7th Measurements Completed Solutions

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80
    5 x 1 = 5
  1. சரிவகத்தின் பரப்பளவு ___________ ச. அலகுகள்.

    (a)

    h(a + b)

    (b)

    \(\frac{1}{2}\) h(a + b)

    (c)

    h(a - b)

    (d)

    \(\frac{1}{2}\) h(a - b)

  2. இரு சமபக்க சரிவகம் எனில் சரிவகத்தின்

    (a)

    இணையற்ற பக்கங்கள் சமம்

    (b)

    இணையான பக்கங்கள் சமம்

    (c)

    உயரம் = அடிப்பக்கம்

    (d)

    இணைப்பக்கங்கள் = இணையற்ற பக்கங்கள்

  3. வட்ட மையத்தையும், வட்டத்தின் மேலுள்ள ஏதேனும் ஒரு புள்ளியையும் சேர்க்கும் கோட்டுத் துண்டின் பெயர்.

    (a)

    விட்டம்

    (b)

    ஆரம்

    (c)

    நாண்

    (d)

    ஒன்றுமில்லை

  4. வட்டத்தின் மேலுள்ள ஏதேனும் இரு புள்ளிகளைச் சேர்க்கும் கோட்டுத்துண்டின் பெயர்

    (a)

    விட்டம்

    (b)

    ஆரம்

    (c)

    நாண்

    (d)

    ஒன்றுமில்லை

  5. வட்டத்தின் மையம் வழியாகச் செல்லும் நாணின் பெயர்

    (a)

    விட்டம்

    (b)

    ஆரம்

    (c)

    நாண்

    (d)

    ஒன்றுமில்லை

  6. 15 x 2 = 30
  7. ஒரு சரிவகத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் 12 செ.மீ, 8 செ.மீ அவற்றிற்கிடையே உள்ள செங்குத்துத் தொலைவு 10 செ.மீ. சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  8. ஒரு சரிவகத்தின் பரப்பளவு 102 ச.செ.மீ , செங்குத்துத் தொலைவு 12 செ.மீ. சரிவகத்தின் இணைப்பக்கங்களில் ஒரு பக்கத்தின் நீளம் 8 செ.மீ எனில் மற்றொரு பக்கத்தின் நீளமென்ன?

  9. 21 செ.மீ. விட்டமாகக் கொண்ட வட்டத்தின் சுற்றளவு காண்க.

  10. 88 செ.மீ நீளமுள்ள ஒரு கம்பி ஒரு வட்டமாக வளைக்கப்படுகிறது. வட்டத்தின் ஆரம் காண்க.

  11. 8800 செ.மீ. தொலைவு கடக்க உந்து வண்டியின் சக்கரம் 50 சுற்றுகள் சுற்றுகிறது. அச்சக்கரத்தின் ஆரம் என்ன?

  12. மாட்டுவண்டிச் சக்கரத்தின் ஆரம் 70 செமீ. அது 132 மீ தொலைவு கடந்தால் சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?

  13. வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் 56 மீ. அத்தோட்டத்திற்கு வேலிபோட மீட்டருக்கு ரூ 10 வீதம் ஆகும் செலவு எவ்வளவு?

  14. 14 செ.மீ விட்டமாகக் கொண்ட வட்டத்தின் பரப்பளவு காண்க.

  15. வட்ட வடிவப் பூங்காவின் சுற்றளவு 176 மீ. பூங்காவின் பரப்பளவு காண்க.

  16. வட்டவடிவ மனையை ஒருவர் பத்து முறை சுற்றுகிறார். அவர் கடந்த மொத்தத் தொலைவு 352மீ எனக் கணக்கிடப்படுகிறது. மனையின் பரப்பளவு காண்க.

  17. வெளிச் செவ்வகத்தின் பரப்பளவு 360 ச.மீ, உள் செவ்வகத்தின் பரப்பளவு 280 ச.மீ. சீரான ghij இவ்விரு செவ்வகங்களுக்கும் இடையில் உள்ளது. பாதையின் பரப்பளவு என்ன?

  18. ஒரு பள்ளியில் உள்ள கலைக் கூடத்தின் நீளம் 45 மீ, அகலம் 27 மீ. கலைக் கூடத்தைச்சுற்றி வெளிப்புறமாக 3 மீ. அகலமுள்ள தாழ்வாரம் உள்ளது. தாழ்வாரத்தின் பரப்பளவு என்ன? அத்தாழ்வாரத்தில் ஓடு பதிக்க 1 ச. மீட்டருக்கு ரூ.100 வீதம் ஆகும் செலவு காண்க.

  19. 8 மீ நீளமும், 5 மீ அகலமும் கொண்ட ஒரு அறையில் உட்புறமாக சீரான சிவப்பு வண்ணப் பாதை 0.5 மீ அகலத்தில் பூசப்படுகிறது. சிவப்பு வண்ணப் பாதையின் பரப்பளவு காண்க.

