காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் முக்கிய வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  \(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)

  (b)

  \(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)

  (c)

  \(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)

  (d)

  \(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)

 2. 5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  (a)

  1.0 amp – m2

  (b)

  1.2 amp – m2

  (c)

  0.5 amp – m2

  (d)

  0.8 amp – m2

 3. மெல்லிய காப்பிடப்பட்ட கம்பியினால் செய்யப்பட்ட சமதள சுருள் (plane spiral) ஒன்றின் சுற்றுகள் எண்ணிக்கை N = 100. நெருக்கமாக சுற்றப்பட்ட சுற்றுகள் வழியே I = 8 mA அளவு மின்னோட்டம் பாய்கிறது. கம்பிச்சுருளின் உட்புற மற்றும் வெளிப்புற ஆரங்கள் முறையே a = 50 மற்றும் b = 100 mm எனில், சுருளின் மையத்தில் ஏற்படும் காந்தத்தூண்டலின் மதிப்பு

  (a)

  5 μT

  (b)

  7 μT

  (c)

  8 μT

  (d)

  10 μT

 4. மின்னூட்டம் பெற்ற ஊசல் குண்டைப் பெற்றுள்ள தனிஊசல் ஒன்று T அலைவு நேரத்துடன் அலைவுறுகிறது. θ என்பது அதன் கோண இடப்பெயர்ச்சி என்க. அலைவுறும் தளத்திற்கு செங்குத்தான திசையில் சீரான காந்தப்புலம் ஒன்று செயல்படும்போது பின்வருவனவற்றுள் எது சரியான முடிவாகும்

  (a)

  அலைவு நேரம் குறையும், ஆனால் θ மாறாது

  (b)

  அலைவுநேரம் மாறாது, ஆனால் θ குறையும்

  (c)

  T மற்றும் θ இரண்டும் மாறாது

  (d)

  T மற்றும் θ இரண்டும் குறையும்

 5. q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
  ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

  (a)

  \(\frac {q }{m }\)

  (b)

  \(\frac {2q }{m }\)

  (c)

  \(\frac {q }{2m }\)

  (d)

  \(\frac {q }{4m }\)

 6. 5 x 2 = 10
 7. கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியைக் கூறு.

 8. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?

 9. பயோட்  – சாவர்ட் விதியைக் கூறு

 10. காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?

 11. ஆம்பியர் சுற்றுவிதியைக் கூறு.

 12. 5 x 3 = 15
 13. சீரான காந்தப்புலத்தில் தொங்கவிடப்பட்டுள்ள சட்டகாந்தமொன்றின் அலைவு நேரம் \(T=2\pi \sqrt { \frac { I }{ { p }_{ m }B } } \) வினாடி என நிறுவுக. இங்கு I என்பது சட்டகாந்தத்தின் நிலைமத்திருப்புத்திறன், pm என்பது காந்தத்திருப்புத்திறன் மற்றும் B என்பது காந்தப்புலம்.

 14. புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.

 15. நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.

 16. \(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.

 17. படத்தில் காட்டியுள்ள மின்னோட்டம் பாயும் நேர்க்கடத்தியை, செங்குத்து இரு சமவெட்டியாக பிரிக்கும் P புள்ளியில் தோன்றும் காந்தப்புலத்தைக் காண்க.

 18. 4 x 5 = 20
 19. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

 20. q மின்னூட்டம் பெற்ற துகளொன்று \(\vec { B } \) காந்தப்புலத்தில் \(\vec { v } \) என்ற திசைவேகத்தில் நேர்க்குறி y – திசையில் செல்கிறது. பின்வரும் நிபந்தனைகளின்படி லாரன்ஸ் விசையைக் கணக்கிடுக.
  (அ) காந்தப்புலம் நேர்க்குறி y – திசையில் உள்ளபோது
  (ஆ) காந்தப்புலம் நேர்க்குறி z – திசையில் உள்ளபோது
  (இ) துகளின் திசைவேகத்துடன் θ கோணத்தை ஏற்படுத்தும் காந்தப்புலம் zy தளத்தில் உள்ளபோது. மேற்கண்ட ஒவ்வொரு நிபந்தனைகளிலும் காந்தவிசையின் திசையினைக் குறிப்பிட்டு காட்டுக.

 21. ஒற்றை அயனியாக்கம் செய்யப்பட்ட இரண்டு யுரேனியம் ஐசோடோப்புகள் \(_{ 92 }^{ 235 }{ U }\) மற்றும் \(_{ 92 }^{ 238 }{ U }\) (ஒரே அணு எண்ணும், வேறுபட்ட நிறை எண்ணும் கொண்டிருப்பவை ஐசோடோப்புகளாகும்) 0.500 T வலிமை கொண்ட கந்தபுலத்தினுள் 1.00 x 105 ms-1 திசைவேகத்துடன் கந்தபுலத்திற்குச் செங்குத்தாக செலுத்தப்படுகின்றன. அரைவட்டப்பாதையை இவ்விரண்டு ஐசோடோப்புகளும் நிறைவு செய்த உடன் அவற்றிக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. மேலும் இவ்விரண்டு ஐசோடோப்புகளும் அரைவட்டப்பாதையை நிறைவு செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தையும் கணக்கிடுக. (கொடுக்கப்பட்டவை: ஐசோடோப்புகளின் நிறைகள் m235 = 3.90 × 10-25 kg மற்றும் m238 = 3.95 × 10-25 kg)

 22. ஒரு இயங்குசுருள் கால்வனோமீட்டர் ஒன்றின் கம்பிச்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கை ஐந்து. ஒவ்வொரு சுற்றின் நிகர பரப்பும் 2 × 10-2 m2. இக்கம்பிச்சுருள் 4 × 10-2 Wb m-2 வலிமை கொண்டகாந்தப்புலம் ஒன்றினுள் 4 × 10-9 N m deg-1 முறுக்கு மாறிலி K கொண்ட இழையினால் தொங்கவிடப்பட்டுள்ளது.
  (அ) கால்வனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறன் டிகிரி / மைக்ரோ – ஆம்பியரில் காண்க.
  (ஆ) 50 பிரிவுகள் கொண்ட அளவுகோலின் முழு விலக்கத்திற்கான மின்னழுத்தம் 25 mV என்ற நிபந்தனையில் அதன் மின்னழுத்த உணர்திறனைக் காண்க.
  (இ) கால்வனோமீட்டரின் மின்தடையைக் காண்க

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard இயற்பியல் Chapter 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Physics Chapter 3 Magnetism And Magnetic Effects Of Electric Current Important Question Paper )

Write your Comment