முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 99

    பகுதி I

    33 x 3 = 99
  1. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  2. டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:

    விவரம் 1.4.2018
    ரூ.
    31.3.2019
    ரூ.
    ரொக்கம் 43,000 29,000
    சரக்கிருப்பு 1,20,000 1,30,000
    பற்பல கடனாளிகள் 84,000 1,10,000
    பற்பல கடனீந்தோர் 1,05,000 1,02,000
    கடன் 25,000 20,000
    வணிக வளாகம் 2,50,000 2,50,000
    அறைகலன் 33,000 45,000

    அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ரூ. 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ. 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.

  3. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.

    விவரம் ரூ.
    31.3.2018 அன்று இறுதி முதல் 80,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000
    அவ்வாண்டில் எடுப்புகள் 15,000
    01.4.2017 அன்று தொடக்க முதல் ?
    31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000
  4. ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

    விவரம் 1.1.2018
    ரூ.
    31.12.2018
    ரூ.
    கைரொக்கம் 80,000 90,000
    சரக்கிருப்பு 1,80,000 1,40,000
    கடனாளிகள் 90,000 2,00,000
    பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000
    வங்கிக் கடன் 60,000 60,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000
    பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000

    அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.

  5. முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?

  6. கீழ்க்காணும் திருச்சி மனமகிழ் மன்றத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கினைத் தயாரிக்கவும்

    பெறுதல்கள்  ரூ செலுத்தல்கள் ரூ
    தொடக்க இருப்பு   அறைகலன் வாங்கியது 10,000
    கைரொக்கம் 11,000 வாடகை  2,800
    பங்காதாயம் பெற்றது 27,600 செயலர் மதிப்பூதியம் 15,000
    பழைய செய்தித்தாள் விற்றது 3,000 தபால் செலவுகள்  1,700
    உறுப்பினர் சந்தா 31,000 பொதுச் செலவுகள் 4,350
    பாதுகாப்பு பெட்டக வாடகை 8,000 அச்சு மற்றும் எழுதுபொருள்கள்  45,000
    முதலீடுகள் மீதான வட்டி 1,250 தணிக்கைக் கட்டணம் 5,000
    அறைகலன் விற்றது 5,000 இறுதி இருப்பு  
    (ஏட்டு மதிப்பு ரூ4,400)   கைரொக்கம்  3,000
      86,850   86,850
  7. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்

  8. பின்வரும் விவரங்கள் தூத்துக்குடி இளம் முன்னோடிகள் சங்கத்தின் இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டவும்.
    சங்கத்தில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.25 ஆண்டுச் சந்தாவாக செலுத்துகின்றனர். ஆண்டிறுதியில் 10 உறுப்பினர்கள் சந்தா செலுத்தாமல் இருந்தனர். ஆனால் நான்கு உறுப்பினர்கள் அடுத்த ஆண்டிற்கான சந்தா தொகையை முன்கூட்டிச் செலுத்தி இருந்தனர்

  9. தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல்கணக்குகள்:   பல்வகைச் சொத்துகள் 80,000
    பிருந்தா 30,000    
    பிரவீனா 40,000    
    இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000    
      80,000   80,000

     2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.

  10. அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12 % கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    மார்ச் 1 6,000
    ஜுன் 1 4,000
    செப்டம்பர் 5,000
    டிசம்பர் 1 2,000

    பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  11. நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

  12. சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும்.

    2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
    முதல் கணக்குகள்:     நிலைச் சொத்துகள் 70,000
    சுபா 40,000   நடப்புச் சொத்துகள் 50,000
    சுதா 60,000 1,00,000    
    நடப்புப் பொறுப்புகள்   20,000    
        1,20,000   1,20,000

     அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.8,000 மற்றும் ரூ.10,000; அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.30,000.

  13. சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:

    நாள் ரூ.
    பிப்ரவரி 1 2,000
    மே 1 10,000
    ஜுலை 1 4,000
    அக்டோபர் 1 6,000

     பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  14. ஆனந்த் மற்றும் நாராயணன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.50,000 மற்றும் ரூ.30,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.
    (ஆ) ஆனந்த் மற்றும் நாராயணனுக்கு விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.1,000 மற்றும் ரூ.800.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.35,000.
    கூட்டாளிகளுடைய முதல், மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

  15. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (அ) ஈட்டிய இலாபங்கள் : 2016: ரூ.30,000; 2017: ரூ.29,000 மற்றும் 2018: ரூ.32,000.
    (ஆ) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.3,000 சேர்ந்துள்ளது.
    (இ) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.2,000 குறைக்கப்பட்டது.
    (ஈ) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.5,600 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  16. பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
    (அ) பயன்படுத்தப்பட்ட முதல் : ரூ.1,20,000
    (ஆ) சாதாரண இலாப விகிதம் : 20%
    (இ) 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் :
    2014: ரூ.30,000; 2015: ரூ.32,000; 2016: ரூ.35,000; 2017: ரூ.37,000 மற்றும் 2018: ரூ.40,000
    (ஈ) கூட்டாளிகளுக்கான உழைப்பூதியம் ஆண்டுக்கு ரூ.2,800.