  20. ஒரு தரை விரிப்பின் அளவுகள் 3 மீ. X 2 மீ. தரை விரிப்பின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் 0.25 மீ அகலம் கொண்ட சீரான பட்டை ஒன்று வெட்டியெடுக்கப்படுகிறது. மீதமுள்ள தரைவிரிப்பின் பரப்பளவு காண்க. மேலும், வெட்டியெடுக்கப்பட்ட பட்டையின் பரப்பளவு என்ன?

  21. 50 மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 2 மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையைச் சமன்செய்ய ஒரு சதுர மீட்டருக்கு ரூ.5 வீதம் ஆகும் செலவைக் காண்க ( \(\pi = 3.14\) எனக் கொள்க ).

  22. 15 x 3 = 45
  23. ஒரு சரிவகத்தின் பரப்பளவு 88 செ.மீ2, செங்குத்து தொலைவு (உயரம்) 8 செ.மீ. சரிவகத்தின் இணைப்பக்கங்களில் ஒரு பக்கத்தின் நீளம் 10 செ.மீ எனில் மற்றொரு பக்கத்தின் நீளத்தைக் காண்க.

  24. ஒரு தோட்டமானது சரிவகம் வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் 40 மீ, 30 மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 25 மீ. தோட்டத்தின் பரப்பளவு காண்க.

  25. கீழ்க்கண்ட விட்ட அளவுகள் கொண்ட வட்டங்களின் சுற்றளவு காண்க:
    84 செ.மீ

  26. கீழ்க்கண்ட ஆர அளவுகள் கொண்ட வட்டங்களின் சுற்றளவு காண்க.
    12.6 செ.மீ

  27. கீழ்க்கண்ட சுற்றளவுகளைக் கொண்ட வட்டங்களின் ஆரங்களைக் காண்க.
    110 செ.மீ

  28. வட்ட வடிவப் பூங்காவின் விட்டம் 98 மீ. பூங்காவைச் சுற்றி வேலி அமைக்க மீட்டருக்கு ரூ4 வீதம் ஆகும் செலவைக் காண்க.

  29. ஒரு மிதிவண்டிச் சக்கரத்தின் ஆரம் 35 செமீ. அது 81.4 மீ தொலைவு கடக்க சக்கரம் எத்தனை முறை சுற்றியிருக்கும்?

  30. கீழ்க்காணும் விட்ட அளவுகள் கொண்ட வட்டங்களின் பரப்பளவுகளைக் காண்க.
    10.5 செ.மீ

  31. புல்வெளியில் உள்ள ஒரு கட்டையில் ஆடு ஒன்று 7 மீ. நீளமுள்ள கயிறால் கட்டப்படுகிறது. அது மேயும் அதிகபட்ச பகுதியின் பரப்பளவைக் காண்க.

  32. ஒரு சக்கரம் 2200 மீ. தொலைவைக் கடக்க 100 சுற்றுகள் சுற்றுகிறது. சக்கரத்தின் பரப்பளவைக் காண்க.

  33. 50 செ.மீ நீளமும் 30 செ.மீ அகலமும் கொண்ட ஒரு வரைபடத்தாளில் படம் ஒன்று வரையப்படுகிறது. அதன் அனைத்துப் பக்கங்களிலும் 2.5 செ.மீ அகலம் ஓரத்தில் விடப்படுகிறது. ஓரத்தில் விடப்பட்ட பகுதியின் பரப்பளவு காண்க.

  34. நீளம் 50 செ.மீ., அகலம் 32 செ.மீ. கொண்ட ஓர் அட்டையில் 7 செ.மீ. ஆரம் கொண்ட வட்டம் எத்தனை வெட்டலாம்?

  35. 30 மீ ஆரம் கொண்ட வட்ட வயல்வெளியின் எல்லையிலிருந்து உட்புறமாக 3 மீ அகலத்தில் வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. வட்டப் பாதையின் பரப்பளவைக் காண்க.( \(\pi = 3.14\) எனக் கொள்க).

  36. பொது மைய வட்டங்களின் ஆரங்கள் 56 செ.மீ., 49 செ.மீ. எனில், வட்டப் பாதையின் பரப்பு யாது?

  37. ஒரு வட்டப் பாதையின் பரப்பினைச் சமன் செய்ய ரூ.6 சதுர மீட்டர் வீதம் ரூ.12,012 ஆகிறது. வட்டப் பாதையின் பரப்பளவு யாது? மேலும், உள்வட்டத்தின் ஆரம் 28 மீ. எனில் வெளி வட்டத்தின் ஆரத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு கணிதம் அளவைகள் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Maths Measurement Chapters Important Questions and Answers )

Write your Comment