" /> -->

UNIT EXAM 1

12th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

USE BLUE OR BLACK PEN ONLY

MANOHARAN

PG COMMERCEE

Time : 00:45:00 Hrs
Total Marks : 25

    PART A

    5 x 1 = 5
  1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

    (a)

    நிறுமம்

    (b)

    அரசு

    (c)

    சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

    (d)

    பன்னாட்டு நிறுவனங்கள்

  2. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

    (a)

    தொடக்க முதல் கண்டறிய

    (b)

    இறுதி முதல் கண்டறிய

    (c)

    அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

    (d)

    அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

  3. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்

    (a)

    நட்டம்

    (b)

    ரொக்கம்

    (c)

    முதல்

    (d)

    இலாபம்

  4. உரிமையாளரின் சொத்துகள் ரூ. 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ. 21,000 எனில் அவருடைய முதல்தொகை

    (a)

    ரூ. 85,000

    (b)

    ரூ. 1,06,000

    (c)

    ரூ. 21,000

    (d)

    ரூ. 64,000

  5. கடனாளிகள் தொடக்க இருப்பு: ரூ. 30,000, பெற்ற ரொக்கம்: ரூ. 1,00,000, கடன் விற்பனை: ரூ. 90,000; கடனாளிகள் இறுதி இருப்பு:?

    (a)

    ரூ. 30,000

    (b)

    ரூ. 1,30,000

    (c)

    ரூ. 40,000

    (d)

    ரூ. 20,000

  6. PARTB

    ANSWER ALL QUESTIONS

    3 x 2 = 6
  7. பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000
    ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000
    அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 40,000
  8. பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:

    விவரம் ரூ.
    2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000
    உள்திருப்பம் 15,000
    வாராக்கடன் 5,000
    2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000
    ரொக்க விற்பனை 1,40,000
  9. நிலை அறிக்கை என்றால் என்ன?

  10. PART C

    ANSWER ALL QUESTIONS

    3 x 3 = 9
  11. பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் கண்டறியவும்:

    விவரம் ரூ.
    31.3.2019 அன்று இறுதி முதல் 1,90,000
    அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 50,000
    அவ்வாண்டின் எடுப்புகள் 30,000
    1.4.2018 அன்று தொடக்க முதல் ?
    31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் நட்டம் 40,000
  12. பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:

    விவரம் ரூ.
    2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் 75,000
    2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000
    கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 3,70,000
    செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது 1,00,000
    கொள்முதல் திருப்பம் 15,000
    ரொக்கக் கொள்முதல் 3,20,000
    2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 50,000
    2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000

     

  13. பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.

    விவரம் ரூ.
    2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 1,30,000
    அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் பெற்றது 4,20,000
    விற்பனைத் திருப்பம் 35,000
    வாராக்கடன் 15,000
    2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 2,00,000
    ரொக்க விற்பனை 4,60,000
  14. PART D

    2 x 5 = 10
    1. இராகேஷ் என்பவரின் பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

      விவரம் 31.3.2018
      ரூ.
      31.3.2019
      ரூ.
      சரக்கிருப்பு 2,20,000 1,60,000
      கடனாளிகள் 5,30,000 6,40,000
      வங்கி ரொக்கம் 60,000 10,000
      இயந்திரம் 80,000 80,000
      பற்பல கடனீந்தோர் 3,70,000 4,20,000

      பிற தகவல்கள்: 

      விவரம் ரூ. விவரம் ரூ.
      வாடகை செலுத்தியது 1,20,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 12,50,000
      பெற்ற தள்ளபடி 35,000 எடுப்புகள் 1,00,000
      அளித்த தள்ளுபடி 25,000 ரொக்க விற்பனை 20,000
      கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 11,00,000 1.4.2018 அன்று முதல் 5,20,000
    2. அகமது முறையான கணக்கேடுகளைப் பராமரிப்பதில்லை. 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

      விவரம் 1.4.2017 31.3.2018
      ரூ. ரூ.
      வங்கி இருப்பு 14,000 (வ) 18,000 (ப)
      கைரொக்கம் 800 1,500
      சரக்கிருப்பு 12,000 16,000
      கடனாளிகள் 34,000 30,000
      பொறித்தொகுதி 80,000 80,000
      அறைகலன் 40,000 40,000
      கடனீந்தோர் 60,000 72,000

      அகமது தனது சொந்தப் பயனுக்காக ரூ. 40,000 எடுத்துக்கொண்டார். தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக அவர் ரூ. 16,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்க வேண்டும். பொறித்தொகுதி மீது 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about UNIT EXAM 1

Write your Comment