பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகக் கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. ஒரு காலம்சார் தொடரின் தரவுத் தொகுப்பு விவரங்களை பதிவு செய்யப்படும் இடைவெளி _____.

    (a)

    சமகால இடைவெளி

    (b)

    வாரம் ஒருமுறை

    (c)

    தொடர்ச்சியான கால புள்ளிகள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  2. ஒரு காலம்சார் தொடரில்__________உள்ளன.

    (a)

    ஐந்து கூறுகள்

    (b)

    நான்கு கூறுகள்

    (c)

    மூன்று கூறுகள்

    (d)

    இரண்டு கூறுகள்

  3. T, S, C மற்றும் I ஆகிற கூறுகளைக் கொண்டக் காலம்சார் தொடரின் கூட்டு வடிவமைப்பானது _____.

    (a)

    y=T+S+C×I

    (b)

    y=T+S×C×I

    (c)

    y=T+S+C+I

    (d)

    y=T+S×C+I

  4. y=a+bx என்ற போக்கு கோட் டில் ‘b’ இன் மதிப்பானது _____.

    (a)

    எப்போதும் மிகை

    (b)

    எப்போதும் குறை

    (c)

    மிகை அல்லது குறை

    (d)

    பூஜ்ஜியம்

  5. பருவகால மாறுபாடு என்ற வேறுபாடுகள் நிகழ _____.

    (a)

    சில ஆண்டுகளின் எண்ணிக்கையில்

    (b)

    ஒரு ஆண்டிற்குள்ளாக

    (c)

    ஒரு மாதத்திற்குள்ளாக

    (d)

    ஒரு வாரத்திற்குள்ளாக

  6. லாஸ்பியர் குறியீட்டு எண் = 110, பாசி குறியீட்டு எண் =108 எனில், ஃபிஷர் தனித்த குறியீட்டு எண் = _____.

    (a)

    110

    (b)

    108

    (c)

    100

    (d)

    109

  7. உற்பத்திப் பொருளின் தரத்தை பாதிக்க் கூடிய மாறுபாடுகள் எத்தனை?

    (a)

    4

    (b)

    3

    (c)

    2

    (d)

    1

  8. கட் டுபாட்டு வரைபடங்கள் பெற்றிருப்பவை _____.

    (a)

    CL, UCL

    (b)

    CL, LCL

    (c)

    CL, LCL, UCL

    (d)

    UCL, LCL

  9. R -ஐ கணக்கிடப் பயன்படும் சூத்திரம் _____.

    (a)

    xmax−xmin

    (b)

    xmin−xmax

    (c)

    \(\bar { X } \)max-\(\bar { X } \)min

    (d)

    \(\overset { = }{ X } \)max\(\overset { = }{ X } \)min

  10. R வரைபடத்தின் கீழ் கட்டுபாட்டு எல்லையை அளிக்ககூடியது _____.

    (a)

    D2\(\bar { R } \)

    (b)

    D2\(\overset { = }{ R } \)

    (c)

    D3\(\overset { = }{ R } \)

    (d)

    D3\(\bar { R } \)

  11. 9 x 2 = 18
  12. காலம்சார் தொடர் வரிசையை வரையறு

  13. காலம்சார் தொடர் வரிசையின் பயன்பாட்டை குறிப்பிடுக.

  14. நீள்காலப்போக்கு வரையறு.

  15. சூழல் மாறுபாடுகள் என்பதை விளக்குக

  16. பருவகால குறியீட்டை வரையறுக்க

  17. நேர்க்கோடு பொருத்துதலில் பயன்படுத்தப்படும் இரு இயல்நிலைச் சமன்பாடுகளை கூறுக.

  18. தொழில்துறையில் 1985 மற்றும் 1991 இடைப்பட்ட ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சிறுதொழில்
    நிறுவனங்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. போக்குக்கோட்டின் மீது இதன் வளர்ச்சியை வரைபட முறையில் காட்டுக.

