Half Yearly Model Question

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

    பகுதி- 

    I.சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

    15 x 1 = 15
  1. J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில் J⋂K⋂L என்பது ______.

    (a)

    இருசமபக்க முக்கோணங்களின் கணம்

    (b)

    சமபக்க முக்கோணங்களின் கணம்

    (c)

    இருசமபக்க செங்கோண முக்கோணங்களின் கணம்

    (d)

    செங்கோண முக்கோணங்களின் கணம்

  2. கொடுக்கப்பட்ட வெண்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது

    (a)

    Z−(XUY)

    (b)

    (XUY)⋂Z

    (c)

    Z−(X⋂Y)

    (d)

    ZU(X⋂Y)

  3. ஒரு நகரில், 40% மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35% மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20% மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?

    (a)

    5

    (b)

    8

    (c)

    10

    (d)

    15

  4. பின்வருவனவற்றுள் எது விகிதமுறு எண் அல்ல?

    (a)

    \(\sqrt{8\over 18}\)

    (b)

    \({7\over 3}\)

    (c)

    \(\sqrt{0.01}\)

    (d)

    \(\sqrt{13}\)

  5. \(4\sqrt{7}\times 2\sqrt{3}=\) _____.

    (a)

    \(6\sqrt{10}\)

    (b)

    \(8\sqrt{21}\)

    (c)

    \(8\sqrt{10}\)

    (d)

    \(6\sqrt{21}\)

  6. அறிவியல் குறியீட்டு வடிவ எண்ணிற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு எது?

    (a)

    0.5 x105

    (b)

    0.1254

    (c)

    5.367 x 10–3

    (d)

    12.5 x 102

  7. p(a) = 0 எனில் (x-a) என்பது p(x) இன் ஒரு _______ 

    (a)

    வகுத்தி

    (b)

    ஈவு

    (c)

    மீதி

    (d)

    காரணி

  8. (a+b−c)2 = _______.

    (a)

    (a-b+c)2

    (b)

    (-a-b+c)2

    (c)

    (a+b+c)2

    (d)

    (a-b−c)2

  9. முப்படிப் பல்லுறுப்புக் கோவைக்கு அதிகபட்சம் _____ நேரிய காரணிகள் இருக்கலாம்.

    (a)

    1

    (b)

    2

    (c)

    3

    (d)

    4

  10. O வை மையமாகக் கொண்ட வட்டத்தில் சம நீளமுள்ள நாண்கள் PQ மற்றும் RS. மேலும் ㄥPOQ=700 எனில், ㄥORS=___________

    (a)

    600

    (b)

    700

    (c)

    550

    (d)

    800

  11. படத்தில் வட்டமையம் O மற்றும் விட்டம் AB ஆகியன, நாண் CD ஐப் புள்ளி E இல் இருசமக் கூறிடுகின்றன. மேலும், CE = ED = 8 செமீ மற்றும் EB = 4செமீ எனில், வட்டத்தின் ஆரம்______.

    (a)

    8செமீ

    (b)

    4செமீ

    (c)

    6செமீ

    (d)

    10செமீ

  12. AD ஐ விட்டமாகக் கொண்ட ஒரு வட்டத்தின் ஒரு நாண் AB. இங்கு, AD =30செமீ மற்றும் AB =24செமீ எனில், வட்ட மையத்திலிருந்து AB அமைந்துள்ள தூரம் ______.

    (a)

    10செமீ

    (b)

    9செமீ

    (c)

    8செமீ

    (d)

    6செமீ

  13. ஒழுங்கற்ற வடிவில் கிடைக்கும் தரவுகள் _________ 

    (a)

    வகைப்படுத்தப்பட்ட தரவுகள்

    (b)

    பிரிவு இடைவெளி

    (c)

    முகடு

    (d)

    செப்பனிடப்படாத தரவுகள்

  14. x, x + 2, x + 4, x + 6, x + 8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி _____.

    (a)

    9

    (b)

    11

    (c)

    13

    (d)

    15

  15. 5,9,x,17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு ____.

    (a)

    9

    (b)

    13

    (c)

    17

    (d)

    21

  16. பகுதி- 

    ஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :

    8 x 2 = 16
  17. \(A=\left\{ -\frac { 1 }{ 2 } ,0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2 \right\} \)\(B=\left\{ 0,\frac { 1 }{ 4 } ,\frac { 3 }{ 4 } ,2,\frac { 5 }{ 2 } \right\} \)மற்றும் \(C=\left\{ -\frac { 1 }{ 2 } ,\frac { 1 }{ 4 } ,1,2,\frac { 5 }{ 2 } \right\} \) எனில், A\(\cap \)(B\(\cap \)C) = (A\(\cap \)B)\(\cap \)C என்பதைச் சரிபார்க்க.

