Important Question Part-II

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 02:40:00 Hrs
Total Marks : 120

    Section - A

    16 x 1 = 16
  1. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  2. ஆயத்த ஆடைகள் நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.60,000 அவரது முதல் ரூ.3,40,000 எனில் அந்நிறுவனத்தில் சொத்துக்கள் ________ ஆகும்.

    (a)

    ரூ.2,80,000

    (b)

    ரூ.2,00,000

    (c)

    ரூ.4,00,000

    (d)

    ரூ.5,00,000

  3. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு______.

    (a)

    பெயரளவு கணக்கு

    (b)

    சொத்து கணக்கு

    (c)

    ஆள்சார் கணக்கு

    (d)

    பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

  4. பின்வருவனவற்றுள் அறக்கொடை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பன்னாட்டு மன்றங்கள் போன்றவை எவற்றிற்கு உதாரணங்களாகும்?

    (a)

    நிதி நிறுவனங்கள் 

    (b)

    இலாப நோக்கமற்ற அமைப்புகள் 

    (c)

    இலாப நோக்கமுடைய அமைப்புகள் 

    (d)

    இவற்றில் எதுவுமில்லை 

  5. கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1932 –ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்______.

    (a)

    ஆண்டுக்கு 8%

    (b)

    ஆண்டுக்கு 12%

    (c)

    ஆண்டுக்கு 5%

    (d)

    ஆண்டுக்கு 6%

  6. எந்த நிறுவனம் இரண்டு அல்லது மேற்பட்ட நபர்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நாடைபெறுகிறது?

    (a)

    கூட்டாண்மை

    (b)

    தனியாள் வணிகம்

    (c)

    கூட்டுறவுச் சங்கம்

    (d)

    இந்துக் கூட்டுக் குடும்ப வணிகம்

  7. உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

    (a)

    பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்

    (b)

    சொத்துகள் மற்றும் பொறுப்புகள்

    (c)

    சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்

    (d)

    நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

  8. ______ என்பது தொடர்ச்சியான இடைவெளிகளில் தொடர்ந்து சீராக பெறப்படும் ரொக்க ஓட்டத்தைக் குறிக்கும்

    (a)

    ஆண்டுத்தொகை

    (b)

    கூட்டுத் தொகை

    (c)

    சராசரி தொகை

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. கூட்டாளி சேர்ப்பின் போது சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

    (a)

    பழைய கூட்டாளிகள்

    (b)

    புதிய கூட்டாளி

    (c)

    அனைத்து கூட்டாளிகள்

    (d)

    தியாகம் செய்த கூட்டாளிகள்

  10. ஒரு சொத்தின் மதிப்பு அதிகரிக்கும் பொழுது, அது _________ இனமாகும்

    (a)

    இலாப

    (b)

    நட்ட

    (c)

    வருவாய்

    (d)

    செலவின

  11. X, Y மற்றும் Z என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2019, ஏப்ரல் 1 அன்று X இறந்து விட்டார். 2018 இல் இலாபம் ரூ.36,000 என்ற அடிப்படையில் 2019 ஆம் ஆண்டுக்குரிய இலாபத்தில் X ன் பங்கினைக் கண்டறியவும்.

    (a)

    ரூ. 1,000

    (b)

    ரூ. 3,000

    (c)

    ரூ.12,000

    (d)

    ரூ.36,000

  12. ________ என்பது தொடரும் கூட்டாளிகளுக்கு கிடைக்கப் பெற்ற இலாபத்தின் விகிதாச்சாரம் ஆகும்.

    (a)

    ஆதாய விகிதம்

    (b)

    தியாக விகிதம்

    (c)

    பிளளையா இலாப விகிதம்

    (d)

    ஆதாய விகிதம்

  13. முன்னுரிமைப் பங்கு என்பது
    (i) நிலையான விகிதத்தில் பங்காதாயம் செலுத்துவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு
    (ii) கலைப்பின்போது பங்கு முதலை திரும்பப்பெறுவதற்கான முன்னுரிமையைப் பெற்ற பங்கு

    (a)

    (i) மட்டும் சரியானது

    (b)

    (ii) மட்டும் சரியானது

    (c)

    (i) மற்றும் (ii) சரியானது

    (d)

    (i) மற்றும் (ii) தவறான

  14. மறு வெளியீட்டு இலாபம் மாற்றப்படுவது ______ கணக்கு.

    (a)

    முதலினக் காப்பு 

    (b)

    பத்திமுனைமக் கணக்கு 

    (c)

    பங்கு ஒறுப்பிழப்பு 

    (d)

    முகமதிப்பு 

  15. பின்வருவனவற்றில் எது நிதிநிலைப் பகுப்பாப்பாய்வின் ஒரு கருவி அல்ல?

