This post taken from the old syllabus click here to see new 2019 updated syllabus posts

Term 3 Geometry Study Material

8th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. முக்கோணத்தின் குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி________________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    வட்டம் மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  2. முக்கோணத்தின் கோண இரு சம வெட்டிகள் சந்திக்கும் புள்ளி___________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    வட்டம் மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  3. முக்கோணத்தின் மையக் குத்துக் கோடுகள் சந்திக்கும் புள்ளி_________

    (a)

    உள் வட்ட மையம்

    (b)

    சுற்று வட்ட மையம்

    (c)

    செங்கோட்டு மையம்

    (d)

    நடுக்கோட்டு மையம்

  4. _________________என்பது வட்ட மையத்திற்கும் வட்டத்தின் மேல் உள்ள புள்ளிக்குமுள்ள தூரம் ஆகும்.

    (a)

    பகுதி

    (b)

    நீளம் 

    (c)

    விட்டம் 

    (d)

    ஆரம்

  5. விட்டத்திற்கும் ஆரத்திற்குமுள்ள தொடர்பு____________

    (a)

    ஆரம் = 2 × விட்டம் 

    (b)

    ஆரம் = விட்டம் + 2

    (c)

    விட்டம் = ஆரம் + 2

    (d)

    விட்டம் = 2 × ஆரம்

  6. 15 x 3 = 45
  7. இருசம பக்க முக்கோணம் ABC இல் AB = AC மற்றும் \(\angle\)B=65° எனில் குறைந்த நீளமுடைய பக்கம் எது?

  8. செங்கோண முக்கோணம் PQR இல், PQ = 10 செ.மீ. மற்றும் PR = 24 செ.மீ. எனில் QR இன் நீளம் காண்க? (\(\angle\)P = 90°)

  9. கீழே கொடுக்கப்பட்ட பக்க அளவுகள் செங்கோண முக்கோணத்தை அமைக்குமா? AB = 25 செ.மீ., BC = 24 செ.மீ., AC = 7செ.மீ.

  10. \(\Delta\) PQR இல் \(\angle\)P = 25° , \(\angle\)Q = 65° எனில் \(\Delta\)PQR செங்கோண முக்கோணம் ஆகுமா? மேலும் PQ = 4 செ.மீ., PR = 3 செ.மீ. எனில் QR இன் நீளம் காண்க.

  11. 15 மீ நீளமுள்ள ஒரு ஏணி சுவற்றில் 12 மீ உயரத்தில் உள்ள சன்னலைத் தொடுகிறது எனில் சுவற்றிற்கும் ஏணிக்கும் இடையே தரையில் உள்ள தொலைவைக் காண்க?

  12. 10 செ.மீ. நீளமுள்ள சமபக்க முக்கோணத்தின் குத்துக்கோட்டின் நீளம் என்ன?

  13. 12, 5, 13 என்ற எண்கள் பிதாகரஸின் மூன்றன் தொகுதியாக அமையுமா?

  14. ஒரு ஏணி 16 அடி உயரத்தில் உள்ள இரண்டாவது மாடி சன்னலின் கீழ்ப் பகுதியைத் தொடுமாறு உள்ளது. ஏணியின் அடிப்பாகம் தரையில் 12 அடி தொலைவில் உள்ளது. வண்ணம் பூசுபவர் வண்ணங்களைக் கலக்கும்போது பக்கத்து வீட்டுக்காரரின் நாய் ஏணியைத் தள்ளி விடுவதால் ஏணி மேலும் 2 அ டி தொலைவு நகர்கிறது எனில் ஏணி தொடும் உயரத்தைக் காண்க.

  15. வட்டத்தின் இரு விட்டங்களின் நீளங்களின் கூடுதல் 200 மி.மீ. எனில் அவ்வட்டத்தின் ஆரத்தினை செ.மீ. இல் காண்க.

  16. வரையறு: வட்டப் பகுதி, வட்டக் கோணப் பகுதி

  17. வரையறு: தொடுகோடு மற்றும் வெட்டுக்கோடு

  18. \(\Delta\) ABC இல் \(\angle\) B=90°, AB = 18 செ.மீ. மற்றும் BC = 24 செ.மீ. எனில் AC இன் நீளம் காண்க.

  19. சதுரத்தின் சுற்றளவு 40 செ.மீ எனில் அதன் மூலை விட்டங்களின் நீளங்களின் கூடுதல் என்ன?

  20. படத்தில் \(\Delta\)PQR இல், PT செங்கோடு. மேலும் PQ = 25 செ.மீ., PR = 17 செ.மீ. மற்றும் PT = 15 செ.மீ., QR = x செ.மீ. எனில் x இன் மதிப்பு காண்க.

  21. செவ்வக வடிவ வயலின் நீள அகலங்கள் முறையே 40மீ, 30மீ மூலைவிட்டத்தின் வழியே ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலையை அடைந்தால் மீதப்படுத்தப்படும் தூரம் எவ்வளவு?

*****************************************

Reviews & Comments about 8ஆம் வகுப்பு கணிதம் வடிவியல் பாட முக்கிய வினா விடை ( 8th Standard Maths Geometry Chapter Important Questions and Answers )

Write your Comment