T1 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள்

8th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. காகிதம் எரிதல் என்பது ஒரு _____ மாற்றம்.

  (a)

  இயற்பியல்

  (b)

  வேதியியல்

  (c)

  இயற்பியல் மற்றும் வேதியியல்

  (d)

  நடுநிலையான

 2. சுண்ணாம்புக்கல் ______ ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது.

  (a)

  கால்சியம் குளோரைடு

  (b)

  கால்சியம் கார்பனேட்

  (c)

  கால்சியம் நைட்ரேட்

  (d)

  கால்சியம் சல்பேட்

 3. கீழ்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?

  (a)

  வெப்பம்

  (b)

  ஒளி

  (c)

  மின்சாரம்

  (d)

  வினைவேக மாற்றி

 4. _____ பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.

  (a)

  கார்பன் டை ஆக்சைடு

  (b)

  மீத்தேன்

  (c)

  குளோரோ புளோரோ கார்பன்கள்

  (d)

  இவை அனைத்தும்

 5. மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் ______ ஐ உருவாக்குகின்றன.

  (a)

  Acid rain

  (b)

  base rain

  (c)

  heavy rain

  (d)

  neutral rain

 6. 5 x 1 = 5
 7. ஒரு வேதிவினையில் வினைபடுபொருள்கள் →  ____

  ()

  விளைபொருள்கள்

 8. ஒளிச்சேர்க்கை என்பது _________ முன்னிலையில் நிகழும் ஒரு வேதிவினையாகும்.

  ()

  ஒளி 

 9. _____ யூரியா தயாரிப்பதில் அடிப்படைப் பொருளாக உள்ளது.

  ()

  அம்மோனியா

 10. ______ ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றும் வேதிப்பொருள் எனப்படும்.

  ()

  வினைவேக மாற்றி 

 11. வெட்டப்பட்ட காய்கறிகள், பழங்கள் பழுப்பாக மாறக் காரணம் ________ என்ற நொதியாகும்.

  ()

  பாலிபீனால் ஆக்சிடேஸ் (அ) டைரோசிநேஸ் 

 12. 5 x 1 = 5
 13. ஒரு வேதிவினை என்பது தற்காலிக வினையாகும்.

  (a) True
  (b) False
 14. ஒரு வேதிவினையின் பொழுது நிறமாற்றம் நிகழலாம்.

  (a) True
  (b) False
 15. சுட்ட சுண்ணாம்பிலிருந்து நீற்றுச்சுண்ணாம்பு உருவாவது ஒரு வெப்பக்கொள் வினையாகும்.

  (a) True
  (b) False
 16. CFC என்பது ஒரு மாசுபடுத்தியாகும்.

  (a) True
  (b) False
 17. சில காய்கறிகள், பழங்களை வெட்டி வைத்தால் பழுப்பு நிறமாக மாறுவது மெலனின் உருவாதலினால் ஆகும்.

  (a) True
  (b) False
 18. 5 x 2 = 10
 19. ஒரு வேதிவினை நிகழ்வதற்குத் தேவையான பல்வேறு நிபந்தனைகளை எழுதுக.

 20. வினைவேக மாற்றம் என்பதை வரையறுக்க.

 21. மாசுபடுதல் என்றால் என்ன?

 22. ஒரு வேதிவினையில் வினைவேக மாற்றியின் பங்கு என்ன?

 23. குமார் என்பவர் வீடு கட்டத் திட்டமிடுகிறார். கட் டுமானப் பணிகளுக்கான இரும்புக் கம்பிகளை வாங்குவதற்காக அவர் தனது நண்பர் ரமேஷ் உடன் அருகில் உள்ள இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடைக்குச் செல்கிறார். கடைக்காரர் முதலில் புதிதாக , நல்ல நிலையில் உள்ள இரும்புக் கம்பிகளைக் காட்டுகிறார். பிறகு சற்று பழையதாகவும், பழுப்பு நிறத்திலும் உள்ள கம்பிகளைக் காட்டுகிறார். புதியதாக உள்ள இரும்புக் கம்பிகளின் விலை அதிகமானதாக இருந்தது. மேலும் அந்த விற்பனையாளர் சற்று பழைய கம்பிகளுக்கு விலையில் நல்ல சலுகை தருவதாக் கூறினார். குமாரின் நண்பர் விலை மலிவாக உள்ள கம்பிகளை வாங்க வேண்டாம் என வலியுறுத்தினார்.
  அ) ரமேஷின் அறிவுரை சரியானதா?
  ஆ) ரமேஷின் அறிவுரைக்கான காரணம் என்ன?
  இ) ரமேஷ் வெளிப்படுத்திய நற்பண்புகள் யாவை?

 24. 5 x 3 = 15
 25. கேக்குகள் தயாரிப்பில் ஈஸ்ட்டின் பங்கு என்ன என்பதை விளக்குக.

 26. வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளிவிடும் புகையால் அமில மழை உருவாகிறது என்பதை விவாதிக்க.

 27. துருப்பிடித்தல் இரும்பு பொருட்களுக்கு நல்லதா என்பதை விளக்குக?

 28. அனைத்து பழங்களும், காய்கறிகளும் பழுப்பாதல் நிகழ்வுக்கு உள்ளாகின்றனவா?

 29. கொடுக்கப்பட்டுள்ள நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகளை வேதிவினை நிகழ தேவைப்படும் நிபந்தனைகளின் அடிப்படையில் வகைப்படுத்துக.
  அ) விழாக்காலங்களில் பட்டாசு வெடித்தல்
  ஆ) சுட்ட சுண்ணாம்புடன் நீர் சேர்த்து நீற்றுச்சுண்ணாம்பாக்குதல்
  இ) வெகுநேரம் காற்றுபடும்படி வைக்கும்பொழுது வெள்ளிபொருள்கள் கருமை நிறமாதல்.
  ஈ) காப்பர் பாத்திரங்களில் பச்சை நிற படிமம் தோன்றுதல்.

 30. 2 x 5 = 10
 31. வேதி வினைகளால் எவ்வாறு உணவுப்பொருள்கள் கெட்டுப் போகின்றன என்பதை விளக்குக?

 32. வேதிவினை நடைபெறுவதற்கான ஏதேனும் மூன்று நிபந்தனைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about T1 - நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள்

Write your Comment