    (a)

    போக்குப் பகுப்பாய்வு

    (b)

    பொது அளவு அறிக்கை

    (c)

    ஒப்பீட்டு அறிக்கை

    (d)

    நிர்ணயிக்கப்பட்ட அடக்கவிலையியல்

  16. ________ ஒட்டுமொத்த நிறுவனத்திற்கும் தயாரிக்கப்படுகின்றன.

    (a)

    வியாபாரக் கணக்கு 

    (b)

    இலாப நட்டக் கணக்கு 

    (c)

    இருப்புநிலைக் குறிப்பு 

    (d)

    நிதிநிலை அறிக்கைகள்

  17. Section - B

    8 x 1 = 8
  18. இறுதி கடனீதோர் 

  19. (1)

    மொத்தக் கடனீந்தோர் க/கு 

  20. இருப்பு நிலைக் குறிப்பு 

  21. (2)

    6%

  22. இந்திய கூட்டாண்மைச் சட்டம்

  23. (3)

    சாதகமான இடவமைவு

  24. தன்னுருவாக்க நற்பெயர்

  25. (4)

    வியாபாரத்தின் இயக்க முடிவுகள் 

  26. குவிந்த காப்புகள்

  27. (5)

    பெயரளவு கணக்கு

  28. மறுமதிப்பீட்டுக் கணக்கு

  29. (6)

    1932

  30. அழைப்பு முன்பணம் 

  31. (7)

    அறிக்கை 

  32. நிதிநிலை அறிக்கைகள் 

  33. (8)

    பொறுப்புகள் பக்கம்

    Section - C

    8 x 2 = 16
  34. கூற்று (A): கணக்கேடுகள், இரட்டைப் பதிவு முறையின் படி பராமரிக்கப்படாத போது அந்த பதிவேடுகள் முழுமைபெறா பதிவேடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
    காரணம் (R): பொதுவாக, ரொக்கக் கணக்கு மற்றும் ஆள்சார் கணக்குகளான வாடிக்கையாளர் மற்றும் கடனீந்தோர் கணக்கு மட்டுமே முழுமையாகவும், பிற கணக்குகள் தேவைக்கேற்பவும் பராமரிக்கப்படுகின்றன.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  35. கூற்று (A): இலாப நோக்கற்ற அமைப்புகள் அவற்றின் உறுப்பினர்களுக்கு அல்லது சமுதாயத்திற்கு சேவைகள் வழங்குவதற்காக பெரும்பாலும் இயங்குகின்றன.
    காரணம் (R): சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் தொடக்க இருப்புகளை ஒப்பிடுவதன் மூலம் தொடக்க முதல் கண்டறியப்படுகிறது.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  36. கூற்று (A): இந்தியாவில் கூட்டாண்மை நிறுவனங்களை இந்திய கூட்டாண்மைச் சட்டம், 1952 நெறிப்படுத்துகிறது
    காரணம் (R): கூட்டாண்மை நிறுவனத்தை கூட்டாளிகள் அனைவருமோ அல்லது அனைவரின் சார்பில் அவர்களில் ஒருவரோ நடத்தலாம்
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  37. கூற்று (A): நற்பெயர் என்பது நிறுவனம் வருங்காலத்தில் எதிர்பார்க்கும் கூடுதல் இலாபத்தைக் கணக்கிட்டு உருவாக்கப்படும் தற்போதைய மதிப்பு ஆகும்.
    காரணம் (R): நிறுவனத்தின் பொருட்கள் தரமாக இருப்பதனால் ஏற்பட்டுள்ள நன்மதிப்பு காரணமாக பொருட்கள் உடனடியாக விற்பனை ஆகின்றன. எனவே, நற்பெயர் மதிப்பு உயர்கிறது.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  38. கூற்று (A): சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை மறுபதிப்பீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் இலாப, நட்டத்தை பழைய கூட்டாளிகளின் முதல் கணக்குகளுக்கு மற்றம் செய்வதாகும்.
    காரணம் (R): மறுமதிப்பீடு என்பது கூட்டாண்மை நிறுவனம் மாற்றியமைக்கப்படும் பொழுது அதன் சொத்துக்களையும் பொறுப்புகளையும் மதிப்பீடு செய்வதாகும்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  39. கூற்று (A): அனைத்து கூட்டாளிகளும் ஒப்புக் கொண்டால் ஒரு கூட்டாண்மை கலைக்கப்படலாம்
    காரணம் (R): ஒரு கூட்டாண்மை நிறுவனம் கூட்டாளிகளின் உடன்பட்டால் உருவாக்கப்படுவது போலவே உடன்பட்டால் உருவாக்கப்படுவது போலவே உடன்பட்டால் கலைக்கப்படலாம்.
    (அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
    (ஆ) (A) என்பது (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
    (இ) (A) சரி ஆனால் (R) தவறு
    (ஈ) (A) தவறு ஆனால் (R) சரி

