இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு______.

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    சொத்து கணக்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  2. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது______.

    (a)

    அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

    (b)

    அந்த ஆண்டின் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

    (c)

    அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

    (d)

    அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

  3. பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

    (a)

    பழைய செய்தித்தாள்கள் விற்றது

    (b)

    சொத்து விற்பனை மீதான நட்டம் 

    (c)

    செயலாளருக்கு வழங்கிய மதிப்பூதியம்

    (d)

    அறைகலன் விற்ற தொகை

  4. உயில்கொடை ஒரு_____.

    (a)

    வருவாயினச் செலவு

    (b)

    முதலினச் செலவு

    (c)

    வருவாயின வரவு

    (d)

    முதலின வரவு

  5. ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ரூ.100 செலுத்துகின்றனர்.நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ரூ. 200; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ 50,000

    (b)

    ரூ 50,200

    (c)

    ரூ 49,000

    (d)

    ரூ 49,800

  6. 4 x 1 = 4
  7. இலாபநோக்கற்ற அமைப்புகள் 

  8. (1)

    கல்வி நிறுவனங்கள் 

  9. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு 

  10. (2)

    ரொக்கக் கணக்கின் தன்மை 

  11. வருவாய் மற்றும் செலவினக் கணக்கு 

  12. (3)

    பெயரளவு கணக்கு 

  13. இருப்பு நிலைக் குறிப்பு 

  14. (4)

    அறிக்கை 

    2 x 2 = 4
  15. கூற்று (A): இலாபநோக்கற்ற அமைப்புகள் பொதுவாக சந்தா தொகையை உறுப்பினர்களிடமிருந்து பருவந்தோறும் வசூலிக்கின்றன.
    காரணம் (R): இவை மாதம் தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கப்படலாம்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  16. கூற்று (A): வருவாய் மற்றும் செலவினக்கணக்கு ஒரு ஆள்சார் கணக்கு ஆகும்.
    காரணம் (R): பயன்படுத்தாமல் இருப்பில் உள்ள விளையாட்டுப் பொருள்கள், இருப்புநிலைக் குறிப்பில் சொத்துகள் பக்கம் இருப்பாகக் காட்டப்படுகிறது.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  17. 6 x 2 = 12
  18. பின்வரும் விவரங்களிலிருந்து 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்பட வேண்டிய சந்தா தொகையினை கணக்கிடவும்.

    சந்தா பெற்றது  ரூ
    2015 - 16 - க்காக 7,500
    2016 –17 - க்காக 60,00
    2017 – 18 - க்காக 1,500
      69,000

    2016-17 ஆம் ஆண்டில் பெற வேண்டிய சந்தா ரூ 2,400. 2016-2017 ஆம் ஆண்டிற்கான சந்தா 2015-2016 ஆம் ஆண்டில் பெற்றது ரூ 1,000

  19. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் சந்தா எவ்வாறு தோன்றும் என்பதைக் காட்டவும்.
    2018-ல் பெற்ற சந்தா ரூ16,000-ல் 2017 ஆம் ஆண்டுக்கான ரூ.3,000 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கானரூ.5,000 அடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் பெறவேண்டிய சந்தா ரூ. 4,000. 2017 ஆம் ஆண்டில் 2018 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது ரூ.2,000.

  20. இலாப நோக்கற்ற அமைப்பின்பொருள் தரவும்.

  21. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு என்றால் என்ன?

  22. உயில்கொடை என்றால் என்ன?

  23. பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.

      ரூ
    1.4.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,600
    அவ்வாண்டில் வாங்கிய எழுதுபொருள்கள்  6,500
    31.3.2018 அன்று எழுதுபொருள்கள் இருப்பு 2,200
  24. 5 x 3 = 15
  25. திருச்சி கல்வியியல் மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்.

    விவரம் ரூ விவரம் ரூ 
    தொடக்க  இருப்பு (1.1.2018) 20,000 பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது 12,000
    முதலீடுகள் செய்தது 80,000 அறைகலன் விற்றது 5,000
    மதிப்பூதியம் செலுத்தியது 3,000 பொதுச்செலவுகள்  7,000
    நன்கொடை பெற்றது 80,000 அஞ்சல் செலவுகள் 1,000
    தணிக்கைக் கட்டணம் செலுத்தியது 2,000 சந்தா பெற்றது 10,000
  26. கரூர் சமூக மன்றத்தின் 2018 மார்ச் 31 ஆம் நாளைய முதல் நிதியினைக் கணக்கிடவும்.

