Important Question Part-V

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    33 x 1 = 33
  1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

    (a)

    கொரில்லா

    (b)

    சிம்பன்ஸி

    (c)

    உராங் உட்டான் 

    (d)

    பெருங்குரங்கு

  2. எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி _________ எனப்படுகிறது.

    (a)

    கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

    (b)

    பிறைநிலப் பகுதி

    (c)

    ஸோலோ ஆறு

    (d)

    நியாண்டர் பள்ளத்தாக்கு

  3. கூற்று: தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
    காரணம்: நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது
    அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    இ) கூற்று சரி; காரணம் தவறு.
    ஈ) கூற்றும் காரணமும் தவறானவை .

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  4. கூற்று : பொ.ஆ.மு.3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகர் கல்வெட்டுக் குறிப்புகள் அவரது பேரரசுக்கு வெளியே இருந்த சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.
    காரணம்: தமிழகத்தைச் சேர்ந்த சேர்ந்த பழங்கால அரசர்கள் அரசியல்நோக்கில் அவர்களின் ஆட்சியை இரும்புக்காலத்தில் துவக்கினார்கள்.
    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது
    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.
    கூற்று சரி; காரணம் தவறு.
    கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  5. சுமேரியர்களின் எழுத்துமுறை ______ ஆகும்

    (a)

    பிக்டோகிராபி

    (b)

    ஹைரோகிளிபிக்

    (c)

    சோனோகிராம்

    (d)

    க்யூனிபார்ம்

  6. பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

    (a)

    சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

    (b)

    பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

    (c)

    சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

    (d)

    பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

  7. கூற்று: மெசபடோமிய நாகரிகத்தின் அஸிரியர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் சமகாலத்தவர் ஆவர்.
    காரணம்: அஸிரிய ஆட்சியாளரின் ஆவணம் ஒன்று மெலுஹாவிலிருந்து வந்த கப்பல்கள் பற்றி கூறுகின்றது.
    அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக் குகிறது.
    ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை .
    இ) கூற்று சரி; காரணம் தவறு.
    ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

    (a)

    கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

    (b)

    கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

    (c)

    கூற்று சரி; காரணம் தவறு

    (d)

    கூற்றும் காரணமும் தவறானவை

  8. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

    (a)

    கரிகாலன்

    (b)

    முதலாம் இராஜராஜன்

    (c)

    குலோத்துங்கன்

    (d)

    முதலாம் இராஜேந்திரன்

  9. வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ___________ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது

    (a)

    மஹாஜனபதங்கள்

    (b)

    கனசங்கங்கள்

    (c)

    திராவிடம்

    (d)

    தட்சிணபதா

  10. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

    (a)

    புத்தர்

    (b)

    மகாவீரர்

    (c)

    லாவோட்சே

    (d)

    கன்ஃபூசியஸ்

  11. புவியினுள் உருகிய இரும்பைக் கொண்ட அடுக்கை __________ என்று அழைக்கின்றோம்.

    (a)

    கருவம்

    (b)

    வெளிக்கரு

    (c)

    கவசம்

    (d)

    மேலோடு

  12. பாறைக்குழம்பு காணப்படும் அடுக்கு _____________ .

    (a)

    புவிமேலோடு

    (b)

    கவசம்

    (c)

    கருவம்

    (d)

    மேற்கண்ட எதுவுமில்லை

  13. புவித்தட்டுகள் நகர்வதால் ஏற்படும் அழுத்தம் மற்றும் இறுக்கத்தின் காரணமாக ஏற்படும் விரிசல் _____________ எனப்படும் 

    (a)

    மடிப்பு

    (b)

    பிளவு

    (c)

    மலை

    (d)

    புவிஅதிர்வு

  14. புவி அதிர்வு உருவாகும் புள்ளி _____________ என்று அழைக்கப்படுகிறது.

    (a)

    மேல்மையம்

    (b)

    கீழ்மையம்

    (c)

    புவி அதிர்வு அலைகள்

    (d)

    புவி அதிர்வின் தீவிரம்

  15. பாறைகளின் சிதைவுறுதலும் அழிதலும் ___________ என்று அழைக்கப்படுகிறது

    (a)

    வானிலைச் சிதைவு

    (b)

    அரித்தல்

    (c)

    கடத்துதல்

    (d)

    படியவைத்தல்

  16. சுண்ணாம்புப் பாறை நிலத்தோற்றங்கள் உருவாவதற்கு காரணம்

    (a)

    பனியாறு

    (b)

    காற்று

    (c)

    கடல் அலைகள்

    (d)

    நிலத்தடி நீர்

  17. கடல் தூண்கள் உருவாவதற்குக் காரணம் ________________

    (a)

    கடல் அலை அரித்தல்

    (b)

    ஆற்று நீர் அரித்தல்

    (c)

    பனியாறு அரித்தல்

    (d)

    காற்றின் படியவைத்தல்

  18. கீழ்க்கண்டவற்றில் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம்?

    (a)

    ஆசியா

    (b)

    தக்காண பீடபூமி 

    (c)

    குலு பள்ளத்தாக்கு

    (d)

    மெரினா கடற்கரை

  19. ________ உயிர்வாழ இன்றியமையாத வாயுவாகும்.