  40. கூற்று (A): பிற பங்குகளுக்கு ஏதேனும் பங்காதாயம் வழங்கப்படுவதற்கு முன்பு குறிப்பிட்ட விகிதத்தில் பங்காதாயாம் பெறும் உரிமை முன்னுரிமை பங்குதாரர்களுக்கு பங்கு முதலை திருப்பிக் கொடுத்த பிறகே முன்னுரிமை பங்குநர்களுக்கு கொடுக்கப்படும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  41. கூற்று (A): பொது அளவு அறிக்கைகளில் பொது அளவு வருமான அறிக்கை மற்றும் பொது அளவு இருப்புநிலைக் குறிப்பு போன்றவைகள் அடங்கும்.
    காரணம் (R): போக்குப் பகுப்பாய்வு என்பது ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உள்ள தொகைகளின் இயக்கத்தை ஆய்வு செய்வதாகும்.
    அ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம் 
    ஆ) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல 
    இ) (A) சரி ஆனால் (R) தவறு 
    ஈ) (A) தவறு ஆனால் (R) சரி 

  42. Section - D

    8 x 2 = 16
  43. அ) முறையாகப் பராமரிக்கப்படாமை 
    ஆ) இருப்பாய்வு தயாரிப்பது கடினம் 
    இ) இலாபம் ஈட்டும் திறனை கண்டறிவது கடினம் 
    ஈ) இருப்புநிலைக் குறிப்பு 

  44. அ) சந்தா 
    ஆ) நுழைவுக்கட்டணம் 
    இ) மானிய உதவி 
    ஈ) மதிப்பூதியம் 

  45. (அ) பங்குகள்
    (ஆ) உற்பத்திக் கணக்கு
    (இ) இலாபநட்டப் பகிர்வு கணக்கு
    (ஈ) இருப்பு நிலைக் குறிப்பு

  46. (அ) உயர் இலாபத்தில் கொள்முதல் முறை
    (ஆ) ஆண்டுத்தொகை முறை
    (இ) நேர்கோட்டுத் முறை
    (ஈ) உயர் இலாபத்தினை மூலதனமாக்கும் முறை

  47. மறுமதிப்பீட்டு கணக்கின் பற்று இனங்கள்
    (அ) சொத்துக்களின் மதிப்பு குறைதல்
    (ஆ) பொறுப்புகளில் மதிப்பு அதிகரித்தல்
    (இ) சொத்துக்களின் மதிப்பு அதிகரித்தல்
    (ஈ) ஏட்டில் பதிவு செய்யாத பொறுப்புகளை பதிவு செய்தல்

  48. கூட்டாளியின் இறப்பின் போது தேவையான சரிக்கட்டுதல்கள்
    (அ) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்தல்
    (ஆ) நற்பெயர் சரிக்கட்டுதல்கள்
    (இ) இறந்த கூட்டாளிக்கு உரிய தொகையை தீர்வு செய்தல்
    (ஈ) ஆதாய விகிதம் கண்டுபிடித்தல்

  49. அ) அங்கீகரிக்கப்பட்ட முதல் 
    ஆ) வெளியிட்ட முதல் 
    இ) ஒப்பிய முதல் 
    ஈ) அழைப்பு நிலுவை 

  50. அ) இருப்புநிலைக் குறிப்பு 
    ஆ) ஒப்பீட்டு அறிக்கை 
    இ) போக்குப் பகுப்பாய்வு 
    ஈ) ரொக்க ஓட்டப் பகுப்பாய்வு 

  51. Section - E

    7 x 2 = 14
  52. 1) ஒற்றைப்பதிவு முறையில் ஆள்சார் மற்றும் ரொக்கக் கணக்குகள் மட்டும் பராமரிக்கப்படுகிறது.
    2) ஒற்றைப்பதிவு முறையில் விரவிதிப்பு அதிகாரிகள் ஏற்றுக் கொள்கின்றனர்.
    3) ஒற்றைப் பதிவு முறையில் தனி வாணிக நிறுவங்களுக்கு ஏற்றது.
    அ) 1 மட்டும் சரி 
    ஆ) 1, 2 மற்றும் 3 சரி 
    இ) 2 மற்றும் 3 சரி 
    ஈ) 1 மற்றும் 3 சரி 

