வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. A\(\rightarrow \)B என்ற முதல் வகை வினையின் வினை வேக மாறிலி x min−1. A ன் துவக்கச் செறிவு 0.01M எனில் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு A ன் செறிவு ____________

    (a)

    001. e−x

    (b)

    1x 10-2(1-e-60x)

    (c)

    (1x10-2)e-60x 

    (d)

    இவை எதுவுமல்ல

  2. 2NH3\(\rightarrow\)N2 + 3Hஎன்ற வினைக்கு \(\frac { -d\left[ { NH }_{ 3 } \right] }{ dt } ={ K }_{ 1 }\left[ { NH }_{ 3 } \right] ,\frac { d\left[ { N }_{ 2 } \right] }{ dt } ={ k }_{ 2 }[{ NH }_{ 3 }],\frac { d\left[ { H }_{ 2 } \right] }{ dt } ={ K }_{ 3 }\left[ { NH }_{ 3 } \right] \) எனில்,K1,K2, மற்றும் K3  ஆகியவைகளுக்கிடையானத் தொடர்பு ____________

    (a)

    k= k= k3

    (b)

    k= 3k= 2k3

    (c)

    1.5k1= 3k= k3

    (d)

    2k= k= 3k3

  3. ஒரு வேதிவினையின் போது சேர்க்கப்படும் வினைவேக மாற்றி பின்வருவனவற்றுள் எதனை மாற்றியமைக்கிறது?

    (a)

    என்தால்பி 

    (b)

    கிளர்வு ஆற்றல் 

    (c)

    என்ட்ரோபி 

    (d)

    அக ஆற்றல் 

  4. ஒரு மீள் வினையில், முன்னோக்கிய வினையின் என்தால்பி மாற்றம் மற்றும் கிளர்வு ஆற்றல்கள் முறையே -x KJ mol-1 மற்றும் y KJ mol-1  ஆகும். எனவே, பின்னோக்கிய வினையின் கிளர்வு ஆற்றல் ______________

    (a)

    (y-x) KJ mol-1

    (b)

    (x+y) J mol-1

    (c)

    (x-y) KJ mol-1

    (d)

    (x+y)x103 J mol-1

  5. ஒரு வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 5.8x 10-2s-1 அவ்வினையின் வினைவகை _____________

    (a)

    முதல் வகை 

    (b)

    பூஜ்ய வகை 

    (c)

    இரண்டாம் வகை 

    (d)

    மூன்றாம் வகை 

  6. வினைபடு பொருளின் துவக்கச் செறிவு இரு மடங்கானால், வினை பாதியளவு நிறைவு பெற தேவையான காலமும் இருமடங்காகிறது எனில் அவ்வினையின் வகை _______________

    (a)

    பூஜ்ஜியம்

    (b)

    ஒன்று

    (c)

    பின்னம்

    (d)

    எதுவுமல்ல

  7. ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் \({ \left( \frac { 1 }{ 16 } \right) }^{ th }\)மடங்காகக் குறைகிறது அதன் அரை வாழ் காலம்.

    (a)

    60 min

    (b)

    120 min

    (c)

    30 min

    (d)

    15 min

  8. வேக விதியில் காணப்படும் செறிவு உறுப்புகளின் அடுக்குகளின் கூட்டுத்தொகை _________ எனப்படும்.

    (a)

    மூலக்கூறு எண் 

    (b)

    வினைவேக மாறிலி 

    (c)

    வினை வகை 

    (d)

    வினை வேகம் 

  9. 5 x 1 = 5
  10. பூஜ்ய வகை வினை 

  11. (1)

    mol L-1S-1

  12. இரண்டாம் வகை வினை 

  13. (2)

    துவக்க செறிவை சார்ந்ததல்ல 

  14. வினைவேக மாற்றி 

  15. (3)

    பின்னமாக இருக்க முடியாது 

  16. மூலக்கூறு எண் 

  17. (4)

    mol-1 L s-1

  18. முதல் வகை வினையின் அரைவாழ் காலம் 

  19. (5)

    கிளர்வு ஆற்றலைக் குறைக்கிறது 

    6 x 2 = 12
  20. சராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை வரையறு.

  21. வேக விதி மற்றும் வினைவேக மாறிலியினை வரையறு.

  22. வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.

  23. முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.

  24. ஒரு வேதிவினையின் வேகத்தை வினைவேக மாற்றி எவ்வாறு பாதிக்கின்றது என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  25. மூலக்கூறு எண் - வரையறு.

  26. 5 x 3 = 15
  27. இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.

  28. பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.

  29. போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  30. ஒரு வாயு நிலை வினையின் கிளர்வு ஆற்றல் 200 kJ mol-1. அவ்வினையின் அதிர்வுக் காரணி 1.6 x 1013s-1. 600 K ல் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. (e-40.09 = 3.8 x 10-18)

  31. முதல் வகை வினைக்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக.

  32. 2 x 5 = 10
  33. ஒரு வேதி வினையின் வேகத்தினை வினைபடு பொருட்களின் தன்மை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக.

  34. ஒரு முதல் வகை வினை 50 நிமிடங்களில் 40% நிறைவடைகிறது. வினைவேக மாறிலியின் மதிப்பினைக் கண்டறிக அவ்வினை 80% நிறைவடைய தேவையான காலம் எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 12th Standard வேதியியல் - வேதிவினை வேகவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard Chemistry - Chemical Kinetics Model Question Paper )

Write your Comment