Important Question Part-I

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 02:40:00 Hrs
Total Marks : 200

    Section - A

    33 x 1 = 33
  1. மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

    (a)

    வில்லியம் ஜோன்ஸ்

    (b)

    சார்லஸ் வில்கின்ஸ்

    (c)

    மாக்ஸ் முல்லர்

    (d)

    அரவிந்த கோஷ்

  2. பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) பாலகங்காதர திலகர்  1. இந்தியாவின் குரல்
    (ஆ) தாதாபாய் நெளரோஜி 2. மெட்ராஸ் டைம்ஸ்
    (இ) மெக்காலே 3. கேசரி
    (ஈ) வில்லியம் டிக்பை 4. இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
    (a)
    D
    2 4 1 3
    (b)
    D
    3 1 4 2
    (c)
    D
    1 3 2 4
    (d)
    D
    4 2 3 1
  3. பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

    (a)

    ஆங்கிலக் கல்விச் சட்டம் - 1843

    (b)

    அடிமைமுறை ஒழிப்பு - 1859

    (c)

    சென்னைவாசிகள் சங்கம் - 1852

    (d)

    இண்டிகோ கலகம் - 1835

  4. பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
    (i) கிழக்கிந்தியக் கழகம்
    (ii) சென்னை மகாஜன சங்கம்
    (iii) சென்னைவாசிகள் சங்கம்
    (iv) இந்தியச் சங்கம்

    (a)

    ii, i, iii, iv

    (b)

    ii, iii, i, iv

    (c)

    iii, iv, i, ii

    (d)

    iii, iv, ii, i

  5. இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர் _______.

    (a)

    சுபாஷ் சந்திர போஸ்

    (b)

    காந்தியடிகள்

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    பாலகங்காதர திலகர்

  6. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் _______.

    (a)

    சுரேந்திரநாத் பானர்ஜி

    (b)

    பத்ருதீன் தியாப்ஜி

    (c)

    A.O. ஹியூம்

    (d)

    W.C. பானர்ஜி

  7. “இந்தியாவின் முதுபெரும் மனிதர்” என அழைக்கப்படுபவர்_______.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    M.K. காந்தி

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  8. “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

    (a)

    பாலகங்காதர திலகர்

    (b)

    கோபால கிருஷ்ண கோகலே

    (c)

    தாதாபாய் நெளரோஜி

    (d)

    எம்.ஜி. ரானடே

  9. கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
    காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

    (a)

    கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (c)

    கூற்று சரி. காரணம் தவறு

    (d)

    கூற்று காரணம் இரண்டும் தவறு

  10. ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
    கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
    கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
    கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

    (a)

    1, 2

    (b)

    1, 3

    (c)

    இவற்றுள் எதுவுமில்லை

    (d)

    இவை அனைத்தும்

  11. கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
    காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

    (a)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

    (d)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

  12. 1859 - 60 இல் நடைபெற்ற புரட்சியின் பெயரை எழுதுக?

    (a)

    வேலூர் புரட்சி

    (b)

    பெரும் புரட்சி

    (c)

    மைசூர் புரட்சி

    (d)

    இண்டிகோ புரட்சி

  13. பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
    (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
    (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
    (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
    மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

    (a)

    (i) மட்டும்

    (b)

    (i) மற்றும் (iii) மட்டும்

    (c)

    (i) மற்றும் (ii) மட்டும்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  14. ஒருவரது சொந்த நாடு என்பதின் பொருள் எதைக் குறிப்பது

    (a)

    சமத்துவம்

    (b)

    சுதந்திரம்

    (c)

    சுதேசி

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  15. பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

    (a)

    மகாத்மா காந்தி

    (b)

    மதன்மோகன் மாளவியா

    (c)

    திலகர்

    (d)

    பி.பி. வாடியா

  16. காதர் கட்சியைத் தொடங்கியவர் யார்?

