" /> -->

தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. ரெஸ்ட்ரிக்ஷன் நொதிகள் என்பது 

  (a)

  மரபுப் பொறியியலில் எப்போதும் தேவைப்படுவதில்லை.

  (b)

  மரபுப் பொறியியலில் முக்கியமான கருவியாகும்.

  (c)

  நியுக்ளியேஸ் DNA வைக் குறிப்பிட்ட இடத்தில் துண்டித்தல் 

  (d)

  ஆ மற்றும் இ 

 2. மரபணுப் பொறியியல் 

  (a)

  செயற்கை மரபணுக்களை உருவாக்குதல்.

  (b)

  ஒரு உயிரினத்தின் DNA மற்றவைகளுடன் கலப்பினம் செய்தல் 

  (c)

  நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி ஆல்கஹால் உற்பத்தி 

  (d)

  ECG, EEG போன்ற கண்டறியும் கருவிகள், செயற்கை உறுப்புகள் உருவாக்குதல் 

 3. சில தடைகட்டு (ரெஸ்ட்ரிக்சன்) நொதிகளினால் DNA வின் பின்வரும் எந்த ஒரு முன்பின் ஒத்த (பாலியான்ட்ரோம்) தொடர்வரிசையின் மையத்தில் எளிதாக துண்டிக்கிறது?

  (a)

  5' CGTTCG 3' 3' ATCGTA 5

  (b)

  5' GATATG 3' 3' CTACTA 5'

  (c)

  5' GAATTC 3' 3' CTTAAG 5'

  (d)

  5' CACGTA 3' 3' CTCAGT 5'

 4. எத்திடியம் புரோமைடு எந்த தொழில்நுட்பமுறையில் பயன்படுத்தப்படுகிறது?

  (a)

  சதர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

  (b)

  வெஸ்ட்ர்ன் ஒற்றியெடுப்பு தொழில்நுட்பமுறை 

  (c)

  பாலிமரேஸ் சங்கிலித் தொடர்வினை 

  (d)

  அக்ரோஸ் இழும மின்னாற் பிரிப்பு 

 5. ஒரு தாங்கிக்கடத்தியில் உயிரி எதிர்ப் பொருள் மரபணு எதனை தேந்தெடுக்க உதவுகிறது?

  (a)

  போட்டி செல்கள் 

  (b)

  மாற்றப்பட்ட செல்கள் 

  (c)

  மறுகூட்டிணைவுச் செல்கள் 

  (d)

  மேற்கூறிய எதுவுமில்லை.

 6. பயோ டெக்னலாஜி என்ற வார்த்தைகளை உருவாக்கியவர் 

  (a)

  வெய்ஸ்னர் 

  (b)

  கார்ல் பிரான்டில் 

  (c)

  சாங்கர் 

  (d)

  கார்ல் எரிக்கி 

 7. உயிரினங்களில் அந்நிய DNA இரட்டிப்படைய __________ தேவை.

  (a)

  ROP 

  (b)

  ORI 

  (c)

  நிறுத்து கோடான் 

  (d)

  TATA பெட்டி 

 8. 5 x 1 = 5
 9. உகந்த வளர்ப்பு நிலையில் தன் செல்கள் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இரண்டாக பகுப்படைவது ________ 

  ()

  ஈகோலை 

 10. Bt. நச்சுப்புரதம் உருவாக்கும் மரபணுக்கள்  _________ எனப்படும்.

  ()

  Cry -மரபணுக்கள் 

 11. ELISA வைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞான ________ 

  ()

  உஷா M.ஜோஷி 

 12. குளுட்டெனின் அதிகம் காணப்படும் தானியம் _________.

  ()

  நெல் 

 13. சாதாரண அரிசியில் _________ காணப்படுவதில்லை 

  ()

  பீட்டா கரோட்டின் 

 14. 4 x 1 = 4
 15. பிளாஸ்மிட் 

 16. (1)

  ds -வட்ட மரபணு 

 17. T1 பிளாஸ்மிட்

 18. (2)

  பொதுவாக குளோனிங் வெக்டாராக செயல்படுகிறது 

 19. பிளாஸ்மிட்

 20. (3)

  நடமாடும் மரபணு 

 21. டிரான்ஸ்போசான் தனிமங்கள் 

 22. (4)

  ஒரு ori மற்றும் inc மரபணு உடையது 

  3 x 2 = 6
 23. உறுதிப்படுத்துதல் A: உயிரி வினைகளின் இது வினைபடு பொருட்களுடன் நுண்ணுயிரிகள் (அ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
  காரணம் R: இந்த உயிரி வினை கலனில் காற்றோட்டம், கிளர்வூட்டம், வெப்பநிலை போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு மேற்கால் பதப்படுத்துதல் மற்றும் கீழ்க்கால் பதப்படுத்துதல் என இரு செயல்முறைகளை உள்ளடக்கியது.
  பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க 
  அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு 
  ஈ. உறுதிப்படுத்துதல் 'A'  மற்றும் காரணம் 'R' தவறானது 

 24. உறுதிப்படுத்துதல் A: ECORI இல் 'R' என்ற எழுத்து பாக்டீரியாவின் பேரினமாகும். (அ) அவற்றின் நொதிகள் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வினைபுரியும் உகந்த சூழலைக் கொண்டுள்ளது.
  காரணம் R : ECORI என்பது பாலிண்ட்ரோம் நியூக்ளியோடைடு தொடர்வரிசையின் பெயராகும்.
  பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க 
  அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு 
  ஈ. உறுதிப்படுத்துதல் 'A'  மற்றும் காரணம் 'R' தவறானது 

