கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது முதல் மீது வட்டி______.

    (a)

    வழங்கப்படுவதில்லை

    (b)

    வங்கி வீதத்தில் வழங்கப்படும்

    (c)

    ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

    (d)

    ஆண்டுக்கு 6% வழங்கப்படும்

  2. ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக______.

    (a)

    5.5 மாதங்கள்

    (b)

    6 மாதங்கள்

    (c)

    12 மாதங்கள்

    (d)

    6.5 மாதங்கள்

  3. பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை?

    (a)

    எடுப்புகள் மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (b)

    முதல் மீது வட்டி – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

    (c)

    கடன்மீது வட்டி – முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்

    (d)

    இலாபப் பகிர்வு – முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்

  4. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

    (a)

    கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்

    (b)

    கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்.

    (c)

    கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது.

    (d)

    கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

  5. எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத்தொகையை கண்டறியவும்.

    (a)

    ரூ.50

    (b)

    ரூ.150

    (c)

    ரூ.550

    (d)

    ரூ.500

  6. 5 x 2 = 10
  7. A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
    (i) A அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
    (ii) B ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B-யிடம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீது வட்டி அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iii) C யிடமிருந்து நிறுவனத்திற்கு பெறப்பட்ட கடன் ரூ.10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% வேண்டுமென்று கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (iv) D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார். B மற்றும் C அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
    (v) A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக்கொள்ளவில்லை.

  8. மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல்: மன்னன் ரூ.80,000, இரமேஷ் ரூ.60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும் மற்றும் அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும.

  9. கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.

  10. நிலைமுதல் முறை என்றால் என்ன?

  11. கூட்டாளி ஒருவருக்கு முதல் மீது வட்டி அனுமதிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்பேட்டுப் பதிவு என்ன?

  12. 5 x 3 = 15
  13. தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.

    2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
    பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ.
    முதல்கணக்குகள்:   பல்வகைச் சொத்துகள் 80,000
    பிருந்தா 30,000    
    பிரவீனா 40,000    
    இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000    
      80,000   80,000

     2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.

  14. 2018 ஆம் ஆண்டில் இராஜன் என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.30,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என விதிக்கப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்றைய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.

  15. கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.

  16. நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.

  17. கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறு குறிப்பு தரவும்.

  18. 4 x 5 = 20
  19. ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 5% விதிக்கப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
    (i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
    (ii) ஒவ்வொரு மாத நடுவில் எடுத்திருந்தால்
    (iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்

  20. அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.10,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்க வேண்டும்.
    (ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.200 மற்றும் ரூ.300 ஆகும்.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.18,000.
    கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

  21. ரிச்சர்ட் மற்றும் ரிஸ்வான், 2018, ஜனவரி 1 அன்று முறையே ரூ.3,00,000 மற்றும் ரூ.2,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர்.
    கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி,
    (அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்.
    (ஆ) ரிஸ்வான் ஆண்டுக்கு ரூ.50,000 ஊதியம் பெற வேண்டும்.
    (இ) முதல் மீது வட்டி மற்றும் ரிஸ்வானின் ஊதியத்தை கழித்த பின், கழிவுக்குப் பின் உள்ள இலாபத்தில் 10% ரிச்சர்ட் கழிவாகப் பெற வேண்டும்.
    (ஈ) இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 3:2.
    அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,00,000.
    நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - 31 இல் கணக்கு முடிக்கிறது எனக் கொண்டு இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும்.

  22. அந்தோணி மற்றும் ரஞ்சித் 2018, ஏப்ரல் 1 அன்று முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.3,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர். கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி அந்தோணி ஆண்டுக்கு ரூ.90,000 ஊதியம் பெற வேண்டும். முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% மற்றும் அந்தோனியின் ஊதியம் மற்றும் கழிவினை கழித்ததற்கு பின் உள்ள இலாபத்தில் 25% ரஞ்சித் கழிவாகப் பெற வேண்டும். இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 1:1. அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,65,000.
    இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும். நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ல் கணக்கு முடிக்கிறது.

*****************************************

Reviews & Comments about கூட்டாண்மை நிறுவனக் கணக்குகள் - அடிப்படைகள் மாதிரி வினாத்தாள்

Write your Comment