபெற்ற 

  7. ஒற்றைப்பதிவு முறையில் கணக்கேடுகள் பராமரிப்பு என்று அழைக்கப்படுவது எது?

    (a)

    முழுமை பெறா பதிவேடுகள் 

    (b)

    நிலையறிக்கை 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    குறிப்பேடுகள் 

  8. ஒரு குறிப்பிட்ட நாளைய சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இருப்பைக் காட்டுகின்ற ஒரு அறிக்கை ________ ஆகும்.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (c)

    நிலை அறிக்கை 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  9. ________ முழுமையாக பேரேட்டுக் கணக்குகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகிறது.

    (a)

    இருப்பாய்வு 

    (b)

    இரட்டைப்பதிவு முறை 

    (c)

    நிலையறிக்கை 

    (d)

    இருப்புநிலைக் குறிப்பு 

  10. 5 x 1 = 5
  11. முழுமைபெறா பதிவேடுகள் 

  12. (1)

    நிலைச் சொத்துகள் மீதான தேய்மானம் 

  13. நிகர இலாபம் 

  14. (2)

    மொத்தக் கடனீந்தோர் க/கு 

  15. மொத்த இலாபம் 

  16. (3)

    இலாப நட்டக் கணக்கு 

  17. இறுதி கடனீதோர் 

  18. (4)

    வியாபாரக் கணக்கு 

  19. தொடக்க கடனாளி 

  20. (5)

    மொத்தக் கடனாளிகள் க/கு 

    7 x 2 = 14
  21. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  22. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  23. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000
    வெளித் திருப்பம் 6,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000
    2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
  24. பின்வரும் தகவல்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும். 

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000
    2018, டிசம்பர் 31 அன்று முதல் 1,80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 40,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 50,000
  25. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

  26. இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக.

  27. நிலை அறிக்கை என்றால் என்ன?

  28. 4 x 3 = 12
  29. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  30. 2017, ஏப்ரல் 1 அன்று கணேஷ் ரூ. 75,000 முதலுடன் தன்னுடைய தொழிலைத் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளை பராமரிக்கவில்லை. 31.03.2018 ஆம் நாளைய அவருடைய ஏடுகளின் விவரங்கள் பின்வருமாறு.

    விவரம் ரூ. விவரம் ரூ.
    ரொக்கம் 5,000 கடனாளிகள் 16,000
    சரக்கிருப்பு 18,000 கடனீந்தோர் 9,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 7,000 வங்கி ரொக்கம் 24,000
    அறைகலன் 3,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 6,000
    நிலம் மற்றும் கட்டடங்கள் 30,000    

    அவ்வாண்டில் தன்னுடைய சொந்தப் பயனுக்காக அவர் ரூ. 15,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 20,000. அவருடைய இலாபம் அல்லது நட்டத்தைக் கண்டறியவும்.

  31. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  32. 2018, ஏப்ரல் 1 அன்று சுபா தன்னுடைய தொழிலை ரூ. 1,20,000 முதலுடன் தொடங்கினார். அவர் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. 2019, மார்ச் 31 அன்று அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    வங்கி மேல்வரைப்பற்று 50,000 சரக்கிருப்பு 1,60,000
    கடனாளிகள் 1,80,000 கடனீந்தோர் 90,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,40,000
    கணினி 30,000 கைரொக்கம் 60,000
    இயந்திரம் 3,00,000    

    அவ்வாண்டில் அவர் தன்னுடைய சொந்த பயனுக்காக ரூ. 30,000 எடுத்துக் கொண்டார். அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.40,000. அவருடைய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

  33. 2 x 5 = 10
  34. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

    விவரம் 1.4.2017 31.3.2018
    ரூ. ரூ.
    வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
    கைரொக்கம் 800 1,500
    சரக்கிருப்பு 12,000 16,000
    கடனாளிகள் 34,000 30,000
    பொறித்தொகுதி 80,000 80,000
    அறைகலன் 40,000 40,000
    கடனீந்தோர் 60,000 72,000

    அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

  35. முழுமை பெறா பதிவேடுகளைப் பராமரித்துவரும் அப்துல் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். 

    விவரம் 1.4.2017 ரூ. 31.3.2018 ரூ.
    சரக்கிருப்பு 1,00,000 50,000
    பற்பல கடனாளிகள் 2,50,000 3,50,000
    ரொக்கம் 25,000 40,000
    அறைகலன் 10,000 10,000
    பற்பல கடனீந்தோர் 1,50,000 1,75,000

    பிற விவரங்கள்:

    விவரம் ரூ. விவரம் ரூ.
    எடுப்புகள் 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 5,35,000
    பெற்ற தள்ளுபடி 20,000 பல்வகைச் செலவுகள் 30,000
    அளித்த தள்ளுபடி 25,000 1.4.2017 அன்று முதல் 2,35,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 4,50,000    

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Accounts From Incomplete Records Model Question Paper )

Write your Comment