 25. உறுதிப்படுத்துதல் A: rDNA மூலக்கூறைப் பெற்ற செல்களை அடையாளம் கண்டறியும் முறை சலிக்கை செய்தல் எனப்படும்.
  காரணம் R : மறுகூட்டிணைவு அடைந்த செல்களில் உள்ள தாங்கிக்கடத்தி அல்லது அயல் DNA பண்புகளை வெளிப்படுத்துகிறது. மாறாக மறுகூட்டிணைவு அடையாத செல்கள் இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறது.
  பின்வருவனவற்றுள் இரண்டு வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
  உறுதிப்படுத்துதல் A மற்றும் காரணம் R சரியானதைத் தெரிவு செய்க 
  அ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது கரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  ஆ. உறுதிப்படுத்துதல் 'A' மற்றும் காரணம் 'R' சரியானது. காரணம் 'R' உறுதிப்படுத்துதல் 'A' ஐ சரியாக விளக்குகிறது.
  இ. உறுதிப்படுத்துதல் 'A' சரி. காரணம் 'R' தவறு 
  ஈ. உறுதிப்படுத்துதல் 'A'  மற்றும் காரணம் 'R' தவறானது 

 26. 2 x 2 = 4
 27. அ) DMH -II - களைக்கொல்லி எதிர்ப்பு பட்டாணி 
  ஆ) PLA - உயிரி சிதைக்கக்கூடிய தெர்மோபிளாஸ்டிக் 
  இ) GFP - ஜெல்லி மீனிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட புரதம் 
  ஈ) PPT - பாஸ்டா - களைக்கொல்லி தாக்கு பிடிக்கும் மரபணு 

 28. அயல் மரபணுவைப் பெற்ற உயிரினத்தைப் பொறுத்தவரை பொருத்தமற்றத்தைத் தெரிவு செய்க.
   

  அ  உயிரி மருந்தாக்கம்  மனித பயன்பாட்டுக்கான மருந்து சார் பொருட்களை உண்டாக்கும்.
  ஆ  பூஞ்சை வழித்திருத்தம்  மரபணு பொறியியல் பாக்டீரியாக்களைக் கொண்டு சூழல் மாசுறுத்திகளை திருத்தம் செய்தல் 
  இ  உயிரி வழி பெருக்குதல்  தேர்ந்தெடுக்கப்பட்ட நுண்ணுயிரிகளைச் சேர்ப்பதன் மூலம் சிதைவடையும் வேகத்தை அதிகரிக்கச் செய்தல் 
  ஈ  உயிரி வழி கரைத்துப் பிரிதல்  மாசுறுத்தப்பட்ட இடங்களில் இருந்து கரைசல் உலோக மாசுறுத்திகளை கரைசல் நிலையில் நுண்ணுயிரிகளை பயன்படுத்தி மீட்டல்.
 29. 1 x 2 = 2
 30. எலிசா பற்றிய தவறான கூற்றினைக் கண்டறிக.
  அ) ELISA -இது நோய் கிருமிகளின் நோய் எதிர்ப்புரதப் பொருள்களையும் மற்றும் கண்டறிய உவும் காரணிகளை பயன்படுத்தி கொண்டு நோயினைக் கண்டறியும் முறை  
  ஆ) அதிகளவு நடவுகளிலிருந்து வைரஸ் தாக்கிய தாவாரங்களை களையெடுக்க பயன்படுகிறது.
  இ) இது AIDS நோயைக் கண்டறியும் ஒருவகை பரிசோதனையாகும்.
  ஈ) இது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸின் நோய் எதிர் புரதம் கண்டறியும் முறையாகும்.

 31. 5 x 2 = 10
 32. தற்காலப் பயிற்சியில் உயிரி தொழில்நுட்பவியலை எவ்வாறு பயன்படுத்துவாய்?

 33. உயிரிதொழில்நுட்பவியல் ஆய்வகத்தில் ஈகோலை பாக்டீரியத்தைப் பயன்படுத்தி ஆய்வு செய்கிறாய். நியூக்ளியோடைடு தொடர்வரிசையை நீ எவ்வாறு துண்டிப்பாய்?

 34. மரபணு மாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களின் பெயர்களைக் கூறுக.

 35. PCR என்றால் என்ன?

 36. Ori என்பது எதைக் குறிக்கிறது?

 37. 4 x 3 = 12
 38. pBR 322 எனும் வார்த்தையிலிருந்து நீர் அறிந்துக் கொள்வது என்ன?

 39. தடைகட்டு (ரெஸ்ட்ரிக்ஷன்) நொதி என்றால் என்ன? அவற்றின் வகைகளைக் கூறி, உயிரிதொழில்நுட்பவியலில் அதன் பங்கைக் குறிப்பிடுக?

 40. ஒரு தங்கிக்கடத்தியை எவ்வாறு அடையாளம் காண்பாய்?

 41. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் ஏற்படும் ஆபத்துகளாக நம்பப்படுபவைகள் யாவை?

 42. 2 x 5 = 10
 43. Bt பருத்தியின் நன்மை, தீமைகளை எழுதுக.

 44. மரபணு மாற்றப்பட்ட உணவின் நன்மைகள் மற்றும் அபாயங்கள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard உயிரியல் தாவரவியல் - உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Biology Botany - Principles and Processes of Biotechnology Model Question Paper )

Write your Comment