    விவரம் (31.03.2018) ரூ 
    அறைகலன் 50,000
    கட்டடம் 40,000
    2017-18 ஆம் ஆண்டிற்கான சந்தா பெற வேண்டியது 10,000
    2018-19 ஆம் ஆண்டிற்கான சந்தா முன்கூட்டிப் பெற்றது 5,000
    கடன் வாங்கியது 10,000
    முதலீடுகள் 20,000
    கைரொக்கம்  4,000
    வங்கி ரொக்கம் 6,000
  27. இலாப நோக்கற்ற அமைப்பின் இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன?
    (அ) விளையாட்டுப் பொருள்கள்கள் விற்பனை
    (ஆ) ஆயுள் உறுப்பினர் கட்டணம்
    (இ) தொடர் விளையாட்டுப் போட்டி நிதி

  28. பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

  29. பின்வரும் விவரங்கள் மார்த்தாண்டம் பெண்கள் பண்பாட்டு மன்றத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும் 

      ரூ
    1.4.2018 அன்று விளையாட்டுப் பொருள்கள் இருப்பு 16,000
    அவ்வாண்டில் வாங்கிய விளையாட்டுப்பொருள்கள் 84,000
    31.3.2019 அன்று விளையாட்டுப் பொருள்கள்  10,000
  30. 2 x 5 = 10
  31. பூம்புகார் இலக்கிய மன்றத்தின் கீழ்க்காணும் தகவல்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கினைத் தயார் செய்யவும்

    விவரம்  ரூ  விவரம்  ரூ 
    தொடக்க இருப்பு (1.4.2018) 5,000 சந்தா பெற்றது 20,000
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018) 4,000 பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் 2,500
    அச்சு மற்றும் எழுதுபொருள் 1,500 போக்குவரத்துச் செலவுகள்  2,750
    வட்டி செலுத்தியது 3,250 புத்தகங்கள் வாங்கியது 10,000
    சிற்றுண்டி வாங்கியது 1,500 பல்வகை வரவுகள் 750
    கொடுபட வேண்டிய சம்பளம்  2,000 அரசிடமிருந்து பெற்ற மானி 6,000
    அறக்கொடை நிதி பெற்றது 2,000 சிற்றுண்டி விற்றது. 1,500
    ஒளியூட்டுக் கட்டணம் 1,300 கட்டடம் மீதான தேய்மானம் 2,000
        வங்கி ரொக்கம் (31.3.2019) 2,000
  32. கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான பின்வரும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து, 2016, மார்ச் 31-ல் முடிவடையும் ஆண்டிற்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.

    ப கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றம் 2016, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரியபெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு வ
    பெறுதல்கள் ரூ செலுத்தல்கள் ரூ
    இருப்பு கீ/கொ   பராமரிப்புச் செலவுகள் 5,000
    வங்கி ரொக்கம் 8,000 அறைகலன் 15,000
    சந்தா 11,000 தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 1,400
    பழைய மட்டைகள் மற்றும் பந்துகள்   செயலாளர் மதிப்பூதியம் 4,500
    விற்றது 100 மட்டை கள் மற்றும் பந்துகள் 7,400
    தொடர் விளையாட்டுப் போட்டிக்கான சந்தா 2,000 இருப்பு கீ/இ  
    உயில்கொடை 20,000 வங்கி ரொக்கம் 7,800
      41,100   41,100

    கூடுதல் தகவல்கள்:
    2015, ஏப்ரல் 1 அன்று மன்றத்தில் பந்துகள் மற்றும் மட்டைகள் இருப்பு ரூ3,000; முன்கூட்டிப் பெற்ற சந்தா ரூ.500. தொடர் விளையாட்டுப் போட்டியின் உபரித்தொகைத் நிரந்தர அரங்கத்திற்கான ஒதுக்காக உருவாக்கப்பட வேண்டும். 31.3.2016 அன்று பெறவேண்டிய சந்தாரூ 2,000. 31.3.2016-ல் மட்டைகள் மற்றும் பந்துகள் இருப்பு ரூ1,000.

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - இலாப நோக்கமற்ற அமைப்புகளின் கணக்குகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Accounts of Not-For-Profit Organisation Model Question Paper )

Write your Comment