SSLC Public Official Model Question 2019

10th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:15:00 Hrs
Total Marks : 75
  15 x 1 = 15
 1. தலைமுறை, தலைமுறையாகப் பண்புகள் கடத்துதலைப் பாரம்பரியம் எனப்படும். மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய பட்டாணிச் செடியில், மரபுப்பண்பிற்கான காரணிகள் ...................ல் காணப்படுகிறது?

  (a)

  டி.என்.ஏ

  (b)

  ஆா்.என்.ஏ

  (c)

  புரதம்

  (d)

  சைட்டோபிளாசம்

 2. குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு. குன்றல் பகுப்பு நடைபெறும் செல்கள்..................

  (a)

  இனப்பெருக்க எபிதீலியல் செல்கள்

  (b)

  தொடு  உணர்வு எபிதீலியல் செல்கள்

  (c)

  க்யூபாய்டல் எபிதீலியல் செல்கள்

  (d)

  தூண் எபிதீலியல் செல்கள்

 3. மெல்லிய சுவரை உடைய நகரும் தன்மையற்ற ஸ்போர்கள்________என அழைக்கப்படுகிறது

  (a)

  ஸ்பைரோகைரா

  (b)

  ஏபிளானோஸ்போர்

  (c)

  சூஸ்போர்

  (d)

  ஏகைனீட்டு

 4. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை--------------

  (a)

  98.4 - 98.6 \(℉\)

  (b)

  96.6 - 96.8 \(℉\)

  (c)

  94.4 - 98.6 \(℉\)

  (d)

  98.4 - 99.6 \(℉\)

 5. தற்சார்பு ஊட்டமுறைக்குத் தேவைப்படுவது.

  (a)

  COமற்றும் நீர்

  (b)

   பச்சையம் 

  (c)

   சூரிய ஒளி

  (d)

  இவை அனைத்தும் 

 6.  நீரைக் கரைப்பனாகக் கொண்டு கரைசல் நீர்க் கரைசல் ஆகும்.கார்பன்டைசல்பைடைக் கரைப்பானாகக் கொண்ட கரைசல் ................................... ஆகும்.

  (a)

  நீர்க் கரைசல்

  (b)

  நீரற்ற கரைசல் 

 7. ..........................ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையைப் பெற்றுள்ளன.

  (a)

  ஐசோபார்கள்

  (b)

  ஐசோடோன்கள்

  (c)

  ஐசோடோப்கள்

  (d)

  நிறை எண்

 8. வலிமை குறைந்த அமிலம் எது?

  (a)

  HCOOH

  (b)

  HNO3

  (c)

  CH3COOH

  (d)

  H2SO4

 9. மூன்றாவது வரிசையில் தனிமங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை அலோகங்கள் உள்ளன?

  (a)

  8

  (b)

  5

 10.  அல்லது அமிலம் கலந்த எத்தனாலை காரங்களாந்த kmNo4 கலந்த K2Cr2O7 கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்யும் போது உருவாகும் அமிலம்  _________ 

  (a)

  புரோப்பனாயிக் அமிலம்

  (b)

  பியூட்டனாயிக் அமிலம்

  (c)

  மெத்தனாயிக் அமிலம்

  (d)

  எத்தனாயிக் அமிலம்

 11. திருகு அளவியின் தலைக்கோல், சுழிப்பிரிவு, புரிக்கோலின் வரை கோட்டிற்கு கீழ் அமைகிறது, எனில் சுழிப்பிழை ..................

  (a)

  நேர்குறி

  (b)

  எதிர்குறி

  (c)

  இல்லை

 12. சந்திராயன் I எடுத்துச் சென்ற சில பயன் சுமைகளின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.ஆனால் சில பெயர்கள் அதோடு தொடர்பில்லாதவை.தொடர்பில்லாத பயன் சுமைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

  (a)

  CIZS, LLRI, RADOM

  (b)

  MNI - SAR, TMC

  (c)

  SAR, IIRS, TMC - 2, CLASS

 13. கிலோவாட் மணி என்பது ...................ன் அலகு ஆகும்.

  (a)

  மின்னழுத்த வேறுபாடு 

  (b)

  மின்திறன்

  (c)

  மின்னாற்றல் 

  (d)

  மின்னூட்டம் 

 14. மின்னழுத்த வேறுபாட்டை அளக்க பயன்படும் கருவி ________ 

  (a)

  வோல்ட் மீட்டர் 

  (b)

  வாட் மீட்டர் 

  (c)

  ஓம் மீட்டர் 

  (d)

  இவை ஏதுமில்லை 

 15. ஆடியில் உருவாகும் உருப்பெருக்கம் \(+{1\over 3}\) எனில் ,அந்த ஆடியின் வகை 

  (a)

  குழி ஆடி

  (b)

   குவி ஆடி

  (c)

  சமதள ஆடி

 16. 20 x 2 = 40
 17. தவறுகளைச் சுட்டுதல் வாக்கியத்திலுள்ள பிழைகளைத் திருத்துக 
  இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் லாமார்க் 

 18. பொருத்துக.

