8-Std Maths Life Mathematics important Questions

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100
    10 x 1 = 10
  1. ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில் ஆரஞ்சுப் பழங்களின் சதவீதம் ..........

    (a)

    5%

    (b)

    25%

    (c)

    10%

    (d)

    20%

  2. \({2\over 25}=...........\)%

    (a)

    25

    (b)

    4

    (c)

    8

    (d)

    15

  3. ஒரு பாட்டிலில் உள்ள மொத்த பிஸ்கட்டுகளின் எண்ணிக்கையில் 15% பிஸ்கட்டுகள் 30 எனில், பிஸ்கட்டுகளின் மொத்த எண்ணிக்கை ..........

    (a)

    100

    (b)

    200

    (c)

    300

    (d)

    150

  4. சென்ற ஆண்டு ஒரு ஸ்கூட்டரின் விலை ரூ.34,000.இந்த ஆண்டு இதன் விலை 25% கூடுதலாகின்றது. அக்கூடுதல் தொகை ..........

    (a)

    Rs.6,500

    (b)

    Rs.8,500

    (c)

    Rs.8,000

    (d)

    Rs.7,000

  5. மாத வருமானம் ` 20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ` 3,000 ஐ சமிப்பு செய்கின்றார் எனில், அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் .........

    (a)

    15%

    (b)

    5%

    (c)

    10%

    (d)

    20%

  6. தள்ளுபடி என்பது .......... யின் மீது கணக்கிடப்படுவதாகும்.

    (a)

    குறித்த விலை

    (b)

    அடக்க விலை

    (c)

    விற்பனை விலை

    (d)

    வட்டி

  7. ஒரு பொருளின் குறித்த விலை ரூ 140. விற்பனை விலை ரூ 105 எனில் தள்ளுபடி ------------

    (a)

    ரூ 245

    (b)

    ரூ 25

    (c)

    ரூ 30

    (d)

    ரூ 35

  8. ----------- = குறித்த விலை - தள்ளுபடி

    (a)

    அடக்க விலை

    (b)

    விற்பனை விலை

    (c)

    பட்டியல் விலை 

    (d)

    சந்தை விலை 

  9. ஒரு பொருளின் மதிப்புடன் சேர்க்கும் வரி ------------

    (a)

    விற்பனை வரி 

    (b)

    மதிப்புக்கூட்டு வரி 

    (c)

    கலால் வரி 

    (d)

    பணி வரி 

  10. ஒரு பொருளின்  விற்ற விலை ரூ. 240, தள்ளுபடி ரூ. 28 எனில், குறித்த விலை --------------

    (a)

    ரூ. 212

    (b)

    ரூ. 268

    (c)

    ரூ. 228

    (d)

    ரூ. 258

  11. 15 x 2 = 30
  12. ஒரு தொகையின் 12ரூ என்பது ரூ.1080 எனில் அத்தொகையைக் காண்க

  13. 25 மாணவர்களில் 72ரூ பேர் கணிதப்பாடத்தில் திறமையானவர்கள். கணிதப் பாடத்தில் திறமையற்றோர் எத்தனை பேர்?

  14. ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம் காணவும்

  15. A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து  முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச்செய்து Rs. 1500ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?

  16. ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். B அதே வேலையை 20 நாட்களில் செய்து முடிப்பார். A, B இருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்கள் செய்தனர். பின் A சென்று விட்டார். மீதி வேலையை B எத்தனை நாட்களில் முடிப்பார்?

  17. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும்,B என்பவர் அதே  வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும்  சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  18. விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதனக் கருவியின் மொத்த விலை ` ரூ 14,500. குளிர்சாதனக் கருவியின் விலை ரூ 13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காணவும்.

  19. ஹமீது ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.15,200 க்கு வாங்குகின்றார்.இதனை 20% நட்டத்திற்கு விற்றார் எனில், அத்தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை என்ன?