    (a)

    லால ஹர்தயாள் 

    (b)

    திலகர் 

    (c)

    லாலா லாஜபதிரை 

    (d)

    சுபாஷ் சந்திரபோஷ் 

  17. பின்வரும் நிகழ்வுகளைச் சரியான கால வரிசைப்படி அமைத்து கொடுக்கப்பட்டுள்ள விடைகளிலிருந்து சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
    (i) கேதா சத்தியாகிரகம்
    (ii) சம்பரான் இயக்கம்
    (iii) பிராமணரல்லாதார் இயக்கம்
    (iv) வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம்

    (a)

    ii, iii, i, iv

    (b)

    iii, ii, i, iv

    (c)

    ii, i, iv, iii

    (d)

    ii, i, iii, iv

  18. இந்திய பணியாளர் சங்கத்தை தோற்றுவித்தவர் யார் ?

    (a)

    காந்தி 

    (b)

    கோகலே 

    (c)

    நேரு 

    (d)

    சுபாஷ்

  19. முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு_______.

    (a)

    1852

    (b)

    1854

    (c)

    1861

    (d)

    1865

  20. தென்னிந்தியாவில் பல தொழிற்சங்களை இவர் தோற்றுவித்தார்

    (a)

    காமராஜர்

    (b)

    பெரியார்

    (c)

    திரு.வி.க

    (d)

    அண்ணா

  21. கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.
    காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

    (a)

    கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (b)

    கூற்று சரி, காரணம் தவறு

    (c)

    கூற்று மற்றும் காரணம் தவறு

    (d)

    கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

  22. லக்னோ ஒப்பந்தம் நடைபெற்ற ஆண்டை எழுதுக.

    (a)

    1920

    (b)

    1916

    (c)

    1927

    (d)

    1919

  23. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) இந்து-முஸ்லீம் கலவரம் - 1.மோகன் சிங்
    (ஆ) ஆகஸ்ட் கொடை  - 2.கோவிந்த் பல்லப் பந்த்
    (இ) பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்  - 3. லின்லித்கோ பிரபு
    (ஈ) இந்திய தேசிய இராணுவம் - 4. நவகாளி
    (a)
    ஆ  இ  ஈ 
    3 4 2 1
    (b)
    ஆ  இ  ஈ 
    4 2 1 3
    (c)
    ஆ  இ  ஈ 
    4 3 2 1
    (d)
    ஆ  இ  ஈ 
    3 2 4 1
  24. வெள்ளையனே வெளியேறு இயக்கம் காந்தியால் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

    (a)

    1950

    (b)

    1945

    (c)

    1942

    (d)

    1940

  25. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.
    (i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு.
    (ii) நேருவின் தலைமையிலான இடைக்காலஅரசாங்கம்
    (iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
    கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    ii,i,iii 

    (b)

    i,ii,iii 

    (c)

    iii,ii,i 

    (d)

    ii,iii,i 

  26. மௌண்ட்பேட்டன் திட்ட வெளியீட்டிற்கும், இந்திய விடுதலை ஆகியவற்றுக்கான கால இடைவெளி எத்தனை நாட்கள் ஆகும்?

    (a)

    82

    (b)

    70

    (c)

    72

    (d)

    73

  27. இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

    (a)

    முதலாளித்துவ

    (b)

    சமதர்ம

    (c)

    தெய்வீக

    (d)

    தொழிற்சாலை

  28. மெகல்லனின் மறைவுக்குப் பிறகு எந்தக் கப்பல் திரும்பியது?

    (a)

    சாண்டா மரியா    

    (b)

    பிண்ட்டா

    (c)

    நினா    

    (d)

    விட்டோரியா

  29. பாஸ்டில் சிறை தகர்ப்பு  _____  இல்  நடந்தது. 

