நிறுமக் கணக்குகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
  5 x 1 = 5
 1. முன்னுரிமைப் பங்கு என்பது
  (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
  (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

  (a)

  (i) மட்டும் சரியானது

  (b)

  (ii) மட்டும் சரியானது

  (c)

  (i) மற்றும் (ii) சரியானது

  (d)

  (i) மற்றும் (ii) தவறான

 2. நிறுமக் கலைப்பின்போது மட்டுமே அழைக்கப்படக் கூடிய பங்கு முதலின் ஒரு பகுதி இவ்வாறு அழைக்கப்படும்

  (a)

  அங்கீகரிக்கப்பட்ட முதல்

  (b)

  அழைக்கப்பட்ட முதல்

  (c)

  முதலினக் காப்பு

  (d)

  காப்பு முதல்

 3. முகமதிப்பை விட அதிகமாக பெற்ற தொகை வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  பத்திர முனைமக் கணக்கு

  (b)

  அழைப்பு முன்பணக் கணக்கு

  (c)

  பங்குமுதல் கணக்கு

  (d)

  பங்கு ஒறுப்பிழப்புக் கணக்கு

 4. சொத்துகளை வாங்கி பங்குகள் வெளியிடும்போது வரவு வைக்கப்படும் கணக்கு

  (a)

  விற்பனையாளர் க/கு

  (b)

  பற்பல சொத்துகள் க/கு

  (c)

  பங்குமுதல் க/கு

  (d)

  வங்கி க/கு

 5. ரூ.8 செலுத்தப்பட்ட, ரூ.10 மதிப்புள்ள பங்கு ஒறுப்பிழப்பு செய்யப்பட்டது எனில், அதன் குறைந்த அளவு மறுவெளியீட்டு விலை

  (a)

  பங்கொன்று ரூ.10

  (b)

  பங்கொன்று ரூ.8

  (c)

  பங்கொன்று ரூ.5

  (d)

  பங்கொன்று ரூ.2

 6. 2 x 2 = 4
 7. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

  விண்ணப்பத்தின் போது பங்கொன்றிற்கு ரூ.5
  ஒதுக்கீட்டின் போது பங்கொன்றிற்கு ரூ.3
  முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பங்கொன்றிற்கு ரூ.2

  1,20,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திருப்பிச் செலுத்தப்ப்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

 8. சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போ து ரூ.4, மீதமுள்ள தொகை தேவையானபபொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
  60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
  75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
  5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
  அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

 9. 2 x 3 = 6
 10. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்படப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக் ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

 11. ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?

 12. 2 x 5 = 10
 13. திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

 14. சாரா நிறுமம் பங்கொன்று ரூ10 வீதம் 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின்போது முழுத்தொகையும் செலுத்தும் வகையில் வெளியிட்டது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
  (i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
  (ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard கணக்குப்பதிவியல் - நிறுமக் கணக்குகள் Book Back Questions ( 12th Standard Accountancy - Company Accounts Book Back Questions )

Write your Comment