  53. 1. செலவுகள், நட்டங்கள் மற்றும் சொத்துகள் பற்றிருப்பைக்  கொண்டிருக்கும்.
    2. ஆதாயம், வருமானம் மற்றும் பொறுப்புகள் வரவிருப்பைக் கொண்டிருக்கும்.
    3) பழைய செய்த்தித்தாள்கள் விற்பது ஒரு வருவாயின செலவுகள் ஆகும்.
    அ) 1 மட்டும் சரி  
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மற்றும் 2 சரி 
    ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  54. 1. கூட்டாண்மையை உருவாக்க குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் இருக்க வேண்டும்
    2. கூட்டாளிகளின் உறவு பரஸ்பரமாக ஏற்படுகிறது
    3. கூட்டாண்மை உடன்பாடு சட்டப்படியான தொழில் புரிவதற்காக இருத்தல் வேண்டும்
    (அ) 1 மற்றும் 3 சரி
    (ஆ) 2 மற்றும் 3 சரி
    (இ) 1,2 மற்றும் 3 சரி
    (ஈ) 2 மட்டும் சரி

  55. 1. நற்பெயர் அதிக இலாபம் ஈட்டுவதற்கு மற்றும் அதிக வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு உதவுகிறது.
    2. போட்டியே இல்லாத அல்லது குறைவான போட்டியைக் கொண்டுள்ள நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு அதிகமானதாக இருக்கும்.
    3. சாதாரண சராசரி இலாபமுறையில் நற்பெயரானது, சராசரி இலாபத்தை குறிப்பிட்ட கொள்முதல் ஆண்டுகளின் எணிக்கையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுவது.
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 1 மற்றும் 2 சரி
    (இ) 3 மட்டும் சரி
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி

  56. 1. விலகும் கூட்டாளி, விலகும் நாள் வரை கூட்டாண்மை நிறுவனத்தின் செயல்களுக்கு பொறுப்பானவராவார்.
    2. மறுமதிப்பீட்டின் இலாபம் அல்லது நாட்டம் அனைத்து கூட்டாளிகளுக்கு பழைய இலாபப் பகிர்வு விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்
    3. ஆதாய விகிதம் என்பது, தொடரும் கூட்டாளிகள் அடையும் இலாப விகிதம் ஆகும்
    (அ) 1 மட்டும் சரி
    (ஆ) 2 மட்டும் சரி
    (இ) 1 மற்றும் 3 சரி 
    (ஈ) 1,2 மற்றும் 3 சரி 

  57. 1. பங்குதாரர்கள் அழைப்புத் தொகையை செலுத்தத் தவறிடும் போது நிறுமம் பறிமுதல் செய்தல் பங்கு ஒறுப்பிழப்பு செய்யும் அதிகாரத்தை நிறுமத்திற்கு வழங்கி இருக்க வேண்டும்.
    3. ஒறுபிழப்பிற்கு பின்னர் பங்குநர் உறுப்பினர் தகுதியை இழந்து விடுகிறார்.
    அ) அனைத்தும் சரி 
    ஆ) 1 மற்றும் 2 சரி 
    இ) 2 மட்டும் சரி 
    ஈ) 1 மட்டும் சரி 

  58. 1. பல ஆண்டுகளுக்கான தொகைகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்டால், அப்பகுப்பாய்வு கிடைமட்ட பகுப்பாய்வு என்றழைக்கப்படும்.
    2. ஒரு கணக்காண்டிற்குரிய தொகை மட்டுமே பகுப்பாய்விற்கு எடுத்து கொள்ளப்படுமானால் அது செங்குத்துப் பகுப்பாய்வு கொண்டது.
    3. ஒப்புநோக்க அறிக்கை மூன்று பத்திகளைக் கொண்டது.
    அ) 1 மட்டும் சரி 
    ஆ) 2 மட்டும் சரி 
    இ) 1 மற்றும் 2 சரி 
    ஈ) 1,2 மற்றிம் 3 சரி 

  59. Section - F

    6 x 2 = 12
  60. அ) நிலை அறிக்கை - தொடக்க முதல் 
    ஆ) மொத்த கடனீந்தோர் க/கு - கடன் கொள்முதல் 
    இ) மொத்த கடனாளிகள் க/கு - ரொக்க கொள்முதல் 
    ஈ) இருப்பு நிலைக் குறிப்பு - உண்மையான நிதிநிலை 