    (a)

    ஹீலியம்

    (b)

    கார்பன் – டை ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    மீத்தேன்

  20. _______________ வானொலி அலைகளை பிரதிபலிக்கிறது.

    (a)

    வெளியடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மீள் அடுக்கு

  21. _______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

    (a)

    சூரியன்

    (b)

    சந்திரன்

    (c)

    நட்சத்திரங்கள்

    (d)

    மேகங்கள்

  22. அனைத்து வகை மேகங்களும் _______________ ல் காணப்படுகிறது

    (a)

    கீழடுக்கு

    (b)

    அயன அடுக்கு

    (c)

    இடையடுக்கு

    (d)

    மேலடுக்கு

  23. _______________ செம்மறி ஆட்டு மேகங்கள் என்று அழைக்கப்படுகிறது

    (a)

    இடைப்பட்ட திரள் மேகங்கள்

    (b)

    இடைப்பட்ட படை மேகங்கள்

    (c)

    கார்படை மேகங்கள்

    (d)

    கீற்றுப்படை மேகங்கள்

  24. முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

    (a)

    சிறுகுழு ஆட்சி

    (b)

    மதகுருமார்களின் ஆட்சி

    (c)

    மக்களாட்சி

    (d)

    தனிநபராட்சி

  25. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

    (a)

    இந்தியா

    (b)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

    (c)

    பிரான்ஸ்

    (d)

    வாட்டிகன்

  26. மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    (a)

    நாடாளுமன்றம்

    (b)

    மக்கள்

    (c)

    அமைச்சர் அவை

    (d)

    குடியரசு தலைவர்

  27. உலகிலேயே மிகப் பெரிய மக்களாட்சி நாடு

    (a)

    கனடா

    (b)

    இந்தியா

    (c)

    அமெரிக்க ஐக்கிய

    (d)

    சீனா நாடுகள்

  28. அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

    (a)

    சமூகச் சமத்துவம்

    (b)

    பொருளாதார சமத்துவம்

    (c)

    அரசியல் சமத்துவம்

    (d)

    சட்ட சமத்துவம்

  29. Section - II

    10 x 2 = 20
  30. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

  31. விலங்குகளை மனிதன் பழக்கிய நிகழ்வு மனித வரலாற்றில் ஒரு மைல் கல் ஆகும் – விளக்கு

  32. எகிப்தியர்கள் கலை கட்டடக்கலையில் திறன் பெற்றவர்கள் - விளக்குக

  33. சீனப்பெருஞ்சுவர் பற்றி குறிப்பு வரைக.

  34. சுண்ணாம்பு பாறைப் பகுதிகளில் மேற்பரப்பில் வழிந்தோடும் நீரை விட நிலத்தடி நீர் அதிகம். ஏன்?

  35. வெப்பத்தை அளக்கும் அளவைகள் யாவை?

  36. துருவக் கீழைக்காற்றுகள் மிகக் குளிர்ந்தும், வறட்சியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன?

  37. மழைப்பொழிவின் வகைகள் யாவை?

  38. சர்வாதிகாரத்தின் கீழ் சமத்துவத்திற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா?அத்தகைய நாட்டில் பொதுமக்கள் கருத்து பற்றி என்ன அணுகுமுறை இருக்கும்?

  39. Section - III

    7 x 5 = 35
  40. விவசாயம், பானை  செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.

  41. தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் சீனத்தின் தாக்கம் எந்தளவிலானது என்பதைக் கூறு

  42. கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக்கூறு

  43. புவியின் அகச்செயல் முறைகள் மற்றும் புறச்செயல் முறைகள் குறித்து எழுதுக

  44. காற்று படியவைத்தல் செயலினை விவரி.

  45. நிலையான காற்றுகளின் வகைகளை விளக்குக

  46. இந்தியாவில் மக்களாட்சி வெற்றிகரமாகச் செயல்படத் தேவையான நிலைமைகளை விளக்குக

  47. Section - IV

    1 x 10 = 10
  48. உலக வரைபடத்தில் கீழ்க்கண்டவற்றை குறிக்கவும்.
    அ). பசிபிக் நெநெருப்பு வளையம்
    ஆ) புவி அதிர்ச்சி மண்டலம் (ஏதேதேனும் இரண்டு)
    இ) செயல்படும் எரிமலைகள் இரண்டு
    ஈ) இமயமலை மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர்கள்
    உ) கிழக்கு ஆப்பிரிக்காவின் பிளவுப்பள்ளத்தாக்கு

  49. Section - V

    9 x 3 = 27
  50. தமிழ் அரசர்கள் மௌரிய அரசின் அதிகாரத்துக்கு உட்படாமல் இருந்தார்கள் – இந்தக் கூற்றுக்கு உன் விளக்கம் என்ன?

  51. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  52. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  53. அஜாதசத்ருவைப் பற்றிக் கூறு?

  54. இந்தியாவில் காணப்படும் ஏதேனும் நான்கு சுண்ணாம்புப்பாறை பிரதேசங்களை பட்டியலிடுக

  55. காற்றின் அரித்தல் செய்கையால் உருவாக்கப்படும் நிலத்தோற்றங்களை பட்டியலிடு.

  56. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  57. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் முக்கிய வினா விடைகள் 2019 - 2020 ( 9th Standard Social Science Tamil Medium Important questions 2019-2020 )

Write your Comment