p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. போராக்ஸின் நீர்க் கரைசலானது _______.

    (a)

    நடுநிலைத் தன்மை உடையது 

    (b)

    அமிலத் தன்மை உடையது 

    (c)

    காரத் தன்மை உடையது 

    (d)

    ஈரியல்புத் தன்மை கொண்டது 

  2. பின்வருவனவற்றுள் எது போரேன் அல்ல? 

    (a)

    B2H6

    (b)

    B3H6

    (c)

    B4H10

    (d)

    இவை எதுவுமல்ல 

  3. C60 என்ற வாய்ப்பாடுடைய ஃபுல்லரீனில் உள்ள கார்பன் ________.

    (a)

    sp3 இனக்கலப்புடையது 

    (b)

    sp இனக்கலப்புடையது 

    (c)

    sp2 இனக்கலப்புடையது 

    (d)

    பகுதியளவு spமற்றும் பகுதியளவு  sp3 இனக்கலப்புடையது 

  4. பின்வருவனவற்றுள் sp2 இனக்கலப்பு இல்லாதது எது? 

    (a)

    கிராபைட் 

    (b)

    கிராஃபீன் 

    (c)

    ஃபுல்லரீன் 

    (d)

    உலர்பனிக்கட்டி (dry ice)

  5. பின்வருவனவற்றுள் எவ்வரிசையில் +1 ஆக்சிஜனேற்ற நிலையின் நிலைப்புத் தன்மை அதிகரிக்கின்றது.

    (a)

    Al < Ga < In < Tl

    (b)

    Tl < In < Ga < Al

    (c)

    In < Tl < Ga < Al

    (d)

    Ga < In < Al < Tl

  6. 5 x 2 = 10
  7. p தொகுதி தனிமங்களில் முதல் தனிமத்தின் முரண்பட்ட பண்புகள் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  8. போரான் ஹைட்ரஜனுடன் நேரடியாக வினை புரிவதில்லை. BF யிலிருந்து டைபோரேன்னைத் தயாரிக்கும் ஏதேனும் ஒரு முறையினைத் தருக. 

  9. போராக்ஸின் பயன்களைத்  தருக.

  10. ஃபிஷ்ஷர்-ட்ரோப்ஷ் முறை பற்றி சிறுகுறிப்பு வரைக.

  11. CO மற்றும் COன் வடிவங்களைத் தருக.

  12. 5 x 3 = 15
  13. சிலிக்கோன்களின் பயன்களைத் தருக.

  14. AICI3 ஆனது லூயி அமிலமாக செயல்படுகிறது. இக்கூற்றினை நிறுவுக.

  15. டைபோரேனின் வடிவமைப்பினை விவரிக்க.

  16. ஹைட்ரோ போரோ ஏற்ற வினை பற்றி குறிப்பு வரைக.

  17. p-தொகுதி தனிமங்களின் உலோகப் பண்பினை பற்றி குறிப்பு வரைக.

  18. 4 x 5 = 20
  19. போரேட் உறுப்பை எவ்வாறு கண்டறிவாய்?

  20. போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்? 

  21. நான்காவது வரிசை கார உலோகத்தைக் கொண்டுள்ள (A) என்ற இரட்டை உப்பை 500K வெப்பநிலைக்கு வெப்பப்படுத்த (B) கிடைக்கிறது. (B) ன் நீர்க்கரைசல் Bacl2 உடன் வெண்மை நிற வீழ்ப்படிவைத் தருகிறது. மேலும் அலிசரினுடன் சிவப்பு நிற சேர்மத்தைத் தருகிறது. A மற்றும் B ஐக் கண்டறிக.

  22. CO ஒரு ஒடுக்கும் காரணி. ஒரு எடுத்துக்காட்டுடன் இக்கூற்றை நிறுவுக.

*****************************************

Reviews & Comments about p-தொகுதி தனிமங்கள் - I மாதிரி வினாத்தாள்

Write your Comment