  61. அ) இலாப நோக்கமற்ற அமைப்புகள் - மனமகிழ் மன்றங்கள்  
    ஆ) வாடகையும் வரியும் - வருவாயின வரவுகள் 
    இ) ஆயுள் உறுப்பினர் கட்டணம் - முதலின வரவுகள் 
    ஈ) விளம்பரம் - வருவாயினச் செலுத்தல்கள் 

  62. (அ) கூட்டாண்மைச் சட்டம் 1932
    (ஆ) கூட்டாண்மை உறுப்பினர் கூட்டாளி
    (இ) கூட்டாண்மை பொறுப்பு வரையறு பொறுப்பு 
    (ஈ) கூட்டாண்மை உறவு முறை முதல்வர் மற்றும் முகவர்
  63. (அ) நற்பெயர்
    (ஆ) உயர் இலாபம் சராசரி இலாபம் + சாதாரண இலாபம்
    (இ) சாதாரண இலாபம் பயன்படுத்தப்பட்ட முதல் x சாதாரண இலாப விகிதம்
    (ஈ) ஆண்டுத் தொகை காரணி \(\frac { { (1+i) }^{ n }-1 }{ i(1{ +i) }^{ n } } \)
  64. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

    (அ) தியாகப் பங்கு பழைய பங்கு - புதிய பங்கு
    (ஆ) பகிர்ந்து தரா இலாபம் இருப்புநிலைக் குறிப்பு
    (இ) பழைய கூட்டாளியின் புதிய பங்கு பழைய பங்கு - தியாகப் பங்கு
    (ஈ) பழைய கூட்டாளியின் தியாகப்பங்கு பழைய பங்கு x தியாகப் பங்கின் விகிதம்
  65. அ) பத்திர முனைமம் - பொறுப்புகள் பக்கம் 
    ஆ) அழைப்பு நிலுவை - சொத்துக்கள் பக்கம் 
    இ) முதலினக் காப்பு - பொறுப்புகள் பக்கம் 
    ஈ) பங்கு வெளியீட்டு தள்ளுபடி - சொத்துகள் பக்கம் 

  66. Section - G

    4 x 1 = 4
  67. அ) சரிகட்டப்பட்ட இறுதி முதல் -  இறுதி முதல் +எடுப்புகள்-கூடுதல் முதல்
    ஆ) இலாபம்/நட்டம் - இறுதி முதல் -எடுப்புகள் - கூடுதல் முதல் +தொடக்க முதல்
    இ) முதல் - சொத்துகள் +பொறுப்புகள்
    ஈ) சொத்துகள் பொறுப்புகள் - நிகர இலாபம்

  68. அ) பங்காதாயம் - வருவாயின வரவுகள்  
    ஆ) அறக்கட்டளை நிதி - வருவாயினச் செலுத்தல்கள் 
    இ) தொலைபேசிக் கட்டணம் - முதலினச் செலவுகள் 
    ஈ) முதலீடுகள் - முதலின வரவுகள் 

  69. (அ) எடுப்புகள் ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் எடுத்திருந்தால் சராசரி காலம் 6.5
    (ஆ) எடுப்புகள் ஒவ்வொரு மாத நடுவிலும் எடுத்திருந்தால் சராசரி காலம் 7
    (இ) எடுப்புகள் ஒவ்வொரு மாத இறுதியிலும் எடுத்திருந்தால் சராசரி காலம் 8
    (ஈ) இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1952
  70. அ) அங்கீகரிக்கப் பட்ட முதல் - ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் 
    ஆ) வெளியிட்ட முதல் - பெயரளவு முதல் 
    இ) ஒப்பிய முதல் - பதிவு செய்யப்பட்ட முதல் 
    ஈ) காப்பு முதல் - அழைப்பு விடுக்கப்பட்ட முதல் 

  71. Section - H

    15 x 2 = 30
  72. பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000
    கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000
    அளித்த தள்ளுபடி 5,000
    விற்பனைத் திருப்பம் 2,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000
  73. உயில்கொடை என்றால் என்ன?

  74. மதிப்பூதியம் என்றால் என்ன?

  75. பிரியா மற்றும் கவிதா இருவரும் கூட்டாளிகள். பிரியா ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலும் ரூ.4,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 6% 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்தி கணக்கிடவும்.

  76. கூட்டாண்மை பொருள் தருக.

  77. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014: ரூ.10,000; 2015: ரூ.11,000; 2016: ரூ.12,000; 2017: ரூ.13,000 மற்றும் 2018: ரூ.14,000; 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  78. ஆண்டுத் தொகை என்றால் என்ன?

  79. சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் என்றால் என்ன?

  80. கூட்டாளி சேர்ப்பு என்றால் என்ன? அவர் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகிறார்?