  அ.மரபுப் பொறியியல் உயிரியல் தூண்டலை மின்தூண்டலாக மாற்றுதல்
  ஆ.குளோன் டி.என்.ஏ-வில் மாற்றம் செய்தல்
  இ.ஸ்டெம்செல் மரபு பண்புகளில் ஒத்த உயிரிகளை உருவாக்குதல்
  ஈ.உயிர் உணரி மாறுபாடு அடையாத செல் குழுமம்
 19. ஒரு சுகாதார அலுவலர் அப்பகுதியில்  வாழும்  மக்களிடம் ஒரே ஊசியைப் பயன்படுத்தி பலருக்குப் பச்சை குத்துதலையும், முடித்திருத்தங்களில் ஒரே பிளேடு/கத்தி பலருக்குப் பயன்படுத்தி சவரம் செய்தல், முடிதிருத்துதல் வேண்டாம் எனவும் அறிவுறுத்துகிறார். இவற்றின் மூலம் எந்தக் கொடிய நோய் பரவாமல் தடுக்கலாம்? மேலும் நீவிர் அறிந்த தடுப்பு முறைகளை கூறுக.

 20. காசநோய் மற்றும் டைபாய்டு பாக்டீரியாவினால் உண்டாகும் நோய்களாகும்.குச்சி வடிவ எண்ணற்ற கசை இழைகளுடன் கூடிய சால்மோனல்லா டைஃப்பி என்னும் பாக்டீரியா மூலம் காசநோய் உண்டாகிறது.இக்கூற்று சரியா?தவறா? தவறாக இருப்பின் திருத்தி எழுதுக

 21. கீழுள்ள படத்தை வரைந்து, குறிப்பிட்டுள்ள பாகங்களைப் பெயரிடுக.
  தைராய்டு, மூச்சுக்குழல், குரல்வளை.

 22. வரையறு - கருவுறுதல்.

 23. இரண்டகப் பிளத்தல் அல்லது இருசம்ப் பிரிவு என்றால் என்ன?

 24. வெவ்வேறு வாழ்விடங்களில் வாழ்கின்ற உயிரினங்கள் அந்தந்த வாழ்விடங்களுக்கு ஏற்றவாறு தக்கவாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், உடல் அமைப்புகளுடன் வாழ்கின்றன.  இதற்கு தகவமைப்பு என்று பெயர். பாலூட்டிகளின் சிறப்பான தகவமைப்பபினைத் தேர்ந்தெடுக்க.

  அ) கடல்வாழ் பாலூட்டியான திமிங்கலம், தனது உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்க பெற்றுள்ள தகவமைப்பு:- 
  (தடை பாலீன் தட்டுகளாக மாறியது / முன்கைகள்  துடுப்புகளாக மாறியது / தோலுக்கடியில் சேமிக்கப்பட்ட கொழுப்பு)
  ஆ) உணவை  கண்டரறிவதற்கு வௌவாலின் தகவமைப்பு :- ( முன்கைகள் இறக்கையாக மாறியது/ கால்கள் மூலமாக தலைகீழாகத் தொங்குதல் / பறத்தலின்போது உயிர் சுரத்தில் கீச்சிடும் ஒலி வெளிப்படுத்துதல்)

 25. மனிதனின் முன்கைகள் பொருள்களைப் பற்றிக் கொள்வதற்கும், எழுப்புவதற்கும்  பயன்படுகிறது.
  i. குதிரையின்   முன்னங்கால்களின் பயன்பட்டு யாது?
  ii. எலியின்  முன்னங்கால்களின் பயன்பட்டு யாது?

 26. தொட்டால் சிணுங்கித் தாவரத்தில் தொடும்போது ஏற்படும் மாற்றத்தினை விளக்குக.