  20. ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும்பொழுது 15ரூ நட்டம் ஆகிறது எனில், அதன் அடக்க விலை என்ன?

  21. 11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.

  22. இராசு ரூ.36,000க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி, அதன் தோற்றப் பொலிவு நன்கு அமையவும் மேலும் நன்முறையில் இயங்கவும் சில இதர பாகங்களைப் பொருத்தினார்.பின்பு அம்மோட்டார் சைக்கிளை ` ரூ 44,000க்கு 10% இலாபத்தில் விற்கின்றார் எனில் இதர பாகங்கள் வாங்க எவ்வளவு செலவு செய்தார்

  23. அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ. 1000க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காணவும்.

  24. ரூ. 1600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1852.50 ஆகும்?

  25. தருண் என்பவர் இரண்டு லட்ச ரூபாயை 5 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியில் நிரந்தர  வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அவ்வங்கி ஆண்டொன்றுக்கு 8Ð தனி வட்டி தருகின்றது எனில் 5 ஆண்டுகள் முடிவில் அவருக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை
    எவ்வளவு?

  26. ஒரு கணினியின் விலை Rs.20,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10ரூ வட்டியுடன் 36 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தொகை எவ்வளவு?

  27. 20 x 3 = 60
  28. ஓர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண்அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில்செய்து முடிப்பர்?

  29. A,B,C என்ற மூவர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பார்கள். A,B இருவரும் சேர்ந்து அவ்வேலையை 3 நாட்களுக்கு செய்தனர். பின்னர் B விலகுகின்றார், C சேருகின்றார் எனில், A,C ஆகிய இருவரும் சேர்ந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்?

  30. ஒரு குழாய் காலியாக உள்ள தொட்டியை 15 நிமிடங்களில் நிரப்பும். மற்றொரு குழாய் நீர் நிரம்பியுள்ள அத்தொட்டியை 20 நிமிடங்களில் காலி செய்யும். ஆரம்பத்தில் தொட்டி காலியாக இருந்து, இரு  குழாய்களும் ஒரே நேரத்தில் திறந்து விடப்பட்டால், அத்தொட்டி எவ்வளவு நிமிடங்களில் நிரம்பும்?

  31. மீனு தன்னுடைய சம்பளத்தில் 5% ரூ.2000 ஐ, பொழுதுபோக்கிற்குச் செலவிட்டால் அவருடைய சம்பளம் என்ன?

  32. ஒரு பள்ளியின் கிரிக்கெட் குழு மற்றொரு பள்ளியின் கிரிக்கெட் குழுவுடன் ஆடிய ஆட்டங்களின் எண்ணிக்கை 20. இவற்றில் முதற் பள்ளி 25ரூ ஆட்டங்களை வென்றது எனில் மொத்தம் வென்ற ஆட்டங்களின் எண்ணிக்கை யாது?

  33. கணிணிக் குழுமத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 1500 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 12% நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர் எனில், எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்? மேலும் எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்படவில்லை எனக் காண்க

  34. ஒருவர் தம் வருமானத்தில் 40ரூ உணவுக்காகவும், 15% உடைக்காகவும், 20% வீட்டு வாடகைக்காகவும் செலவிடுகின்றார். மீதியைச் சேமிக்கின்றார். அவர் வருமானம் ரூ.34,400 எனில், அவர் எவ்வளவு சேமிக்கின்றார்?

  35. ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும், கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். எப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்? எவ்வளவு அதிகம் பெற்றார்?

  36. 80 தானியங்கி இயந்திரங்கள் ஒரே மாதிரியான 4800 கைப்பேசிகளை 6 மணியில் தயாரிக்கின்றன. ஒரு தானியங்கி இயந்திரம், ஒரு மணி நேரத்தில் எத்தனை கைப்பேசிகளை தயாரிக்கும்? 25 தானியங்கி இயந்திரங்கள் 5 மணி நேரத்தில் எத்தனை கைப்பேசிகளை தயாரிக்கும்?

