கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது______.

    (a)

    சமமான விகிதத்தில்

    (b)

    முதல் விகிதத்தில்

    (c)

    இரண்டும் (அ) மற்றும் (ஆ)

    (d)

    மேற்கூறிய எதுவுமில்லை

  2. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  3. பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

    (a)

    எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (b)

    முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

    (c)

    கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (d)

    இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

  4. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.150

    (c)

    ரூ.550

    (d)

    ரூ.500

  5. கூட்டாண்மையின் அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை

    (a)

    25

    (b)

    50

    (c)

    10

    (d)

    20

  6. 5 x 1 = 5
  7. இந்திய கூட்டாண்மைச் சட்டம்

  8. (1)

    பிரிவு 13 (இ)

  9. இந்திய நிறுமச்சட்டம்

  10. (2)

    பிரிவு 13 (அ)

  11. கூட்டாளிகளின் ஊதியம்

  12. (3)

    2013

  13. முதல் மீது வட்டி

  14. (4)

    1932

  15. கடன் மீதான வட்டி

  16. (5)

    பிரிவு 13(ஈ)

    6 x 2 = 12
  17. மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல்: மன்னன் ரூ.80,000, இரமேஷ் ரூ.60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும் மற்றும் அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும.

  18. 2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
    2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.

  19. கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.

  20. நிலைமுதல் முறை என்றால் என்ன?

  21. மணி என்ற கூட்டாளி 2018, செப்டம்பர் 1 அன்று ரூ.30,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% என கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  22. கெவின் மற்றும் பிரான்சிஸ் இருவரும் கூட்டாளிகள். கெவின் ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6%. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

  23. 6 x 3 = 18
  24. தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:   நிலைச் சொத்துகள் 30,000
    சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000
    சுதா 20,000    
    நடப்புப் பொறுப்புகள் 15,000    
      50,000   50,000

    அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.

  25. A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
    (i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
    (ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
    (iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது

  26. அருள் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% கணக்கிடப்பட வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 3,000
    ஜுன் 1 3,000
    செப்டம்பர் 1 3,000
    டிசம்பர் 1 3,000

    எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்

  27. கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.

  28. நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

  29. ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ரூ.10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  30. 2 x 5 = 10
  31. பின்வரும் தகவல்களிலிருந்து சாந்தி மற்றும் சுமதி என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல், நிலை முதலாக இருக்கும் போது தயாரிக்கவும்.

    விவரம் சாந்தி ரூ. சுமதி ரூ.
    2018, ஜனவரி 1 அன்று முதல் 1,00,000 80,000
    2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 5,000 3,000
    2018, ஜுன் 1 கூடுதல் முதல் கொண்டு வந்தது 10,000 20,000
    2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 20,000 13,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    2018 – ல் இலாபப் பங்கு 10,000 8,000
    முதல் மீது வட்டி 6,300 5,400
    ஊதியம் 9,000 -
    கழிவு - 1,200
  32. பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூபன் ரூ. டெரி ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000
    கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000
    2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800
    முதல் மீது வட்டி 3,500 2,500
    சம்பளம் - 18,000
    கழிவு 12,000 -

*****************************************

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Accountancy - Accounts of Partnership Firms-Fundamentals Model Question Paper )

Write your Comment