    (a)

    1798, ஜூன் 5

    (b)

    1789, ஜூலை 14

    (c)

    1789, நவம்பர் 11

    (d)

    1789, மே 1

  30. கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானவற்றை தெரிவு செய்துப் பொருத்துக

    (அ) புதிய கிறித்த வம் 1) வில்லியம் லவெட்
    (ஆ) எ நியூ வியூ ஆப் சொசை ட்டி 2) லூயி பிளாங்க்
    (இ) ரெவ்யூ டூ ப்ராக்ரஸ்   3) செயின்ட் சீமோன்
    (ஈ) மக்களின் பட்டயம் 4) இராபர்ட் ஓவன்
    (a)
    2 3 4 1
    (b)
    3 4 2 1
    (c)
    1 4 3 2
    (d)
    3 1 2 4
  31. ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?

    (a)

    மார்னே போர்

    (b)

    டானென்பர்க் போர்

    (c)

    வெர்டூன் போர்

    (d)

    சோம் போர்

  32. சீனாவிடமிருந்து மஞ்சூரியாவை ஜப்பான் எந்த ஆண்டு படையெடுத்து கைப்பற்றியது?

    (a)

    1931

    (b)

    1932

    (c)

    1933

    (d)

    1934

  33. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக ______ நாடு உருவாகியிருத்தது.

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    ஸ்பெயின் 

    (c)

    ஜெர்மனி

    (d)

    ஆஸ்திரியா

  34. Section - B

    22 x 2 = 44
  35. தேசியம் என்றால் என்ன?

  36. பஞ்சங்களும், இந்தியர்கள் பஞ்சத்தினால் உயிரிழந்ததை வில்லியம் டிக்பை குறிப்பிடுவது யாது?

  37. தீவிர தேசியவாதம் 1908க்குப் பின்னர் ஏன் குறைந்தது?

  38. சுதேசி இயக்கம் எப்போது பிரகடனம் செய்யப்பட்டது?

  39. 1915ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் பற்றி விவரி?

  40. லக்னோ ஒப்பந்தத்தின் சிறப்பு என்ன?

  41. இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

  42. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  43. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களை குறிப்பிடுக?

  44. M. சிங்காரவேலர் பற்றி எழுதுக.

  45. இந்து-முஸ்லிம்களிடையே பிரிவினை ஏற்படக் காரணமான ஆரிய சமாஜத்தின் இரண்டு இயக்கங்கள் யாவை?

  46. இந்து மகா சபை பற்றி எழுதுக.

  47. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

  48. இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணை கூறுகள் யாவை?

  49. இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?

  50. காந்தியடிகள் பிரிவினையை ஏன் ஏற்றுக் கொண்டார்?

  51. சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  52. டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.

  53. மனிதன்  மற்றும்  குடிமக்களின்  உரிமைப்  பிரகடனத்தின்  சாரம்சத்தை  அடிக்கோடிட்டுக்  காட்டவும்.

  54. மெட்டர்னிக் சகாப்தத்தில் ஐரோப்பிய  கூட்டு (Concert of Europe)  எத்தகைய  பங்காற்றியது  என்பதனை விளக்குக.

  55. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?

  56. ரோம் -பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப்  பின்புலமாக  அமையப்பெற்றது  எது?

  57. Section - C

    22 x 3 = 66
  58. பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

  59. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?

  60. பிபின் சந்திரபாலின் விடுதலை தினத்தை திருநெல்வேலியில் சுயராஜ்ய தினமாக சுதேசி இயக்கத் தலைவர்கள் கொண்டாட திட்டமிட்டதின் விளைவு யாது?

  61. சுதேசி இயக்கத்தின் குறிக்கோள்கள் குறித்து G. சுப்பிரமணியம் மற்றும் கோபால கிருஷ்ண கோகலேயின் கருத்துகள் யாவை?

  62. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அத்தியாயமாக காதர் இயக்கம் கருதப்படுவது ஏன்?

  63. சுதேசி இயக்கம் (1905) பற்றி எழுதுக?