 27. பின்வரும் பத்தியைப் படித்து தகுந்த விடையைக் கண்டறிந்து கோடிட்ட இடங்களை நிரப்புக 

  (தீங்கு விளைவிப்பது, கன உலோகங்கள் , கார்பன்-டைஆக்ஸைடு , கந்தக துகள்கள் ) 

  பாதரசம் ,யுரேனியம் ,தோரியம் ,ஆர்செனிக் ......கலந்த கலவையிலிருந்து வெளியேற்றப்படும். கழிவு பொருள்கள்  மனிதனுக்கு ....மட்டுமின்றி சூழ்நிலையையும் பாதிக்கின்றது .நிலக்கரியில் உள்ள ...........அமில மழை உருவாக காரணமாவதோடு மட்டுமல்லாமல் ,பசுமையக வாயு ..........வெளியேற்றப்பட்டு  காலநிலை மாறுபாட்டிருக்கும் புவி வெப்ப மாறுதலுக்குக்  காரணமாகிறது.

 28. உயிரி பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப் பயன்படும் தாவரங்கள் யாவை?

 29. கழிவு நீர் சுத்திகரிப்பில் உயரிய சீரமைப்பு என்றால் என்ன?


 30. மேற்கூறிய நிகழ்வில் சிறிது நேரம் கழித்து சேகர் நீர் இனிப்பாக மாறியதைக் கண்டறிந்தான்.
  இதற்கானக் காரணம் கூறுக.

 31. வினாக்களை எழுப்புதல்:
  கூழ்மக் கரைசலின் துகள்களை எவ்வாறு பார்க்க முடியும்?

 32. பின்வரும் கூற்றுகளில்  தவறைக் கண்டறிந்து திருத்துக.
  அ) S.T.P- ல் ஒரு வாயுவின் மோலார் பருமன் 22.4 செ.மீ
  ஆ) 2 х ஒப்பு மூலக்கூறு நிறை = ஆவி அடர்த்தி 
  இ) ஓர் அணு தனித்த நிலையில்  காணப்படுவது இல்லை
  ஈ) மூலக்கூறிலுள்ள அணுக்களின் விகிதம் முழுமையானது அல்லது எளிமையானது அல்லது நிர்ணயிக்க இயலாது.
  உ) H2O -ஓர் ஒத்த அணு மூலக்கூறு.

 33. கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் நான்கு தொகுதிகளையும் தொடர்புபடுத்துக.

  சேர்மம் மூலக்கூறு வாய்ப்பாடு வேதிப்பெயர் பயன்கள்
  1. சலவைசோடா \(CaOcl_2\) கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட் சிலைகள் செய்ய 
  2. சமையல் சோடா \(Na_2CO_3\) சோடியம் பைகார்பனேட்  கடினநீரை மென்மைப்படுத்த
  3. சலவைத்த்தூள் \(CaSO_4.{1\over 2} H_2O\) சோடியம் கார்பனேட்  கேக் தயாரிக்க 
  4. பாரிஸ் சாந்து \(NaHCO_3\) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு வெளுக்கப் பயன்படுகிறது 
 34. கரைசலின் ஹைட்ரஜன் அயனியின் செறிவு \(1\times10^-8\) M எனில்

  அ) இக்கரைசலின்  \(P^H\) மதிப்பு யாது? 
  ஆ) இக்கரைசலின்   \(P^OH\)  மதிப்பு யாது? 
  இ) இக்கரைசல் அமிலத்தன்மையுடையதா, காரத்தன்மையுடையதா என்பதை யூகித்துக் கூறுக.

 35. வினாக்களை எழுப்புதல் 
  அமிலங்களுக்கு காரத்துவம் என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.ஆசிட்டிக் அமிலம் எதனால் கரத்துவமுடையது என அறிகிறோம்?

 36. பின்வருவற்றிற்கு ஒரு வார்த்தையில் பதிலிடுக.
  அ) புவியிலிருந்து தாதுக்களை பிரித்தெடுக்கும் முறை. 
  ஆ) தாதுப் பொருள்களுடன் கலந்துள்ள மண் மாசுக்கள்.
  இ) உருகு நிலையைக் குறைக்க தத்துவுடன் சேர்க்கப்படும் பொருள் 
  ஈ) வறுத்த உலோக ஆக்ஸைடை உருக்கிய நிலையில் உலோகமாகக மாற்றும் ஓர் ஒடுக்க வினை.
  உ) குறைந்த வினைத்திறன் உள்ள உலோகங்கள் இயற்கையில் இவ்வாறு காணப்படுகின்றன.

 37. அலுமினியம் அடர் HCL மற்றும் அடர் H2S0உடன்  வினைபுரிகிறது .ஆனால் அடர் நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரிகிறது இல்லை உரிய காரணத்துடன் உன் விடையை எழுதுக.

 38. அல்கேன்கள், அல்கீன்கள் மற்றும் அல்கைன்களின் பொது வாய்ப்பாட்டைக் கூறுக.