  81. தீனா, சூர்யா மற்றும் ஜானகி என்ற கூட்டாளிகள் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று தீனா கூட்டாண்மையை விட்டு விலகினார். அவருடைய விலகலின் போது நிறுவனத்தின் கணக்கேடுகள் ரூ 50,000 காப்பு நிதியினைக் காட்டியது. காப்பு நிதியினை மாற்றுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினை தரவும்

  82. புதிய இலாப விகிதம் என்றால் என்ன?

  83. கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதலாம் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  84. பொது வெளியீடு என்றால் என்ன?

  85. போக்குப் பகுப்பாய்வு எப்போது இதர பகுப்பாய்வு கருவிகளை விட ஏற்புடையதாகும்?

  86. கிடைமட்ட பகுப்பாய்வு என்றால் என்ன?

  87. Section - I

    15 x 3 = 45
  88. ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 1.1.2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    கைரொக்கம் 80,000 90,000
    சரக்கிருப்பு 1,80,000 1,40,000
    கடனாளிகள் 90,000 2,00,000
    பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000
    வங்கிக் கடன் 60,000 60,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000
    பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000

    அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.

  89. ஒரு சங்கத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்? 2016-17 ல் அச்சங்கம் பெற்ற சந்தா ரூ.25,000. இதில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ. 2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுக்கான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டியுள்ளது.

  90. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கை தயாரிப்பதற்கான படிநிலைகளை எழுதுக.

  91. தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல்கணக்குகள்:   பல்வகைச் சொத்துகள் 80,000
    பிருந்தா 30,000    
    பிரவீனா 40,000    
    இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000    
      80,000   80,000

     2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.

  92. எடுப்புகள் மீதான வட்டியை கணக்கிடும் முறைகளை எழுதுக.

  93. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
    2014:  ரூ.4,000; 2015: ரூ.3,000; 2016: ரூ.5,000; 2017: ரூ.4,500 மற்றும் 2018: ரூ.3,500. 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 3 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  94. நற்பெயரை மதிப்பீடு செய்வதற்கான தேவைகள் யாவை?

  95. நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.

  96. முதலீட்டு மாறுபடும் நிதி பற்றி குறிப்பு வரைக

  97. கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
    (i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
    (ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
    (iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  98. விலகும் கூட்டாளிக்குரிய தொகையை எவ்வகையில் தீர்க்கப்படலாம்?

  99. ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?  

  100. நிறுமத்தின் பண்புகளை எழுதுக.

  101. பொது அளவு வருமான அறிக்கை தயாரிக்கும் வழிமுறைகளை விளக்கவும்.

  102. நிதி அறிக்கைகளின் இயல்புகள் யாவை?

  103. Section - J

    16 x 5 = 80
  104. செல்வம் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

    விவரம் 1-1-2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    இயந்திரம் 60,000 60,000
    வங்கி ரொக்கம் 25,000 33,000
    பற்பல கடனாளிகள் 70,000 1,00,000
    சரக்கிருப்பு 45,000 22,000
    பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 38,000
    வங்கிக் கடன் 45,000 45,000
    பற்பல கடனீந்தோர் 25,000 21,000

    கூடுதல் தகவல்கள்:

      ரூ.   ரூ.
    ரொக்க விற்பனை 20,000 கடன் விற்பனை 1,80,000
    ரொக்கக் கொள்முதல் 8,000 கடன் கொள்முதல் 52,000
    கூலி 6,000 சம்பளம் 23,500
    விளம்பரம் 7,000 வங்கிக் கடன்மீது வட்டி 4,500
    எடுப்புகள் 60,000 கூடுதல் முதல் 21,000

    சரிக்கட்டுதல்கள்:
    இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும்.

  105. மளிகை வியாபாரம் நடத்திவரும் சுந்தரம் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்த்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    பொறி மற்றும் இயந்திரம்  20,000 20,000
    சரக்கிருப்பு  9,000 16,000
    பற்பல கடனாளிகள்  2,000 5,300
    பற்பல கடனீந்தோர்  5,000 4,000
    வங்கி ரொக்கம்  4,000 6,000

    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:

    விவரம்  ரூ.
    விளம்பரம்  4,700
    உள்தூக்குக் கூலி  8,000
    கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்  64,000
    எடுப்புகள்  2,000

    அவ்வாண்டின் மொத்த விற்பனை ரூ.85,000. கொள்முதல் திருப்பம் ரூ.2,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ.1,000. பொறி மற்றும் இயந்திரம் மீது 5% தேய்மானம் நீக்கவும்  ரூ.300 ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும். 