    ஆண்டுகள் 1985 1986 1987 1988 1989 1990 1991 1992
    அலகுகளின்
    எண்ணிக்கை (in‘000)
    10 22 36 62 55 40 34 50
  19. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் பணிப்புரியும் விற்பனையாளர்களின் எண்ணிக்கை கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன

    ஆண்டு 1992 1993 1994 1995 1996
    விற்பனையாளர்களின்
    எண்ணிக்கை
    46 48 42 56 52

    இப்புள்ளி விவரங்களுக்கு மீச்சிறுவர்க்க முறையில் ஒரு நேர்க்கோட்டைப் பொருத்துக மேலும் 1997 ஆம் ஆண்டில் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை மதிப்பிடுக.

  20. காரணி மாற்றுச் சோதனை விளக்கவும்.

  21. 4 x 3 = 12
  22. கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுக்கு பகுதிச் சராசரி முறையின் ஒரு போக்குக்கோட்டைப் பொருத்துக.

    ஆண்டு 1990 1991 1992 1993 1994 1995 1996 1997
    விற்பனை (டன்களில்) 15 11 20 10 15 25 35 30

     

  23. ஒரு மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி தொடர்பான புள்ளி விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மீச்சிறு வர்க்க முறை மூலம் நேர்க்கோட்டுப் போக்கினைப் பொருத்துக. மேலும் போக்கு மதிப்பை  அட்டவணைப்படுத்துக.

    ஆண்டு 2000 2001 2002 2003 2004 2005 2006
    கரும்பு உற்பத்தி
    (டன்களில்)
    40 45 46 42 47 50 46
  24. எளிய சராசரி முறையைப் பயன்படுத்தி ஒரு பொருளின் மாதாந்திர விற்பனைக்கு, பருவகால குறியீட்டைக் கணக்கிடுக.

    மாதங்கள் ஜனவரி  பிப்ரவரி மார்ச் ஏப்ரல்  மே ஜுன் ஜுலை ஆகஸ்ட்  செப்டம்பர்  அக்டோபர் நவம்பர்  டிசம்பர் 
    ஆண்டு
    2001 15 41 25 31 29 47 41 19 35 38 40 30
    2002 20 21 27 19 17 25 29 31 35 39 30 44
    2003 18 16 20 28 24 25 30 34 30 38 37 39
  25. ஓர் இயந்திரம், குழாயை 0.532 செ.மீ. சராசரியான விட்டத்துடன் திட்டவிலக்கம் 0.002 செ.மீ அளவிலும் துளையிடுகிறது. கட்டுப்பாடு சராசரிக்கான வரம்புகளை 5 கூறுகளுக்குக் கணக்கிடுக.

  26. 2 x 5 = 10
  27. லாஸ்பியர், பாசி மற்றும் ஃபிஷர் விலைக் குறியீட்டு எண்களை உருவாக்கவும். மேலும் முடிவின் மீதான கருத்தினைத் தருக.

    பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
    விலை அளவு விலை அளவு
    அரிசி 15 5 16 8
    கோதுமை 10 6 18 9
    வாடகை 8 7 15 8
    எரிபொருள் 9 5 12 6
    போக்குவரத்து 11 4 11 7
    இதரசெலவுகள் 16 6 15 10
  28. பின்வரும் விவரங்களுக்கு ஃபிஷரின் விலை குறியீட்டு எண்ணை கண்டுபிடிக்கவும். மேலும் காலமாற்றுச் சோதனை, காரணி மாற்றுச் சோதனை ஆகியவற்றை நிறைவு செய்வதைச் சரிபார்க்கவும்.

    பொருள்கள் அடிப்படை ஆண்டு நடப்பு ஆண்டு
    விலை அளவு விலை அளவு
    அரிசி 10 5 11 6
    கோதுமை 12 6 13 4
    வாடகை 14 8 15 7
    எரிபொருள் 16 9 17 8
    போக்குவரத்து 18 7 19 5
    இதரசெலவுகள் 20 4 21 3

*****************************************

Reviews & Comments about 12th Standard வணிகக் கணிதம் - பயன்பாட்டுப் புள்ளியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Business Maths - Applied Statistics Model Question Paper )

Write your Comment