 39. தவறுகளைச் சுட்டுதல் வாக்கியத்திலுள்ள பிழைகளைத் திருத்துக
  ஃபுல்லரீன்  40 கார்பன் அணுக்களைக் கொண்டதாகக் காணப்படும்

 40. ஆல்கேன்கள்,அல்கீன்கள் மற்றும் அல்கைகளின் பொதுவாய்ப்பாட்டைத் தருக 

 41. மீச்சிற்றளவை என்பது திருகு அளவியோடு தொடர்புடைய ஒரு முக்கியக் கருத்து ஆகும். திருகு அளவியின் மீச்சிற்றளவை என்பதன் பொருள் என்ன?

 42. தவறுகளைச் சுட்டுதல்/வாக்கியத்திலுள்ள பிழைகளை திருத்துக.
  சந்திராயன் 213 நாட்கள் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது திட்டமிடப்பட்ட இலக்குகளில் 75 சதவீதத்தை நிறைவு செய்தது

 43. நிலைமம்- வரையறுக்க 

 44. உந்தம் - வரையறுக்க.

 45. பின்வரும் வரைபடம் V மற்றும் I இன் தொடர்பைக் காட்டுகிறது.
  படத்திலிருந்து மின்னழுத்த வேறுபாடு 0.5 V மற்றும் 1.0 V உள்ளபோது V/I. -இன் மதிப்புகள் என்னவாக இருக்கும்?

 46. ஒரு மின்விளக்கு 220 V மின்னியற்றியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்னோட்டம் 0.50 A. எனில் மின் விளக்கின் திறன் யாது?

 47. AC மினியற்றியின் சூழல் அதிர்வெண்ணை இரட்டிப்பாகும்போது ஏற்படும் விளைவை விளக்குக.

 48. ஃபிளமிங் வலக்கை விதியைத் தருக.

 49. 4 x 5 = 20

 50. அ) இதில் ஓங்கு பண்பு ஒடுங்கு பண்பை குறிக்கவும் 
  ஆ )முதல் தலைமுறையில் இடைப்பட்ட உயரப் பண்புகள் காணப்படுகிறது, இக்கூற்று சரியானதா?
   

 51. ஒருவித்திலைத் தாவர விதையின் அமைப்பை விவரிக்க.

 52. நெப்ரானின் அமைப்பு பற்றிய விளக்கப்  படத்தினை உற்றுநோக்கவும்.

  i) அ முதல் ஊ வரை உள்ள பாகங்கள் எழுதுக. 
  ii) நெப்ரானின் முக்கிய செயல்பாடுகள் விளக்குக.

 53. நீரானது அனைத்து  உயிரினங்களுக்கும் தேவைப்படுகின்ற முக்கியமான  இயல்பான ஒரு பொருளாகும் .
  அ)  நீர் ஆதாரங்களில் மிகப் பெரியது எது?
  ஆ) நீர் கிடைக்கக் கூடிய வேறு ஆதாரங்கள் யாவை?
  இ)  நீரின் முதன்மை ஆதாரம் எது?
  ஈ)  உங்கள் வீட்டு நிலத்தடி நீரின் அளவை எம்முறைகளில் உயர்த்துவீர்கள்? 

 54. பின்வருவனவற்றிற்கு மோல்களின் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
  அ) 12.046 x1023 அணுக்களைக் கொண்ட தாமிரம்.
  ஆ 27.95 கி இரும்பு.
  இ) 1.51 x1023 மூலக்கூறுகளைக் கொண்ட CO2

 55. பின்வரும் வேதி வினைகளுக்குச் சரியான மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கொண்டு சமன் செய்யப்பட்ட சமன்பாட்டை எழுதுக.
  அ) நிக்கல் வினையூக்கியின் முன்னிலையில் ஈத்தீன் ஹைட்ரஜனுடன் வினை.
  ஆ) மீத்தேன் எரிதல் வினையின் போது கார்பன்டை ஆக்சைடு மற்றும் நீரையும் தருகிறது.
  இ) எத்தனாலின் ஹைட்ரஜன் நீக்க வினை.
  ஈ) எத்தனாயிக் அமிலத்தின் சோடியம் உப்பின் கார்பாக்ஸில் நீக்க வினை.

 56. நிலைம விதியை ஒரு சரியான எடுத்துக்காட்டுடன் விளக்குக.

 57. படத்தில் (அ) A மற்றும் D (ஆ) B மற்றும் D க்கு இடையே மின்தடை மதிப்பை கணக்கிடுக.

*****************************************

Reviews & Comments about 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 அறிவியல் மாதிரி வினாத்தாள் ( SSLC Science Public Exam March 2019 Official Model Question Paper )

Write your Comment