  18. \(A=\left\{ -11,\sqrt { 2 } ,\sqrt { 5 } ,7 \right\} \)\(B=\left\{ \sqrt { 3 } ,\sqrt { 5 } ,6,13 \right\} \) மற்றும் \(C=\left\{ \sqrt { 2 } ,\sqrt { 3 } ,\sqrt { 5 } ,9 \right\} \) ஆகியவற்றிற்குக் கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க.  \(A\cap (B\cap C)=\left( A\cap B \right) \cap C\)

  19. மதிப்பிடுக:\(({1\over3})^{-2}\)

  20. சுருக்குக.
    (i) (2a+3b+4c)(4z2+9b2+16c2-6ab-12bc-8ca)
    (ii) (x-2y+3z)(x2+4y2+9z2+2xy+6yz-3xz)

  21. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
    (i) 27x3+125y3
    (ii) 216m3-343n3
    (iii) 2x4-16xy3
    (iv) 8x3+27y3+64z3-72xyz

  22. பின்வருவனவற்றைக் காரணிப்படுத்துக.
    a3+b3-3ab+1

  23. வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ. தொலைவில் 30 செ.மீ. நீளமுள்ள நாண் வரையப்பட்டுள்ளது எனில், வட்டத்தின் ஆரம் காண்க.

  24. பின்வரும் எண்களுக்கு முகடு காண்க 17, 18, 20, 20, 21, 21, 22, 22

  25. பகுதி-  

    ஏதேனும் 8 வினாக்களுக்கு விடையளி :

    8 x 3 = 24
  26. வெண்படங்களைப் பயன்படுத்தி A\(\cap \)(BUC) = (A\(\cap \)B)U(A\(\cap \)C) என்பதைக் சரிபார்க்க.

  27. A = { b, c, e, g, h } , B = { a, c, d, g, i } மற்றும் C = { a, d, e, g, h } எனில்  A - ( B⋂C) = (A - B) ∪ (A-C) எனக்காட்டுக.

  28. 600 குடும்பங்கள் உள்ள ஒரு குடியிருப்பில் \(\frac { 3 }{ 5 } \) பங்கு துள்ளுந்து(Scooter), \(\frac { 1 }{ 3 } \) பங்கு மகிழுந்து(car), \(\frac { 1 }{ 4 } \) பங்கு மிதிவண்டி(bicycle) வைத்துள்ளனர். 120 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மகிழுந்தும், 86 குடும்பங்கள் மகிழுந்து மற்றும் மிதிவண்டியும், 90 குடும்பங்கள் துள்ளுந்து மற்றும் மிதிவண்டியும் \(\frac { 2 }{ 15 } \) பங்கு குடும்பங்கள் மூன்று வகை வாகனங்களையும் வைத்திருக்கிறார்கள் எனில்,
    (i) குறைந்தது இரண்டு வகை வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை,
    (ii) எந்த ஒரு வாகனமும் வைத்திருக்காத குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை காண்க.

  29. பகுதியை விகிதப்படுத்திச் சுருக்குக \({5\sqrt{3}+\sqrt{2}\over \sqrt{3}+\sqrt{2}}\)

  30. அறிவியல் குறியீட்டில் எழுதுக.
    (i) 9768854
    (ii) 0.04567891
    (iii) 72006865.48

  31. 2x- 6x+ mx + 4 இன் ஒரு காரணி (x-2)எனில், m இன் மதிப்பு காண்க.

  32. a2+b2+c2-ab-bc-ca=\({1\over2}[(a-b)^2+(b-c)^2+(c-a)^2]\)என நிறுவுக.

  33. x3 + 13x2 +32x +20 ஐ நேரிய காரணிகளாகக் காரணிப்படுத்துக.

  34. LM =7.5 செ.மீ, MN= 5 செ.மீ மற்றும் LN =8 செ.மீ அளவுகளுக்கு \(\triangle LMN\) வரைந்து அதன் நடுக்கோட்டு மையத்தை குறிக்கவும்.

  35. PQ= 5 செ.மீ, PR = 6 செ.மீ மற்றும் \(\angle QPR=60°\) அளவுகளுள்ள  \(\triangle PQR\) வரைக. மேலும் நடுக்கோட்டு மையத்தைக் குறிக்கவும்.

  36. ஒரு குடும்பத்தில் உள்ள 4 நபர்களின் எடைகளின் சராசரி 60கி.கி. அவர்களில் மூவரின் எடைகள் 56கி.கி, 68கி.கி, மற்றும் 72கி.கி எனில் நான்காமவரின் எடையைக் காண்க.

  37. கீழ்க்காணும் தரவுகளுக்கு இடைநிலை அளவு காண்க 36, 44, 86, 31, 37, 44, 86, 35, 60, 51

  38. ஒரு வகுப்பில் தொகுத்தறி மதிப்பீட்டில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்கு இடைநிலை அளவு காண்க.

    பிரிவு இடைவெளி  0-10 10-20 20-30 30-40 40-50 50-60
    மாணவர்களின் எண்ணிக்கை 2 7 15 10 11 5
  39. பகுதி-

    ஏதேனும் ஒன்றினுக்கு  விரிவான விடையளி :

    2 x 5 = 10
  40. வட்ட நாற்கரம் PQRS இல் \(\angle PSR\) =70o மற்றும் \(\angle QPR \) =40o எனில், \(\angle PRQ \) ஐக் காண்க.

  41. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் xo மற்றும் yo இன் மதிப்பைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு கணிதம் அரையாண்டு மாதிரி வினாத்தாள் (9th maths Half Yearly Model Question)

Write your Comment