  37. 2400 ச.மீ நிலத்தை 12 வேலையாட்கள் 10 நாட்களில் உழுது முடிப்பர். 5400 ச.மீ நிலத்தை 18 நாட்களில் உழுவதற்கு எத்தனை வேலையாட்கள் தேவை?

  38. ஒரு புத்தகத்தின் மீது அதன் விலை ரூ. 450 குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு புத்தகக் கண்காட்சியில் கடைக்காரர் அப்புத்தகத்தின் மீது 20% தள்ளுபடி கொடுக்கின்றார். அப்புத்தகத்தின் விற்பனை விலை என்ன?

  39. ஒரு குளிர்சாதனப் பெட்டியின் மீது 9% விற்பனை வரி வீதம் விற்பனை வரி  ரூ. 1170 எனில் அதன் அடக்க விலை என்ன?

  40. ரூ. 3500 என்ற விலை குறிப்பிடப்பட்ட ஒரு குளிரூட்டியை ரூ. 2800 க்கு வாங்கினார். கொடுக்கப்பட்ட தள்ளுபடி சதவீதம் காணவும்.

  41. சிவா ஆண்டொன்றுக்கு 5% வட்டி கொடுக்கும் ஒரு வங்கியில் ரூ.75000ஐ 3 ஆண்டுகளுக்கு நிரந்தர வைப்புத்திட்டத்தில்  முதலீடு செய்தார் எனில், அவருக்குக் கிடைக்கும் முதிர்வுத்தொகை என்ன?

  42. ஒரு குளிர்சாதனப் பெட்டியின் விலை Rs.16,800. இரஞ்சித் இதை 0% வட்டித் திட்டத்தில் வாங்க விரும்புகின்றார். 3 மாத முன்  தவணைகளையும் தருகின்றார். நிறுவனம் 3% நடைமுறைச் செலவு எடுத்துக் கொள்கின்றது எனில், 24 மாதங்களுக்கு அவர் செலுத்த வேண்டிய மாதத் தவணையைக் காணவும். அவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகையையும் காணவும்.

  43. வியாபாரி ஒருவர் ரூ.1320க்கு ஒரு மேசையை 10% இலாபத்தில் விற்றார் எனில் அதன் அடக்க விலையைக் காணவும்

  44. அன்பரசன் ஒரு வீட்டை ரூ.17,75,000 க்கு வாங்கினார். பின்பு உட்புறங்களை ரூ.1,25,000 க்கு அழகுபடுத்தி அதை 20ரூ இலாபத்திற்கு விற்றார் எனில் விற்பனை விலையைக் காண்க.

  45. ஒருவ ர் தன்னிடமுள்ள ஒரு வகை நாயினை 15% இலாப த்தில் ரூ.3,605க்கும் , வேறு ஒரு வகை நாயினை 9% நட்டத்தில் ரூ.3,605 க்கும் விற்றார் எனில், மொத்த இலாபம் அல்லது மொத்த நட்டம் காண்க.

  46. அரையாண்டிற்கு ஒரு முறை வட்டி கூட்டும் முறையில் திராவிட் ரூ  8192 ஐ, 18 மாதங்களுக்கு, 12½% ஆண்டு வட்டி வீதம் கொடுப்பதில் முதலீடு செய்தார். அவருக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை  எவ்வளவு?

  47. ஒரு ஆய்வகத்தில், ஓர் ஆராய்ச்சியில் ஒரு வகை பாக்டீரியாக்களின் எண்ணிக்கை ஒரு மணிக்கு 2.5% வீதம் அதிகரிக்கின்றது. தொடக்கத்தில் 5,06,000 பாக்டீரியாக்கள் இருந்தால், 2 மணி நேரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கை என்ன?

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு கணிதம் வாழ்வியல் கணிதம் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Maths Life Mathematics Chapter Important Questions and Asnwers )

Write your Comment