  17. கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:
    (i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ.25,000; 2017: ரூ.23,000 மற்றும் 2018: ரூ.26,000.
    (ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ.2,500 சேர்ந்துள்ளது.
    (iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ.3,500 குறைக்கப்பட்டது.
    (iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.250 என மதிப்பிடப்பட்டது.
    3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

  18. ஸ்ரீராம் மற்றும் ராஜ் எனும் கூட்டாளிகள் முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 1.4.2017 நெல்சன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    (i) சரக்கிருப்பு மதிப்பை ரூ.5,000 உயர்த்த வேண்டும்
    (ii) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள முதலீடுகள் ரூ.7,000 தற்போது பதிவு செய்தல் வேண்டும்.
    (iii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ.10,000 குறைக்க வேண்டும்
    (iv) கொடுபடாமலுள்ள கூலி ரூ.9,500 க்கு வகை செய்யவேண்டும்.
    குறிப்பேடு பதிவுகள் தந்து மறுமதிப்பீடு கணக்கு தயாரிக்கவும்.

  19. சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
    (i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
    (ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது

  20. ஹரி, மாதவன் மற்றும் கேசவன் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
    (அ) வளாகத்தின் மதிப்பு ரூ.60,000 அதிகரிக்கப்பட்டது
    (ஆ) சரக்கிருப்பு மீது ரூ.5,000, அறைகலன் மீது ரூ.2,000, இயந்திரம் மீது ரூ.2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
    (இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ.500 உருவாக்கப்பட வேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும்.

  21. வருண் மற்றும் பாரத் இருவரும் கூட்டாளிகள். அவர்களின் இலாப நட்டம் விகிதம் 5:4 ஆகும். அவர்கள் தாமு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். தாமு செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.15,000 என மதிப்பிடப்பட்டது. அதில், அவர் ரூ.10,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.

  22. பிரபு, ரகு மற்றும் சிவா என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 ஏப்ரல், 1 ஆம் நாளன்று பிரபு கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
    (i) கட்டடத்தின் மதிப்பு ரூ.12,000 உயர்த்துவது
    (ii) அறைகலன் மதிப்பை ரூ. 8,500 குறைப்பது
    (iii) கொடுபடா சம்பளத்திற்காக ரூ. 6,500 ஒதுக்கு உருவாக்குவது
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும்.

  23. இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
    (ஆ) சேரவேண்டியத் தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை
    (இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது

  24. வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?

  25. வினோத், கார்த்தி மற்றும் பிரணவ் என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று பிரணவ் என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
    (i) நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பை ரூ.18,000 அதிகரிக்க வேண்டும்.
    (ii) இயந்திரத்தின் மதிப்பை ரூ.15,000 குறைக்க வேண்டும்.
    (iii) கொடுபட வேண்டியச் செலவுகளுக்கு ரூ.8,000 ஒதுக்கு உருவாக்கவேண்டும்.
    குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.

  26. கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச்   செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
    (i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
    (ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
    (iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது

  27. அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக்ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்

  28. முன்னுரிமைப் பங்குகளுக்கும், நேர்மைப் பங்குகளுக்குமுள்ள வேறுபாடுகளை கூறவும்

  29. பின்வரும் விவரங்களைக் கொண்டு சிவா வரையறு நிறுமத்தின் மார்ச் 31, 2016 மற்றும் மார்ச் 31, 2017 க்கான பொது அளவு வருவாய் அறிக்கையினை தயார் செய்யவும்.

    விவரம் 2015-16 2016-17
    ரூ. ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 2,00,000 3,00,000
    இதர வருமானம் 25,000 75,000
    செலவுகள் 2,50,000 1,50,000
    வருமான வரி % 40 40
  30. ரொக்க ஓட்ட பகுப்பாய்வு குறித்து சிறு குறிப்பு வரையுவும்

  31. சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.

    விவரம் ரூ.
    விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000
    அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000
    அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000
    அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000
    உள்தூக்குக்கூலி 10,000
  32. டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
    (i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
    (ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
    (iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
    (iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.

    விவரம் 2018, மார்ச் 31
    ரூ.
    2019, மார்ச் 31
    ரூ.
    சரக்கிருப்பு 1,40,000 1,00,000
    கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000
    கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000
    நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000

    கூடுதல் தகவல்கள்:
    (i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
    (ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
    (iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
    விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும்.

  33. Tally.ERP 9-ல் பொதுவாக பயன்படுத்தப்படும் சான்றாவணங்களின் வகைகளை குறிப்பிடவும்.

*****************************************

Reviews & Comments about முக்கிய 3 மதிப்பெண் புத்தக வினாக்கள் (புதிய பாடத்திட்டம்) 2020

Write your Comment