விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. அமைப்பு மரபணுக்கள், நெறிப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் இயக்கி மரபணுக்களை வேறுபடுத்துக.

  2. தாழ்நிலை ‘லாக் ஓபரான்’ வெளிப்பாடு எல்லா நேரங்களிலும் நடைபெறுகிறது. இக் கூற்றை நியாயப்படுத்துக.

  3. மனித மரபணுத் திட்டம் ஏன் மகாதிட்டம் என அழைக்கப்படுகிறது.

  4. வாட்சன் மற்றும் கிரிக் ஆகியோர் டி.என்.ஏ அமைப்பைப் பரிசோதனை செய்தன் மூலம் டி.என்.ஏ இரட்டிப்பாதல், குறியீடு திறன் மற்றும் திடீர் மாற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும் முறை குறித்து என்ன முடிவுகளுக்கு வந்தனர்?

  5. கடத்து ஆர்.என்.ஏ, ‘இணைப்பு மூலக்கூறு’ என ஏன் அழைக்கப்படுகிறது?

  6. ஆர்.என்.ஏ மற்றும் டி.என்.ஏ ஆகியவற்றுக்கிடையே உள்ள அமைப்பு சார்ந்த வேறுபாடுகள் மூன்றினைக் குறிப்பிடுக.

  7. கீழ்க்கண்ட குறியீடுகளை இனங்கண்டறியும் எதிர்குறியீடுகளை எழுதுக.
    AAU, CGA, UAU மற்றும் GCA

  8. ஊஞ்சலாட்டக் கோட்பாடு யாது?

  9. மனித மரபணு முக்கிய இலக்குகள் யாவை?

  10. ரெட்ரோ வைரஸ் ஏன் மூலக்கூறு உயிரியலில் மையக் கருத்தைப் பின்பற்றுவதில்லை? 

*****************************************

Reviews & Comments about 12th விலங்கியல் - மூலக்கூறு மரபியல் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Zoology - Molecular Genetics Three Marks Questions )

Write your Comment