" /> -->

மின்னோட்டவியல் முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. ஒரு ரொட்டி சுடும் மின்இயந்திரம் 240V இல் செயல்படுகிறது. அதன் மின்தடை 120 Ω எனில் அதன் திறன்

  (a)

  400 W

  (b)

  2 W

  (c)

  480 W

  (d)

  240 W

 2. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  (a)

  மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

  (b)

  மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

  (c)

  ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

  (d)

  பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

 3. 230 V மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்பட்ட கம்பியில் திறன் இழப்பு P1, அக்கம்பியானது இரு சமமான பகுதிகளாக வெட்டப்பட்டு இரு துண்டுகளும் பக்க இணைப்பில் அதே மின்னழுத்த மூலத்துடன் இணைக்கப்படுகின்றன. இந்நிலையில் திறன் P2 எனில் \(\frac { { P }_{ 2 } }{ { P }_{ 1 } } \) எனும் விகிதம்.

  (a)

  1

  (b)

  2

  (c)

  3

  (d)

  4

 4. இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை

  (a)

  R

  (b)

  2R

  (c)

  \(\frac{R}{4}\)

  (d)

  \(\frac{R}{2}\)

 5. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

  (a)

  14 A

  (b)

  8 A

  (c)

  10 A

  (d)

  12 A

 6. 6 x 2 = 12
 7. ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை கூறு.

 8. ஓம் விதிக்கு உட்படும் மற்றும் ஓம் விதிக்கு உட்படாத சாதனங்கள் யாவை?

 9. மின்தடை எண் வரையறு.

 10. வெப்பநிலை மின்தடை எண் வரையறு.

 11. மீக் கடத்து திறன் என்றால் என்ன?

 12. சீபெக் விளைவின் பயன்பாடுகள் யாவை?

 13. 6 x 3 = 18
 14. ஒரு தாமிரக்கம்பிக்கு அளிக்கப்படும் மின்புலத்தின் எண்மதிப்பு 570 NC-1 எனில் எலக்ட்ரான் பெறும் முடுக்கத்தை கண்டுபிடி.

 15. 0.5 mm2 குறுக்குவெட்டுப்பரப்பு கொண்ட தாமிரக்கம்பியில் 0.2 A அளவுள்ள மின்னோட்டம் பாய்கிறது. அத்தாமிரக்கம்பியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் அடர்த்தி 8.4 x 1028 m-3 எனில் இக்கட்டுறா எலக்ட்ரான்களின் இழுப்புத்திசை வேகத்தை கணக்கிடுக.

 16. ஒரு கடத்தி வழியே 32 A மின்னோட்டம் பாயும்போது, ஓரலகு நேரத்தில் கடத்தியில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை காண்க.

 17. 24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?

 18. ஒரு கம்பியின் மின்தடை 20 Ω. இக்கம்பி தனது ஆரம்ப நீளத்திலிருந்து எட்டு மடங்கு நீளம் அதிகரிக்குமாறு சீராக நீட்டப்பட்டால், கம்பியின் புதிய மின்தடை என்ன?

 19. மின்னழுத்தமானியை பயன்படுத்தி இரு மின்கலங்களின் மின்னியக்கு விசைகள் எவ்வாறு ஒப்பிடப்படுகின்றன?

 20. 3 x 5 = 15
 21. ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15 Ω என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3:2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.

 22. ஒரு மீட்டர் சமனச் சுற்றில், மின்தடைப் பெட்டியில் 10 Ω என்ற அளவு மின்தடை வைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளத்தின் மதிப்பு l1 = 55 cm எனில் தெரியாத மின்தடையின் மதிப்பை கணக்கிடுக.

 23. 10 Ω மின்தடை கொண்ட மின் சூடேற்றி 220 V மின்திறன் மூலத்துடன் இணைக்கப்பட்டு 1 kg நிறையுள்ள நீரில் மூழ்க வைக்கப்பட்டுள்ளது. நீரின் வெப்பநிலையை 30°C லிருந்து 60°C க்கு உயர்த்த மின் சூடேற்றி எவ்வளவு நேரத் திற்கு இயக்கப்பட வேண்டும்? (நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் s = 4200 J kg-1)

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் Chapter 2 மின்னோட்டவியல் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 2 Current Electricity Important Question Paper )

Write your Comment