  64. மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.

  65. சைமன்குழு - நேரு அறிக்கை பற்றி எழுதுக?

  66. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO)பற்றி குறிப்பு எழுதுக.

  67. சிட்டகாங் ஆயுதப்படைத் தாக்குதல் என்றால் என்ன?

  68. வகுப்புவாதம் ஒரு கருத்தியலாக எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

  69. சரோஜினி நாயுடுவை பற்றி சுருக்கமாக எழுதுக.

  70. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

  71. முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டதைக் எழுதுக.

  72. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.

  73. பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?

  74. ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.

  75. அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

  76. ஏழை மக்களும் உழைக்கும் வர்க்கமும் ஏற்றம்பெற பாரிஸ் கம்யூன் எடுத்த நடவடிக்கைகளை விவாதத்திற்கு உட்படுத்துக.

  77. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

  78. இந்தோனேஷிய விடுதலைக்கு சுகர்னோ ஆற்றியப் பங்கை மதிப்பிடுக.

  79. Section - D

    22 x 5 = 110
  80. இந்திய நடுத்தர வர்க்கத்தில் மேற்கத்தியக் கல்வியின் தாக்கத்தையும் பின்னர் அது இந்தியச் சமூகத்தைச் சீர்த்திருத்தவும் மற்றும் மீட்டுருவாக்கம் செய்திட ஆற்றிய பங்கினை விவாதிக்கவும்.

  81. இந்திய தேசிய காங்கிரஸ் பற்றி விவரிக்கவும்?

  82. இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

  83. சூரத் பிளவுப் பற்றி ஒரு கட்டுரை வரைக?

  84. மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சியின் காரணங்கள் மற்றும் துயர விளைவுகளைப் பற்றி விவாதிக்கவும்.

  85. அகில இந்திய தன்னாட்சி மற்றும் ஹோம் ரூல் இயக்கம் பற்றி எழுதுக?

  86. ஒத்துழையாமை இயக்கத்திலிருந்து சட்ட மறுப்பு இயக்கம் எவ்வழிகளில் மாறுபட்டிருந்தது?

  87. வட்டமேசை மாநாடுகள் பற்றி எழுதுக?

  88. 1919-1939ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில்வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

  89. கல்பனா தத் (1913 - 1995) பற்றி விரிவாக எழுதுக.

  90. பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

  91. அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சியை விளக்குக.

  92. இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படைகலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?

  93. தனிநபர் சத்தியாகிரகம் பற்றி விரிவாக எழுதுக?

  94. 1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக.

  95. பாண்டுங் பேரறிக்கையின் முக்கிய கோட்பாடுகளை விவரி.

  96. ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.

  97. கிழக்குப் பகுதிக்கு புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிப்பதில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் முன்முயற்சிகளை விவரிக்கவும். நவீன உலகின் பொருளாதார வரலாற்றில் ஏன் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது?

  98. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கிற்று? நவீன சமூகத்தின் மீது அது என்ன தாக்கத்தை  ஏற்படுத்தி  உள்ளது?

  99. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முக்கியத்துவம் பெற்ற கூட்டு சிந்தனையாளர்களை (Collectivist Thinkers) அடையாளப்படுத்தி அவர்கள் சோஷலிச சிந்தனையை செழுமையாக்க ஆற்றிய பங்கைக் கூறுக.

  100. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

  101. இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.

  102. Section - E

    1 x 10 = 10
  103. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. பம்பாய்
    2. கல்கத்தா
    3. சென்னை
    4. அகமதாபாத்
    5. லக்னோ
    6. கான்பூர்
    7. சூரத்
    8. லாகூர்
    9. பூனா
    10. அலகாபாத்

*****************************************

Reviews & Comments about 12 ஆம் வகுப்பு வரலாறு அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (12th Standard Tamil Medium History Important Question) 

Write your Comment