  106. கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

    விவரம்  ரூ ரூ விவரம் ரூ
    வங்கி மேல்வரைப்பற்று (1.4.2018)   6,000 மதிப்பூதியம் செலுத்தியது 2,800
    கைரொக்கம்    1,000 நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்  700
    மைதான பராமரிப்பிற்காக     விளையாட்டுப் போட்டிச் செலவுகள் 2,600
    கூலி செலுத்தியது   2,000 விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது 1,900
    சந்தா பெற்றது: முந்தை்தைய ஆண்டு 500   விளையாட்டுப் போட்டி நிதி நிதி வரவுகள் 5,200
    நடப்பு ஆண்டு 9,600   உயில்கொடைப் பெற்றது 2,000
    எதிர்வரும் ஆண்டு  400 10,500 ரொக்க இருப்பு (31.3.2019) 300
    கூலி கொடுபட வேண்டியது   2,200 அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை 2,000
    கடன்மீதான வட்டி செலுத்தியது   2,000  
  107. திருச்சி இலக்கிய மன்றத்தின் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு:

    திருச்சி இலக்கிய மன்றம் 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு
    பெறுதல்கள்  ரூ. ரூ. செலுத்தல்கள்  ரூ. ரூ.
    இருப்பு கீ/கொ      மைதான பராமரிப்பு    33,000
    ரொக்கம்  1,000   விளையாட்டுப் போட்டிச் செலவுகள்    38,000
    வங்கி  14,000   பல்வகைச் செலவுகள்    22,000
    சந்தா (2016-17ஆம் ஆண்டிற்கான ரூ.4,000 உட்பட)   60,000 அறைகலன்    40,000
    உயில்கொடை    18,000 இருப்பு கீ/இ     
    விளையாட்டுப் போட்டி நிதி    20,000 கைரொக்கம்  3,000  
    வரவுகள்   45,000 வங்கி ரொக்கம்  22,000 25,000
        1,58,000     1,58,000

    கூடுதல் தகவல்கள்:
    2017, ஏப்ரல் 1 அன்று மன்றத்தின் முதலீடு ரூ.80,000 ஆக இருந்தது. மன்றத்தின் விளையாட்டுப் போட்டி நிதிக் கணக்கின் வரவிருப்பில் ரூ.60,000 இருந்தது. 2018, மார்ச் 31-ல் பெறவேண்டிய சந்தா ரூ.8,000 மற்றும் 2018, மார்ச் 31 அன்று பெறவேண்டிய சந்தா ரூ.9,000 இறுதிக் கணக்குகளைத் தயார் செய்யவும்.

  108. பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.

    விவரம் ரூபன் ரூ. டெரி ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000
    2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000
    கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000
    2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000
    எடுப்புகள் மீது வட்டி 500 300
    இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800
    முதல் மீது வட்டி 3,500 2,500
    சம்பளம் - 18,000
    கழிவு 12,000 -
  109. நிலா மற்றும் மாதுரி இருவரும் கூட்டாளிகள், நிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.60,000 எடுத்துக்கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4, 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்

  110. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) நிறுவனத்தின் மொத்த சொத்துகள் ரூ.5,00,000
    (ஆ) நிறுவனத்தின் பொறுப்புகள் ரூ.2,00,000
    (இ) இவ்வகைத் தொழில்களின் சாதாரண இலாப விகிதம் 12.5%
    (ஈ) நிறுவனத்தின் சராசரி இலாபம் ரூ.60,000

  111. ஒரு நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் கீழ்கண்டவாறு நிகர இலாபங்களை ஈட்டியுள்ளது

      ரூ.
    முதல் ஆண்டு 36,000
    இரண்டாம் ஆண்டு 40,000
    மூன்றாம் ஆண்டு 44,000

    நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட முதல் ரூ,1,20,000, நியாயமான முதல் மீதான வருமானம் உயர் இலாபத்தை மூன்று ஆண்டு கொள்முதல் எனக்கொண்டு நற்பெயரைக் கணக்கிடுக 

  112. வீணா மற்றும் பியர்ல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     கட்டடம் 60,000
    வீணா 60,000   இயந்திரம் 30,000
    பியர்ல் 40,000 1,00,000 கடனாளிகள் 20,000
    காப்பு நிதி   30,000 சரக்கிருப்பு 10,000
    தொழிலாளர் ஈட்டு நிதி   10,000 வங்கி ரொக்கம் 30,000
    பற்பல கடனீந்தோர்   10,000    
        1,50,000   1,50,000

    01-04-2018 அன்று டெரி என்பவர் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
    (i) வீணா, பியர்ல் மற்றும் டெரியின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 5:3:2 ஆகும்.
    (ii) டெரி ரூ.30,000 முதலாக கொண்டு வர வேண்டும்.
    (iii) சரக்கிருப்பின் மதிப்பை 20% குறைக்க வேண்டும்.
    (iv) தொழிலாளர் ஈட்டு நிதி மீது எதிர்பார்க்கப்படும் கோருரிமை ரூ.1,000.
    (v) பதிவுறா முதலீடுகள் ரூ.11,000 ஏடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.
    (vi) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. டெரி தன்னுடைய நற்பெயரின் பங்கினை ரொக்கமாக கொண்டுவந்தார். டெரி நற்பெயராகக் கொண்டு வந்த தொகை முழுவதையும் பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொண்டனர்.
    தேவையான பேரேட்டு கணக்குகள் மற்றும் சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும்.

  113. அமலா, விமலா என்ற ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகளின் முறையே 5 : 3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். 1.4.2004 அன்று ஏடுகளில் காப்பு நிதி 48,000 ஆகக் காட்டுகிறது. அதே நாளில் கோமளா என்பவரைச் சேர்க்க முடிவெடுத்தனர் குறிப்பேட்டுப்பதிவு தருக

  114. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

    பொறுப்புகள்  ரூ. ரூ. சொத்துகள்  ரூ.
    முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
    சார்லஸ்  30,000   சரக்கிருப்பு 40,000
    முத்து  40,000   கடனாளிகள்  30,000
    சேகர்  20,000 90,000 வங்கி ரொக்கம்  42,000
    தொழிலாளர் ஈட்டு நிதி    27,000 இலாபநட்ட க/கு 18,000
    பற்பல கடனீந்தோர் க/கு   33,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
    (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும்

  115. சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3 : 4 : 2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018 டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு

    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     அறைகலன்  20,000
      சார்லஸ் 30,000   சரக்கிருப்பு 40,000
      முத்து 40,000   கடனாளிகள் 30,000
    தொழிலாளர் ஈட்டு நிதி 20,000 90,000 வங்கி ரொக்கம் 42,000
    பற்பல கடனீந்தோர்   27,000 இலாபநட்ட க/கு (நட்டம்) 18,000
        33,000    
        1,50,000   1,50,000

    1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின் படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
    (i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
    (ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
    (iii) வாராக்கடன் மீது ரூ.1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
    (iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதிப்படையவில்லை.
    (v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
    மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும். 

  116. ஷெரோ ஹெல்த் கேர் நிறுமம் ஒன்று ரூ.10 மதிப்புள்ள 3,00,000 நேர்மைப்பங்குகளை பங்கொன்றுக்கு ரூ. 2 வீதம் முனைமத்தில் வெளியிட விண்ணப்பங்களைக் கோரியது.
    விண்ணப்பத்தின் போது ரூ.3
    ஒதுக்கீட்டின் போது ரூ. 5 (முனைமம் உட்பட)
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.4
    மிகை ஒப்பம் உள்ள நிலையில் 4,00,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மிகுதியாகப் பெற்ற விண்ணப்பங்கள் இயக்குநர்களால் நிராகரிக்கப்பட்டன. அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  117. பாரத் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை முகமதிப்பில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. பங்குகள் மீதான பணம் செலுத்த வேண்டிய விவரங்கள் பின்வருமாறு:

    விண்ணப்பத்தின் போது பாங்கொன்றிற்கு      ரூ.5
    ஒதுக்கீட்டின் போது பாங்கொன்றிற்கு      ரூ.3
    முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது பாங்கொன்றிற்கு      ரூ.2

    60,000 பங்குகளுக்கு விண்ணப்பத் தொகை பெறப்பட்டது. கூடுதல் விண்ணப்பத் தொகை உடனடியாக திரும்பிச் செலுத்தப்பட்டது. மேற்கண்டவற்றை பதிவு செய்ய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.

  118. குமார் நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து போக்கு சதவிகிதங்களைக் கணக்கிடவும்.

    விவரம் ரூ. (ஆயிரத்தில்)
    2015-16 2016-17 2017-18
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 300 270 150
    இதர வருமானம் 50 80 60
    செலவுகள் 250 200 125
    வருமான வரி % 40 40 40
  119. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31,2016 மற்றும் மார்ச் 31,2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம்  2015-16
    ரூ.
    2016-17
    ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய்  4,00,000 6,00,000
    இதர வருமானங்கள்  50,000 1,50,000
    செலவுகள்  5,00,000 3,00,000
    வருமான வரி % 40 40

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium Accountancy Important Question) 

Write your Comment